கால்டுவெல் + திராவிடம் > இனவரைவியல்

This entry is part [part not set] of 33 in the series 20100725_Issue

புதியமாதவி, மும்பை.



————————————————-

கால்டுவெல் திராவிடம் , திராவிடர் என்ற சொல்லை தன் ஆய்வு நூலில் பயன்படுத்துவதற்கான
காரணங்களை USE OF THE COMMON TERM ‘DRAVIDIAN’ என்ற தலைப்பில் பக்கம் 4 முதல் 9 வரை
பட்டியலிடுகிறார்.
அந்தப் பக்கத்திலிருந்து சில வரிகளை உங்கள் வாசிப்புக்காக தருகிறேன்.

* I have designed the languages now to be subjected to comparision by a common term, because of the essential
and distinctive grammatical characteristics which they all posses in common.

*One of the earliest terms used in sanskrit to designate the family seems to have been that of “Andhra-Dravida-bhasha’,
‘the telegu-tamil language or rather , perhaps ‘the language of the telegu and tamil countries. this term is used
by kumarila bhatta, the controversail brahmin writer of eminence, who is supposed to have live at the end of
7th century A.D.

*Varaha -mihira (A.D 404) regarded the term dravida as generic or specific.
he mentioned the pandya king, the king of kalinga & c but mentions the “dravida Kings’ in the plural.

*The more distinctively philological writers of a later period used tjhe term Dravida in what appaears to be substantially the
same sense as that in which I propse that it should be used.
இக்கருத்துக்கும் பிராகிருதி, பைசாச்சி- அரக்கர்களின் மொழி என்று வட இந்திய அறிஞர்களின்
கருத்துகளைத் தொகுத்து தருகிறார்.

*

*The word I have chosen is “Dravidian” from Dravida , the adjectival form of Dravida. This term , it is true,
has sometimes been used, and is still sometimes used, in almost as restricted a sense as that of Tamil
itself, so that though on the whole it is the best term i can find, I admit that is is not perfectly free from
ambiguity. It is term, however, which has already been used more or less distinctively by sanskrit philoligists,
as generic appellation for the sount indian peoples and their languages, and it is the only single term they seem
ever to have used in this manner. I HAVE THEREFORE , NO DOUBT OF THE PROPRIETY OF
ADOPTING IT.

*ஆதாரமாக சான்றுகளை அடுக்கித் தருகிறார்.
மனு – ( X 43, 44), மகாபாரதம், பாகவத புராணம், விஷ்ணுபுராணம்

இனவரைவியலின் ஆரம்பம்
—————————-

மாந்த இனத்தை வகைபாடு செய்தல்’ என்பதே ஐரோப்பியர் பல பகுதிகளைத் தம் காலனிய ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்த
காலக்கட்டத்தில் தான் ஆரம்பமானது. ஐரோப்பியரின் குடியேற்றப் பகுதிகளில் உள்ள மனிதர்களைப் படிப்பது என்பதில் இந்த ஆய்வு தொடங்கியது. தம் ஆளுகைக்குக் கீழ் வந்த புதிய நிலப்பரப்பின் தாவர வர்க்கத்தையும், விலங்கினங்களையும் படிப்பது போன்றே அங்குள்ள மனிதர்கள், மொழி, பண்பாடு, அம்மக்களின் கைக்கருவிகள், கைவினைப் பொருட்கள் ஆகியனவும் படிக்கப்பட்டன

பதினெட்டாம் நூற்றாண்டும், பத்தொன்பதாம் நூற்றாண்டும் மாந்தவியல் ஆய்வுகளைப் பொறுத்தவரை மிக முக்கியமானவை. உலக மானிட இனத்தைப் பெரும் பிரிவுகளாக, தனித் தனி இனங்களாகப் (Race) பிரித்தறிந்து, மாந்தவியல் (Anthropology) என்ற துறையை உருவாக்கியவர் ஜொஹான் பிரெடரிக் ப்ளூமென்பாக் (Johann Ferederich Blumenach கி.பி.1752- 1840) என்ற ஜெர்மானிய மருத்துவர் மற்றும் அறிவியலாளர்.

அவருக்கு முன்னமே சிலர் இனம் பற்றி ஆய்வு செய்திருந்தாலும், அவர் எழுதிய ’de genesis humani varities native (the natural varities of mankind) – மனித வர்க்கத்தின் இயற்கையான வகைகள் என்ற நூல்தான் (1776) உடல் சார்மாந்தவியலின் (Physical Anthropology) முதல் நூல் ஆகும்.இந்நூல் ஐரோப்பாவில் பெரும் ஆர்வத்தைக் கிளறிவிட்டது. இதுவே 19 ஆம் நூற்றாண்டில் நிகழ்த்தப்பட்ட ‘இனங்கள்’ பற்றிய பிற ஆய்வுகளுக்கு வழி வகுத்தது.
புளூமென்பாக் 60 மண்டை யோடுகளைச் சேகரித்து அவற்றை ஆய்வு செய்தார். பல இனங்களுக்கிடையில் மண்டை யோட்டின் அளவிலும் அமைப்பிலும் வேறுபாடுகள் இருப்பதாகக் கருதினார்.அவருடைய மண்டை யோட்டுத் தகவல்கள் தொகுக்கப்பெற்று Collectio Craniorum Diversarum Gentium’ என்ற பெயரில் (1790-1828) நூலாக வெளிவந்தது.
புளூமென்பாக்கின் ஆய்வில் ஒரு மனிதத் தொகுப்பின் தோலின் நிறம், மண்டையோட்டின் அளவு ஆகியவை அந்த இனத்தின் பண்புகளுடன் தொடர்பு படுத்தப்பட்டது. இவ்வாறு உடல்சார் கூறுகளின் அடிப்படையில் இனங்கள் பிரிக்கப்பட்டன. புளூமென் பாகுக்கு முன்பும் இனம் சார் ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டன. பிரெஞ்சு மருத்துவரான பிராங்காய் பெர்னியர் (Francois Bernier) 1684 ஆம் ஆண்டு தமது நூலை ( (A New Division Of The Earth, According To The Different Species Or Races Of Man Who Inhabit It — பிரெஞ்சு மொழி நூலின் பெயர் ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ளது) வெளியிட்டார்.

இந்த நூலில்தான் முதல் முதலாக Race எனும் சொல் பயன்படுத்தப்பட்டது. பெர்னியர் மனித இனத்தை வகை பிரிக்க தோலின் நிறம் போன்றவற்றையே எடுத்துக்கொண்டார்.

அமெரிக்கக் கண்டம் கண்டு பிடிக்கப்பட்ட போது செவ்விந்திய மக்களை விலங்கினமாகவே ஐரோப்பியர் கருதினர். 1537 ஆம் ஆண்டு போப் மூன்றாம் பால் ‘எல்லை கடந்த கடவுள்’ (The Transcendent God) என்ற பெயரில் தம் ஆணையைப் பிறப்பித்தார். அதன்படி செவ்விந்தியர்கள் மனிதர்கள் என்றும் அவர்களுக்கு உயிர் உண்டு என்றும் அவர்கள் கிறித்துவத்துக்குள் கொண்டு வரப்படலாம் என்றும் அறிவித்தார்.

1774 ல் இங்கிலாந்தில் எட்வர்ட் லாங் (Edward Long) தமது ‘ஜமாய்க்கா வரலாறு’ என்ற நூலை வெளியிட்டார். இதில் கருப்பினத்தவரை ஐரோப்பியர் களுக்கும் மனிதக் குரங்குக்கும் இடையில் வைத்தார். குரங்குகளுக்கும் ஐரோப்பியருக்கும் இடையிலான இணைப்பாகக் கருப்பினத்தை கருதினார். இது இனப்பாகுபாட்டு உணர்வின் வெளிப்பாடாகும்.

ஒருபுறம் மாந்தவியல் ஆய்வு என்ற பெயரில் இன ஒடுக்குமுறைக் கருத்தியல் வளர்த்தெடுக்கப் பட்டபோது, மறுபுறம் இன அடிமைத்தனத்திற்கு எதிரான கருத்துகளும் வளர்ந்து கொண்டிருந்தன. அவை இனவியல் ஆய்வுகளில் வெளிப்பட்டன.
இந்த இரண்டாவது வகை மாந்தவியல் ஆய்வாகத்தான் கால்டுவெல்லின் ஆய்வுகளும் சமூக தளத்தில் அவர்
நிறுவிய உண்மைகளும்.

கால்டுவெல் ஆய்வுக்கு இந்தியாவில் அவருக்கு சமகாலத்தில் நடந்த ஆய்வுகளும் தளம் அமைத்துக் கொடுத்தன.
அவை:
கி.பி. 16ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் போர்ச்சிக்கீஸ் அறிஞர் ஒருவர் (Fernao Lape de Castanteda) தென்னிந்திய மொழிகள் பற்றித் தம்முடைய குறிப்பொன்றில் குறிப்பிட்டுள்ளமை காணலாம். (Grierson 1906. ல்ல்,350. 366)1 தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய நான்கு தென்னிந்திய இலக்கிய மொழிகளும் மேனாட்டு அறிஞர்கள் பலருடைய கவனத்தையும் கவர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கதொன்றாம்.

1801இல் கல்கத்தாவில் வில்லியம், கல்லூரி (Fort Williams College) தோன்றியபோது இந்திய மொழிகள் பற்றிய ஆராய்ச்சியில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டது. இதன் தலைவராக இருந்த வில்லியம் கரே என்பார் இந்திய மொழிகள் பற்றிய செய்திகளைச் சேகரித்து ஆராய முற்பட்டார். 1816இல் தாம் எழுதிய கடிதம் ஒன்றில் தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகள் சமஸ்கிருத மொழி யிலிருந்து உருவானவை என்று கூறியுள்ளார்.இதற்குக் காரணம் இம்மொழிகளில் ஏராளமான வடமொழிச் சொற்கள் காணப்படுவதே. மேலும் கி.பி. 18ஆம் நூற்றாண் டிலும் 19ஆம் நூற்றாண்டிலும் வாழ்ந்த அறிஞர்கள் பலர் இவ்வெண்ணத்தையே கொண்டிருந்தனர். ஸ்டீவன்சன், கோல் புரூக் , வில்கின்ஸ், ஜி.யு. போப் போன்ற பல மேனாட்டறிஞர்களும் ஞானப் பிரகாசர், சேஷகிரி போன்ற பல கீழை நாட்டு அறிஞர்களும் இக்கருத்தினைக் கொண்டிருந்தனர்.

ஆனால் பிரான்சிஸ் எல்லிஸ் என்பார் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளை ஒப்புமைப்படுத்தி ஆராய்ந்தபோது இம் மொழிகள் தங்களுக்கிடையே இன உறவினைக் கொண் டிருக்கின்றன எனக் கண்ட நிலையில் இம்மொழிகள் ஒரே இனத்தைச் சார்ந்தன எனக் கூறியதுடன் இவற்றை ஒன்றாக இணைத்துத் ‘தென்னிந்திய மொழிகள்” எனப் பெயரிட்டார்.மேலும் ,ராபர்ட்ஸ் என்பார் எழுதிய மால்தோ பற்றிய குறிப்பினைக் கொண்டு தென்னிந்தியாவில் காணப்படும் மொழிகளும் மால்தோ மொழியும் தம்முள் ஒற்றுமையுடையனவாக இருக்கலாம் எனவும் எண்ணினார். இன்றையத் திராவிட மொழி ஆராய்ச்சிக்கு வித்திட்ட பெருமை அவரைச் சாரும்.

>, M,B, Emeneau. Brahui and Dravidian Comparative Grammar

>, Henry Harkness. A Description of a singular Aboriginal Race inhabiting the Summit of the Neilgherry Hills (1832) Bernhard Sebmid, On the Dialect of the Todavars. the Aborigines of the Neelgherries (Madras Journal of letters and science. V,1837. )

>, Friedrich Metz. A Vocabulary of the Dialect Spoken by the Todas of the Nilagiri Mountains. in Madras Journal of Letters and Science. N,S,I, 1856-57,

>, Vosysey. Vocabulary of Goand and Cole words. Journal of the Asiatic Society of Bengal. XIII [1844],

> J,G, Driberg. H,J, Harrison. Narrative of the Second visit to the Gonds of the Nurbudda Territory [with a Grammar & Vocabulary of their language] Calcutta. 1849,

>, J,P, Fyre. A Grammar and progressive reading lessons in the Kondh language [1851]

> Lingum Letchmajee. An Introduction to the Grammar of the Kui or Kondh language [1853]

>J, Stevenson. An Essay on the languages of the aboriginal Hindus. The Journal of the Bombay Branch of the Royal Asiatic Society,

>, B,H, Hodgson. Aborigines of Eastern Ghats. JASB [1848]

>B,H, Hodgson. Aborigines of the Nilgiris. JASB [1856]

இப்படியாக கால்டுவெல் திராவிட மொழிகள் ஆய்வுக்கு பலர் பாதைப் போட்டிருந்தார்கள்.

அடுத்த வாரம் கால்டுவெல்லின் தனித்துவம் குறித்து பேசலாம்.

——————————————————————————

Series Navigation