கவிஞர் சிற்பி இலக்கிய விருது வழங்கும் விழா

This entry is part [part not set] of 33 in the series 20100725_Issue

முனைவர் மு.இளங்கோவன்கவிஞர் சிற்பி இலக்கிய விருது வழங்கும் விழா பொள்ளாச்சியில் நாச்சிமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியில் 08.08.2010 ஞாயிறு காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது.

பி.கே.கிருட்டினராச் வாணவராயர் அவர்கள் தலைமை தாங்கி விருது வழங்கிக் கவிஞர்களைப் பாராட்டுகின்றார்.

அருட்செல்வர் நா.மகாலிங்கம்,பேராசிரியர் கா.மீனாட்சிசுந்தரம்,பேராசிரியர் ம.ரா.போ.குருசாமி, தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் ஆகியோர் சிறப்பிக்கப்பட உள்ளனர்.

இயகோகா சுப்பிரமணியம் அவர்கள் முன்னிலையில் இலக்கிய விருது பெறுவோர் கவிஞர்கள் கலாப்பிரியா, இளம்பிறை ஆவர். இலக்கியப்பரிசில் பெறுவோர் கவிஞர்கள் அழகியபெரியவன், மரபின் மைந்தன்,தங்கம்மூர்த்தி,சக்திசோதி ஆவர்.சொற்கலை விருது பெறுபவர் பேராசிரியர் தி.மு.அப்துல்காதர் அவர்கள் ஆவார்.கவிஞர் சிற்பி அறக்கட்டளையினர் அனைவரையும் அன்புடன் அழைத்து மகிழ்கின்றனர்.
முனைவர் மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா
muelangovan@gmai.com

Series Navigation