கணினித் தத்துவம்

This entry is part [part not set] of 37 in the series 20030530_Issue

வைஷாலி


மிகப்பெரிய கோப்பா ?
அது மிகவும் உபயோகமானதாக இருக்கலாம்
ஆனால் இப்பொழுது போய்விட்டது.

நீங்கள் தேடும் இணையத் தளம்
காண முடியவில்லை
ஆனால் எண்ணற்றவை இணையத்தில்.

குழப்பம், ஆளுமை இவற்றுள்
எதிரொலி, மன்னிப்பு மற்றும் மறுபடி ஆரம்பி
ஆணையிடு திருப்பி தர முடியும்.

நேற்று வேலை செய்தது
இன்று வேலை செய்யவில்லை
விண்டோஸ் அதைப் போலத்தான்

முதலில் பனி, பிறகு அமைதி
இந்த பத்தாயிரம் ரூபாய் திரை இறக்கிறது
மிக அழகாக

தேடுதல் நஷ்டத்தில் முடிய
மற்றும் இல்லாமை இருக்கும்பொழுது
‘மை நாவல் ‘ காணவில்லை.

பொறுமை திசையில் காத்திரு
ஒரு சிறு மதிப்பு உன்னுடைய கோபம்
இணைப்பு குறைபாடு

செயலாக்கமின்மை குறைக்கிறது
உங்கள் விலைமதிப்புள்ள கணிப்பொறியை
ஒரு சிறு கல்லாக.

மூண்று விஷயங்கள் சாதாரணமானவை
இறப்பு, வரி, தகவல் இழப்பு
எது நடந்துள்ளது என்பதை யோசி.

ஒடையில் உன் கால்கள்,
ஆனால் தண்ணீர் நகர்ந்து விட்டது
அந்த பக்கம் இங்கே இல்லை.

ஞாபகத்தில் இல்லை.
நாம் இந்த முழு வானையும் பிடித்துக்கொள்ள ஆசை
ஆனால் ந்ம்மால் முடியாது.

அது அழிக்கப்பட்டு விட்டது
நீங்கள் தேடும் கோப்பு
மறுபடி தட்டச்சு செய்தாக வேண்டும்.

கடினமான தவறு.
அனைத்து சுலபவழிகளும் மறைந்துவிட்டன.
திரை, மனது. இரண்டும் காலி.

Series Navigation