This entry is in the series 20100627_Issue

ப.மதியழகன்,



குழாயடிச் சத்தம்
மீன் விற்பவனின் கூச்சல்
சைக்கிளை தள்ளிக் கொண்டு
வரும் கீரை விற்பவனின்
சைக்கிள் க்ரீச் சிடும் சத்தம்
காலையில் காபிபானம்
அருந்திட பால்காரனை
எதிர்பார்த்து காத்திருக்கும்
வீட்டிலுள்ள மாந்தர்கள்
சுடச்சுட செய்திகளை
சுமந்து வரும்
பேப்பர் போடும் பையன்
சர்க்கரைக்குப் பதில்
உப்புக்காபி குடிப்பது போல்
தினமும் வந்து
கேட்டுவிட்டுப் போகும்
உப்பு விற்கும் பெண்
உடல் நலம் பேண
நடைபயிற்சிக்கு கிளம்பும்
மத்திம வயதுடையோர்
பிள்ளைகளை பள்ளிக்கு
அனுப்பத் தயாராகும்
தாய்மார்கள்
ஒவ்வொரு காலைப்பொழுதும்
இப்படித்தான் விடிகிறது
எங்கும் எங்கெங்கும்.

Series Navigation