தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
“சென்ற காலத்தைப் பிரதி எடுக்காது
என் எதிர்காலம்,”
என்றொரு சமயம் எழுதினேன் !
என்னருகில் அமர்ந்து
வழிநடத்தும்
வாழ்க்கைத் தேவதை
முகக்கனிவுடன் நோக்கி அந்த
தகவலை
நியாயப் படுத்தும்
இறைவன் வெண்பீடத்து முன் !
முடிவில்
திரும்பிப் பார்த்தால்
இருந்தது நீ
தேவதைக்குப் பின்
ஆத்மப் பிணைப்போடு !
இயல்பான நோய்களிடையே
நீண்ட காலம் நான்
முயலும் போது
நின் ஆறுதல் கிடைத்தது
விரைவாக !
உன் பார்வை நிழலில்
மொட்டாக இருந்த போதென்
பயணத் துணைவர்
பச்சை இலைகளைத் தந்தார்,
காலைப் பனி முத்துக்கள்
மிதந்திட !
முதற்பாதி வாழ்க்கைப் பிரதி
எதற்கினி இப்போது ?
ஒதுக்கிடுவாய்
வளைந்து எனை வதைக்கும்
நெடிய பக்கங்களை !
எதிர்கால என் சரிதையைப்
புதிதாக எழுது,
உலகிலே
எதிர்பார்க்க முடியாத என்
புதிய தேவதையே !
************
Poem -42
Sonnets from the Potuguese
By: Elizabeth Browing
“My future will not copy fair my past”–
I wrote that once; and thinking at my side
My ministering life-angel justified
The word by his appealing look upcast
To the white throne of God, I turned at last,
And there, instead, saw thee, not unallied
To angels in thy soul! Then I, long tried
By natural ills, received the comfort fast,
While budding, at thy sight, my pilgrim’s staff
Gave out green leaves with morning dews impearled.
I seek no copy now of life’s first half:
Leave here the pages with long musing curled,
And write me new my future’s epigraph,
New angel mine, unhoped for in the world!
**********
S. Jayabarathan [jayabarat@tnt21.com (October 8, 2007)]
- பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 10 அத்தியாயம் பதின்மூன்று
- பிரதாப சந்திர விலாசம் (தமிழின் முதல் இசை நாடகம்), புத்தக மதிப்புரை
- காதல் நாற்பது -42 என் எதிர்காலத்தை எழுது !
- ஈகைத் திருநாள்!
- Letter
- ஆச்சியின் பேச்சில் அலைக்கழிக்கப்பட்ட தமிழ் மனங்கள் – கோட்டை பிரபுவின் கட்டுரை
- நவகாளியில் காந்திஜி
- பிழைதிருத்தம் கட்டுரைத்தொடர் 17.
- கொழும்பு புத்தகக் கண்காட்சி – ஒரு விசிட் !
- தர்மசிறி பண்டாரநாயக்கவின் விவரணப் படவிழா
- பாரிசில் மகாகவி பாரதியாரின் 125 ஆம் ஆண்டு விழா
- சிங்கை வீதிகளில் பாரதி !!!
- “தொல்காப்பியச் செல்வர் கு சுந்தர மூர்த்தி” : முனைவர் மு இளங்கோவன் கட்டுரை
- தமிழ்ப் பக்தி இலக்கியங்களும் இயக்கங்களும் உலகப் பண்பாட்டிற்கு வழங்கிய பங்களிப்பு – கருத்தரங்கம்
- சோதிப்பிரகாசம் : திண்ணையில் ஜெயமோகன் எழுதிய கட்டுரை
- என் இசைப் பயணம்
- ஆயிரம் பொய்யைச்சொல்லி…….
- பெங்களூர் புத்தக கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம்
- ஒரு பாமரனின் எண்ண வெளிப்பாடு
- படித்ததும் புரிந்ததும்..(5) பதவிப் பிரமானம் (பதவிப் பரிமானம்
- டி.என். சேஷகோபாலன் என்ற புத்துணர்வு
- மாத்தா ஹரி -அத்தியாயம் – 31
- காதலினால் அல்ல
- மனசாட்சி
- கால நதிக்கரையில்……(நாவல்)-27
- நாய்கள் துரத்தும் போது…
- பனி விழும் இரவு
- ஹெச்.ஜி.ரசூல் படைப்புலகம்
- தொடக்க நிலையிலுள்ள சேது சமுத்திரத் திட்டம் தொடராமல் இருப்பதே நலம்
- பெண்ணியக் கோட்பாட்டின் தோற்றமும் ஆய்வு வளர்ச்சியும்
- நகரத்தார் உறவு முறைப்பெயர்கள்
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 3 : மஹாநகரத்தில் வர்தா பாய்கள், ஸ்ரீதேவிகள்
- ஒலி இலக்கியச்செம்மல் திருவண்ணாமலை சி.மனோகரன்
- சவம் நிரம்பியபுத்தகபைகள்
- பாரத அணு மின்சக்தித் திட்டங்களும் அவற்றின் அமைப்புத் திறனும் – 6
- பட்டர் பிஸ்கட்
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 2 காட்சி 1 பாகம் 2