காற்றோடு திரிகின்ற யமன்

This entry is part [part not set] of 57 in the series 20060317_Issue

செழியன்


செய்திகளை அறியும் உரிமை மக்களுக்கு இருக்கின்றதா ?

வரோனிக்கா செக்கசோவா என்பது கவர்சிகரமான புன்னகையை அள்ளி எறிகின்ற அழகான பெண் மட்டுமல்ல. . Belarusian நாட்டு மக்களால் நன்கு அறியப்பட்ட போர்க்குணம் கொண்ட journalist

மாற்றுக் கருத்துக்கான பத்திரிகையான ‘Solidarnost’ ல் மே 2003ல் இருந்து பணியாற்றிக் கொண்டிருந்தார்.

“பொதுவாக வரோனிக்கா சமூக, கலாச்சார செய்திகளை எழுதினாலும், அவ்வப்போது மிகவும் தாக்கமான அரசியல், போதைப் பொருள் கடத்தல் பற்றி செய்திகளை எழுதிவிடுவார். அப்படி எழுதாமல் அவரால் இருக்க முடியாது” என்று முன்னாள் Belorusskaya Delovaya Gazeta வின் பத்திரிகை ஆசியர் Svetlana Kalinkina கூறுகின்றார்.

“நான்கு மாதங்களுக்கு முன்பு, ‘The KGB is still following you’ என்ற தொடர் கட்டுரையை வரோனிக்கா எழுதியுள்ளார்” என Marina Zagorskaya என்ற நிருபர் யிடம் கூறியுள்ளார். பொதுமக்களின் நடவடிக்கைகளை எவ்வாறு Belarusian நாட்டு உளவுத்துறை கண்காணிக்கின்றது என்பதே வரோனிக்கா கட்டுரையின் சாராம்சம்.

ஒக்டோபர் 20, 2004ம் திகதி புதன் கிழமை வரோனிக்கா வேலைக்கு வரவில்லை. காரணம் தெரியாமல், வரோனிக்காவுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முற்பட்டனர். அந்த தொலை பேசிக்கு வரோனிகா பதிலே அளிக்கவில்லை. இதனை அடுத்து வரோனிக்காவின் வளர்ப்புத் தந்தையான Vladimir Melezhke, வரோனிக்காவின் அப்பாட்மென்டுக்குச் சென்றார்.

அதன் பிறகே அந்த அப்பாட்மென்டில் உறைந்து போயிருந்த செய்தி, உலகத்திற்குத் தெரிய வந்தது.

இரவு, Belarusian தலை நகரான Minsk உள்ள வரோனிகாவின் அப்பாட்மென்டில் வைத்து, இனம் தெரியாத கொலைகாரர்களால் வரோனிகா (வயது 44) இருபது தடவைகள் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டிருந்தார். அவருடைய கழுத்து கத்திக் குத்துகளால் சல்லடை போடப்பட்டிருந்தது.

அவருடைய அப்பாட் மென்டில் இருந்து எந்த ஒரு பொருளும் திருட்டுப் போகவில்லை என்று பொலீசார் கூறியுள்ள அதே நேரம், கொலையாளிகள் பற்றிய எந்த வித தடயங்களும் தமக்குக் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளனர்.

வரோனிக்காவின் கொலையை International Federation of Journalists அமைப்பு வன்மையாக கண்டித்துள்ளது. இந்த அமைப்பில் உலகெங்கிலுமான நூற்றி பத்து நாடுகளைச் சேர்ந்த 500,000 journalist அங்கம் வகிக்கின்றனர்.

ஒக்டோபர் 17, 2004 ஞாயிற்றுக் கிழமைஇ Belarusian journalist Md Pavel Sheremet குண்டர்களால் தாக்கப்பட்டார். இவர் ருஷ்ய நாட்டு தொலைக்காட்சியின் சனல் ஒன்றின் Correspondent.

அன்றைய தாக்குதல் தினம், Belarusian அதிபர், பொதுத் தேர்தலை நடத்தாமல் தனது ஆட்சிக்காலத்தை சர்வசன வாக்கெடுப்பு மூலம் மேலதிகமாக நீடித்துக் கொண்டிருந்தார்.

Sheremet அதிர்ச்சி மற்றும் உடல் காயங்களுடனும் ஏற்பட்ட பாதிப்புகளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் பொலீசார் இந்த Journalist க்கு எதிராக, ‘பொது இடங்களில் அத்துமீறிநடந்து கொண்டார்’ என்ற குற்றத்தை சுமத்தினர்.

நீதிமன்றத்தில் இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. காரணம், பொலீசாரால் தமது குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை.

இங்கு ஒக்டோபர் 19, செவ்வாய்க்கிழமை, அமைதியான முறையில் சர்வசன வாக்கெடுப்புக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம், வன்முறையான முறையில் பொலிசாரினால் கையாளப்பட்டது.

பொலிசாரினால் ஐம்பதுக்கும் மேற்பட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். பல Journalist தாக்கப்பட்டனர். ருஷ்யன் தொலைக் காட்சி நிறுவனம், மற்றும் NTM, REN- TV யில் இருந்து வந்த கமராக்கள் எல்லாம் அடித்து நொறுக்கப்பட்டன.

ஒக்டோபர் 28, 2004 வியாழக் கிழமை எரித்திரிய பத்திரிகைகளின் சுதந்திரம் பற்றி International Federation of Journalists அமைப்பின் பொதுச் செயலாளர் Aidan White குறிப்பிடும் போது, “எரித்திரியாவில் பத்திரிகைச் சுதந்திரம் சர்வாதிகாரத்துள் மூழ்குகின்ற நிலைமைக்கு வந்துவிட்டது. சர்வதேச சமூகம் இந்த பாதிக்கப்பட்ட எரித்திரிய சமூகத்திற்காக கண்டிப்பாகத் தலையிடவேண்டும்” என்று கருத்து தெரிவித்தார்.

எரித்திரியாவில் இருந்த, கடைசி வெளிநாட்டு நிருபருமான BBC நிருபர்; எந்த வித காரணமும் சொல்லப்படாமல் கடந்த மாதத்துடன் வெளியேற்றப்பட்டார்.

“ஆபிரிக்காவிலே மிக மோசமான முறையில், பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிராக செயல்படுகின்ற நாடு எரித்திரியாவே” என்று சுவீடாஸ் Jwedish Journalists அமைப்பின் உப தலைவர் Arne Konig தெரிவித்துள்ளார்..

1991ல் எதியோப்பியாவில் இருந்து எரித்திரியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து, எரித்ரியாவின் ஜனாதிபதி யுகறநசமை திட்டமிட்ட முறையில் நாட்டினுடைய அரசியல் திட்டத்தை அமுல்படுத்தாமலும், ஜனாதிபதி தேர்தலை உரிய திகதியில் நடத்தாமல் பிற்போட்டும் வந்துள்ளார். சுதந்திரமான பத்திரிகை சதந்திரத்தை தடை செய்துள்ள இவர், அது மட்டுமல்லாது நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்களை சிறையி;லும் அடைத்துள்ளார்.

எரித்திரியாவில் இன்று சுதந்திரமான பத்திரிகைகள் எதுவும் இல்லை. வெளிநாட்டு பத்திரிகையாளரும் துரத்தியடிக்கப்பட்டுள்ளனர்.

ஒக்டோபர் 19, 2004 ம் திகதி, காலை பத்து மணிக்கு, பிலிப்பைனில் என்ற வானோலி விமர்சகர் கொல்லப்பட்டார். இவருடைய தலையின் பின் புறம் மூன்று துப்பாக்கிக் குண்டுகள் துளைத்திருந்தன. இவர் National Union of Journalists in the Philippines (NUJP) இன் ஒரு அங்கத்தவருமாவார்.

Eldy Sablas தன்னுடை நகரத்தில் நடந்து கொண்டிருந்த சட்டவிரோத போதை பொருள் கடத்தலுக்கும், சட்ட விரோத சூதாட்டத்திற்கும் எதிரான அபிப்பிராயங்களை வானோலி மூலம் வெளிப்படுத்திக் கொண்டிருந்தவர் என்று NUJP கூறுகின்றது.

“இவருடைய கொலைபற்றி பிலிப்பைன் அரசு பூரணமான விசாரணை ஒன்றை செய்து, கொலைகாரர்களைக் கண்டுபிடிக்க வேண்டும்” என்று International Federation of Journalists அமைப்புக் கேட்டுள்ளது.

இந்த வருடம் பிலிப்பைனில் சுட்டுக் கொல்லபட்ட எட்டாவது பத்திரிகையாளர் இவராகும். பிலிப்பைனில் 1986க்குப் பின்னர் இதுவரை ஐம்பத்திஏழு Journalists கொல்லப்பட்டுள்ளனர்.

Ivory Coast ன் தலைநகரில், ஒக்டோபர் 22, 2003ல், பொலிஸ் தலைமைக் காரியாலயத்தில் பேட்டி எடுப்பதற்காக காத்துக் கொண்டிருந்தார் பிரேஞ்சு Journalist Jean Helene. இவர் பிரேஞ்சு வானொலி நிலையத்தின் செய்தியாளர் ஆவார்.

பல பத்திரிகையாளர் முன்னிலையில், அந்த இடத்தில் வைத்து Ivory Coast பொலிசார் இந்த Journalist ஜ சுட்டுக் கொன்றனர். இவருடைய பின் புறம், தலையில் துப்பாக்கிக் குண்டுகளை பாச்சி இவரைக் கொன்டிருந்தனர்.

முன்பு ஒரு காலத்தில் பிரேஞ் காலனியாக இருந்த J Ivory Coast ல் அரசுக்கும், அரசாங்கத்திற்கும் எதிரான போராட்டங்கள் நடந்து வந்தன. இந்த செய்திகளை பிரேஞ்சு ஊடகங்கள் தவறாது வெளியிட்டு வந்தன. மக்கள் மத்தியிலும் இந்த ஊடகங்களுக்கு செல்வாக்கு இருந்து வந்தது.

“ செய்திகளை அறியும் மக்களின் உரிமைக்காக, உக்ரேனியாவின் சுதந்திர Journalist களும், அரசு கட்டுப்பாட்டில் உள்ள Journalist களும் அளவுக்கும் அதிகமான ஆபத்தை தாங்கிக் கொண்டு செயல்புரிகின்றனர். நாம் அவருக்களுக்கு துணை நிற்க வேண்டும்” என்று W International Federation of Journalists அமைப்பின் பொதுச் செயலாளர் Aidan White ஒக்டோபர் 29, 2004ல் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அன்யைய தினம், தம் மீதான அரசின் அச்சுறுத்தலுக்கு எதிராக, உக்ரேனிய Journalist கள் நான்காவது நாளாக தமது உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தனர். அதற்கு முந்திய தினம், நான்கு முக்கிய தொலைக்காட்சி நிறுவனத்தை சேர்ந்த 42 முன்னணி journalist கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர்.

“உண்மையைச் சொல்தற்காகத் தண்டிப்போம் என்ற விசில் ஒலி எழும்புவுது பத்திரிகை சுதந்திரத்தை குறுக்கிவிடுவதற்கான செயலாகும். இதை மீறி பத்திரிகை சுதந்திரம் நிலை நிறுத்தப்படவேண்டும் ” என்று International Federation of Journalists அமைப்பின் பொதுச் செயலாளர் Aidan White ஒக்டோபர் 26, 2004ல் அறிக்கை விட நேர்ந்தது.

இந்தியாவின் சுதந்திரப் பத்திரிகையாளரான Sanjay Arya, ஊழல், காடுகளை அழித்து மரங்களை கடத்துதல், மருத்துவம், கல்வி ஆகிய துறைகளில் உள்ள சீர்கேடுகளை அம்பலப்படுத்தி எழுதியமைக்காக, பொய்க் குற்றங்கள் சுமத்தப்பட்டு சிறையில் தள்ளப்பட்டதைத் தொடர்ந்து இந்த நிலைமை Sanjay Arya க்கு ஏற்பட்டது.

அரசியல் வாதிகளின் வற்புறுதலை அடுத்தே Sanjay யை பொலிசார் சிறையில் தள்ளினர்.

1997ல் இருந்து இதுவரை, உலகம் முழுவதும் சுமார் 391 Journalist தமது கடமையை செய்ததற்காக கொல்லப்பட்டுள்ளனர்.

2000ம் ஆண்டு 25 Journalist கொல்லப்பட்டனர். இவ்வாறு Journalist கொல்லப்பட்டது 2001ல் 37 ஆக அதிகரித்தது. பின்னர் 2002ல் 19 Journalist கொல்லப்பட்டனர். மறுபடியும் 2003ல் Journalist கொல்லப்பட்டது 45 ஆக உயர்ந்தது. 2004ம் ஆண்டு இதுவரை சுமார் 39 Journalist கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 119 Journalist கள் உரிமை மறுக்கப்பட்டு, சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Journalist கள் கொல்லப்படுகின்ற நாடுகளின் எண்ணிக்கை இன்று இரண்டு மடங்காக உயர்ந்துவிட்டது.

ஏன் பத்திரிகையாளர்கள் கொல்லப்படுகின்றனர் ?

பொது மக்களுக்கு செய்திகளை அறிகின்ற உரிமை உண்டு. இது மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்று. இந்த அடிப்படை உரிமைக்காக செயல்பட்டு, உண்மைச் செய்திகளை மக்களிடம் கொண்டு செல்கின்ற Journalist கள் மிரட்டப்படுகின்றார்கள், தாக்கப்படுகின்றார்கள், சிறையில் அடைக்கப்படுகின்றனர். அதற்கு மேலாக கொல்லப்படுகின்றனர்.

தனது கருத்தை சொல்வதற்கும், எழுதுவதற்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமை உள்ளது. இது மக்களின் அடிப்படை உரிமை என்றும் ஜனநாயகம் கொண்டாடுகின்றது. ஆனால் Journalist களின் கருத்துகளுக்கு முகம் கொடுக்க வக்கில்லாத அரசாங்கங்கள், அரச படைகள், தனிநபர்கள், ஆயுதக் குழுக்கள் எல்லாருமே, கொலை செய்வதானால் உண்மைகளை மூடி மறைத்துவிடலாம் என்றும் கனாக் காண்கின்றன. இது ஒரு புறம்

மறு புறம், உண்மையை வெளியிட்ட Journalist ஜ பலி தீர்த்து விடத்துடித்து, இந்தக் கொலைகளை செய்கின்றன.

அரசாங்கங்கள் மட்டுமல்ல விடுதலைக்காகக் போராடும் அமைப்புகளும் கூட, பத்திரிகை சுதந்திரத்தையும், பத்திரிகையாளர்களையும் காக்க எவ்வித அக்கறையும், முயற்சியும் எடுத்துக் கொள்வதில்லை.

செழியன் (2004)

Series Navigation

செழியன்

செழியன்