ஏழையின் ஓலம்

This entry is part [part not set] of 33 in the series 20040205_Issue

சத்தி சக்திதாசன்


விழிகள் மூட மறுத்ததின் காரணத்தை
விழிக்க ஓர் உண்மை உள்ளம் தேடி
கழிக்கும் ஒவ்வொரு கணமும் மனதின்
கனத்த நேரம்தான் அறிவாயோ

பழிக்கும் மனங்கள் யாவையும் ஏனோ
பழகும் வகையினிலே உண்மையில்லை
சுழித்து முகம் தனை தோழர் நோக்கும்போது
சுரக்கும் கண்ணீர் ஏழையர் தம் கண்களில்

வழிதோறும் அவர் விதிக்கும் சட்டங்கள்
வாழ்வின் வகையறியா மக்கள்தம் நெஞ்சில்
எழிற்கும் மானிட வாழ்க்கையை நோக்கி
ஏளனிக்கும் நிலை ஒன்று காணீர்

ஆழிபல தாண்டி நாம் ஆரதிக்கும் போதிலும்
அசையமறுக்கும் சில பழமை வாதங்கள்
நாழி பல கழித்து மெய்பு ரிந்திங்கு லாபமில்லை
நாடிய ஏழையர்தம் நலத்தைக் காத்திடுவீர்

ஊழி வினையாலிவர் வாழ்வு சிதைந்ததிங்கென்று
ஊனவாதங்கள் உரைப்பதை நிறுத்திவிட்டு
செழி நிலையொன்று கழிமனிதர் அடையும்வழி
செந்தமிழர் நாம் செம்மையாய் அமைத்திடுவோம்.
—————————
sathnel.sakthithasan@bt.com

Series Navigation

சத்தி சக்திதாசன்

சத்தி சக்திதாசன்