ஒரு கடிதம்

This entry is part [part not set] of 23 in the series 20050609_Issue

ச. பெரியசாமி


வாஸந்தி அவர்களின் கட்டுரை படித்தேன். கன்னடர்கள் நீக்குப்போக்காக இருப்பதற்குக்காரணம் அவர்கள் மாநிலம் பெரியது. கடந்த காலங்களில் தமிழர்களும் அப்படித்தான் இருந்தார்கள். அதற்காக மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டி வந்தது. கடந்த ஐ நூறு ஆண்டு கால அன்னியர் ஆட்சியினால் தமிழர்களுக்கு வரலாறே இல்லாமல் போனது. தமிழ் நாட்டில் மராட்டி, கன்னடம், சமஸ்கிருதம், உருது, தெலுங்கு ஆகியன மட்டும் வளர்ந்தன. தமிழும் தமிழர்களும் வளரவில்லை. ஆதரவு கொடுக்கப்படவில்லை.தமிழ்ப் பேசும் நிலப்பகுதி சுருங்கிப்போய் வெறும் ஆயிரம் ஆண்டு மரபு மட்டும் கொண்ட தெலுங்கருக்கும் கன்னடருக்கும் பெரிய நிலப்பரப்பு உருவானது. ஆகையினால் தமிழ் ச்சாதியை இன்றைய நிலைமைக்கு குறை கூற முடியாது. பெங்களூர் வட இந்திய கலாச்சார சாயல் கொண்ட ஒரு நகரமாக இன்று மாறிப்போனதற்கு கன்னடர்களின் இந்த நீக்குப்போக்கே காரணம். மற்றபடி கட்டுரையில் மற்ற கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவையே.

ச. பெரிய சாமி.

reperian@rediffmail.com

Series Navigation

ஒரு கடிதம்

This entry is part [part not set] of 34 in the series 20050206_Issue

ச.பெரியசாமி.


நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருவனந்தபுரம் போயிருந்தேன்.பேருந்தில் ஏறியவுடன் வியப்பு ஏற்பட்டது.அங்கு இருந்த ஆண்கள் எல்லோரும் வேட்டியை இறக்கி விட்டிருந்தார்கள்.திருவனந்தபுரம் ஒன்றும் நூறு சத கேரளம் அல்ல.தமிழகத்திலோ அன்டர்வேருக்கு மேல் வேட்டியை தூக்கிக்கட்டுவது வாடிக்கை.அதோடு இடுப்பை முன்னும் பின்னும் ஆபாசமாக ஆட்டி ஆடுவதும் இயல்பான ஒரு விடயம்.முப்பத்தைந்து ஆண்டு கால திராவிட இயக்க ஆட்சியில் ஏற்பட்ட செம்மொழிக்கலாச்சார வளர்ச்சியின் அடையாளம் இது. கடந்த முப்பது ஆண்டு கால தமிழ் வாழ்வில் ஏட்டிக்குப்போட்டி பேசுவது, அடாவடித்தனம் செய்வது ஆகியன சகித்துக்கொள்ளக்கொடிய விடயங்கள் ஆகிவிட்டன. சென்னை அட்டோ ஓட்டுனர்களை பெங்களூரோடு ஒப்பிட்டால் இது எளிதில் விளங்கும்.அப்புறம் பொது மேடைகளில் ஆபாசமாக பேசுவதற்கென்றே ‘அசைவ ‘ பேச்சாளர்கள் இருக்கும் ஒரே இயக்கம் உலகிலேயே இது ஒன்று தான்.கஞ்சித் தொட்டி திறப்பது, போட்டியாக முட்டை பிரியாணி வழங்குவது இந்த ஆபாசத்தின் உச்சம்.பிறகு இந்த பாழாய்ப்போன தமிழ் வளர்ச்சி. அடுக்குமொழி வசனம் பேசுவது தான் பேச்சு. அதை எழுதினால் இலக்கியம். கல்விச்சூழ் நிலையில் பாவிக்கத்தக்க ஒரு தமிழ் உரை நடை உருவாகாமல் போனதற்கு இதுவே காரணம். பிறகு இந்த பாழாய்ப்போன தமிழ் வளர்ச்சி. அடுக்குமொழி வசனம் பேசுவது தான் பேச்சு. அதை எழுதினால் இலக்கியம். கல்விச்சூழ் நிலையில் பாவிக்கத்தக்க ஒரு தமிழ் உரை நடை உருவாகாமல் போனதற்கு இதுவே காரணம்.இவர்களின் சினிமா பற்றிய அறிவும் அரைவேக்காடு தான். சினிமா என்றால் மேடை நாடகம். அவ்வளவுதான். மக்கள் விரும்பினால் போதும். ஆர்ப்பாட்டமாக நடித்தால் அது சிறந்த நடிப்பு. தங் களுக்கு ஜால்ரா தட்டினால் சிறந்த நடிகர் விருது உறுதி.எல்லாவற்றுக்கும் மேல் தனி மனித சிந்தனை என்பதே இல்லாத ஆட்டு மந்தை குணம். கும்பல் சேர்த்தால் மட்டும் எதுவும் எடுபடும் என்ற மோசமான நிலை. கடைசியாக தலைவர்களின் குடும்ப சுய நலம். அடிப்படையில் பாமரத்தனத்தையும் இயல்பில் பொறுக்கித்தனத்தையும் கொண்ட ஒரு இயக்கத்தால் இவை தான் விளையும். இதை பற்றி கேட்டால் ‘பார்ப்பன அடிவருடி ‘ என்ற லேபிள் தயார்.

ச.பெரியசாமி.

reperian@rediffmail.com

Series Navigation

ஒரு கடிதம்…

This entry is part [part not set] of 30 in the series 20020909_Issue

ஆனந்தன்


ஏய் பெண்ணே…
என் நட்பின் இனியவளே…

முதலில் சந்தித்த – அந்த
முதல் நாள்
முத்தாக நினைவிருக்கிறது.

நீண்ட நேரம்
நிறைய பேசினோம்
நம் கடந்த கால
நிகழ்வுகளை, நிஜங்களை
நினைத்துப் பார்த்தோம்..

எதிர்கால கனவுகளை
ஏக்கத்தோடு
எண்ணிப் பார்த்தோம்…

வாழ்வின் கோட்களை
வாதிட்டோம்.

நான் பேசியவைக்கு – எல்லாம்
நீ செவிசாய்த்தாய்..
உன் பேச்சிற்கு நானும்.

நாம் பேசிய நேரங்களில்,

மேற்கில் சந்தித்த
கதிரவனும், சந்திரனும்
மீண்டும் ஒரு முறை
கிழக்கில் சந்தித்த
நாட்கள் எத்தனை…

மேகம் கரைந்து
கடலில் வீழ்ந்த
மழைத் துளி
முத்தாகி இருக்கும்,

தேய் பிறை இரவுகள்
வளர்ந்து
முழு நிலவாகி இருக்கும்,

விதைக் கொடியாகி
கொடி பூப் பூத்து
பூ காயாகி
கனிந்திருக்கும்….

வாடிய பூக்களைப் பார்த்து
வாடியிருக்கிறாய் நீ
நம் நட்பு வாடுவதை
உணரவில்லையோ நீ ?

நம்மை பிரித்த தூரம்
நம் நட்பையும் பிரித்துவிடுமோ ?

என் நட்பே…
ஒரு கடிதம் எழுதி
நம் நட்பை உயிர்பாய்.

k_anandan@yahoo.com

Series Navigation