தோழமையுடன்….
அன்பாதவன்.

வயலின் ஸ்வரமோ குழலின் கீதமோ
கருப்புத் தொலை பேசியும் வண்ணமானது
குரல் கேட்டதில்
சந்தோஷத் தசைகள் விரிய
ஒரு பெரிய புன்னகையுடன்
வரவேற்பு இனித்தது.
எத்தனை ஆண்டுகள்….
எங்கே தொலைத்தோம்
நினைத்திருப்போமா …. நிகழ்ந்ததின்று
என்றோ அறுந்ததை தேடி தொடர்ந்ததில்
‘ மாறாத அலைவரிசை! ‘ மகிழ்ந்ததுள்ளம்
புரிகிறது …தோழி
நதிநீர் வரும் / வற்றும்
உயிரோடு இருக்கிறது ஊற்று.
( அமுதாவிற்கு)
அன்பாதவன்.
jpashivammumbai@rediffmail.com