ஏடுகள் சொல்வதுண்டோ ?

This entry is part [part not set] of 28 in the series 20020518_Issue

கவியோகி வேதம்


இசையினையே முறையாகக் கற்ற பின்பா
..இளங்குயிலும் இசைக்கிறது ?கவிம னத்தை
அசைவிக்கும் மின்னலுமே பாதை தன்னை
..அழகுறவே வகுத்தபின்பா கண்சி மிட்டும் ?
விசையோடு வருகிறதே மேகப் பாய்ச்சல்!
..விதிஒன்றை வகுத்தபின்பா நிலத்தில் பாயும் ?
இசைவுடனே ஏடுகளைப் புரட்டித் தானா
..இங்கேநாம் ‘ஞானத்தை ‘க் கற்க வேண்டும் ?

உளந்தன்னில் பட்டறிவும்,வாழ்வு(உண்) மையும்,
..ஒருவனுக்குக் ‘காகிதத்தால் ‘ நிலைப்ப துண்டோ ?
வளங்கொண்ட அறிஞர்களே! சிந்தி யுங்கள்!
..வார்த்தைகொண்ட ‘ஏடு ‘என்றால் நூல்கள் தாமா ?
களம் என்னும் வாழ்க்கைக்குள் புகுவோ னுக்கே
..கற்கின்ற அனுபவமே ‘ஏடு ‘அன் றோ ?ஓர்
தளம்போன்று வான்பறந்த ‘கொக்குக் ‘ கூட்டம்
..தரவிலையா ‘சமாதி ‘பரம் ?ம்ச ருக்கே ?

‘அவளுடைய ‘ ‘கை ‘ஏட்டைப் படிக்கத் தேர்ந்தால்,
..அன்றுமுதல் இன்றுவரை தோன்றி நின்ற
சுவடிகளும்,புத்தகமும், ‘வேத ‘ ஏடும்,
..சுமையாய்த்தான் தோன்றுபெருங் காடாய் ஆகும்!
தவறாத ‘பயிற்சி ‘யின்றி, ‘ஏடு ‘ மட்டும்
..தவச்சக்தி தருவதில்லை! நெஞ்சில் என்றும்
கவலை,கல்வித் திமிரிருந்தால், ‘வாழ்வே ‘ யில்லை!
..கனல் ‘ருசியை கவி-அறிவான்!சொல்வ தில்லை
!!!
(கவியோகி வேதம்)

Series Navigation

கவியோகி வேதம்

கவியோகி வேதம்