This entry is in the series 20020525_Issue

அ.முத்துலிங்கம்


1987ல் என் தம்பியிடம்
கால் இருந்தது.
கால் என்றால் கால்கள்.
நடப்பான், ஓடுவான்
நாயை உதைப்பான்.
கிணற்றிலே பந்து விழுந்தால்
கிறுகிறுவென்று இறங்கி
எடுப்பான்.
படுக்கும்போதும்
கால்கள்
அவனுடனேயே படுக்கும்,
இப்போதுபோல
ஒரு கால்
கட்டிலின் கீழே
அல்ல.

Series Navigation