கடவுளே காதலா…

This entry is part [part not set] of 40 in the series 20030809_Issue

நெப்போலியன், சிங்கப்பூர்


கடவுள்
காதலிக்க
முடிவு செய்தார்
காதலிக்கு
முதல் கடிதம்
எழுத அமர்ந்தார்

ஆதியானவளே…
பாதியானவளே…
அண்டமானவளே…
கண்டமானவளே…
என எழுதிய ஆரம்பமே
அவளுக்குப் பொருந்தாது
என்றுணர
ஹாய்… டார்லிங்…
ஸ்வீட்டி… டேஸ்ட்டி…
என்றபின்,
முதல் சுற்று
இரண்டாம் சுற்று
மூன்றாம் சுற்று
கடவுளின் முகத்தில்
தாடி துளிர் விட ஆரம்பித்தது…

காதலிக்குத் திருமணம்
மனிதனுடன்!
உச்சி கொதிக்க
கண்கள் சிவக்க
தன் சக்தி முழுக்க
பிரயோகித்து
திருமண வீட்டில்
திடுப்பென விசுவரூபமெடுத்தார்…
‘ கல்யாண வீட்டிற்க்கு
கடவுளே நேரில்
ஆசிர்வதிக்க ‘
என்ற வியப்புடன்
புதுமணத் தம்பதிகளுடன்
கூட்டமே காலில் விழ…
வெட்கித் தலை குனிந்து
விருட்டென மறைந்தார்

பிறகு
அவர் காதலிக்கவுமில்லை
காதலிக்கும் நமக்கு
சொர்க்கத்தில்
இடமளிக்கப் போவதுமில்லை…
kavingarnepolian@yahoo.com.sg

Series Navigation