ஏ.சிி. யில் இருக்கும் கரையான்கள்

This entry is part [part not set] of 47 in the series 20040624_Issue

Dr.இரா.சீனிவாசன்,Ph.D, தைவான்


பாம்பு புற்று பார்த்திருக்கிறீர்களா ? உண்மையில் புற்றுக்கு சொந்தக்காரன் பாம்பா என்றால், அதுதான் இல்லை. உண்மையில் புற்றுக்கு சொந்தக்காரன் கரையான்கள். ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டியது போல!!

கரையான்கள்!!!

கேட்ட உடனே எங்கோ எதுவோ ‘அரிப்பது ‘ போல் இருக்கும். ஆம்! நம்மில் நிறைய பேர் கரையான்களுக்கு எதையாவது உண்ணக் கொடுத்து இருப்போம். எது எப்படி இருந்தாலும், இந்த பூச்சிகளின் வாழ்க்கைமுறையில் பல ‘அட ‘ போட வைக்கும் சுவாரசிய சமாச்சாரங்கள் உள்ளன.

கரையான்களுக்கும் நமக்கும் உள்ள பந்தம் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டது. சுமார் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட கரையான் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதே இதற்குச் சான்று. கரையான்கள் எறும்புகளைப் போல இருந்தாலும், உண்மையில் அவை எறும்புகள் வகை அல்ல. எறும்புகள் Hymenoptera என்ற வரிசையைச் சேர்ந்தது. ஆனால், கரையான்கள் Isoptera என்ற வரிசையைச் சேர்ந்தது. Iso என்றால், ‘ஒரே மாதிரி ‘ என்று பொருள். Ptera என்றால், ‘இறக்கை ‘ என்று பொருள். அதாவது, கரையான்களின் மறுவடிவமான ஈசல்களின் முன் மற்றும் பின் இறக்கைகள் ஒரே மாதிரி இருப்பதால், இந்த வகைப்பாட்டியல் ெிிபயர். கரையான்களில், உலகம் முழுதும் சுமார் 275 பேரினங்களும், சுமார் 2750 சிற்றினங்களும் உள்ளன. கரையான்களில் ஒரு சில சிற்றினங்கள், மரங்களில் வாழும். அவை மரங்களை, அரித்து தின்று விிடும். மாவீரன் நெப்போலியனின் போர்க்கப்பல்களுள் ஒன்று இந்த கரையான்களால் அரிக்கப்பட்டது. ஒரு சில சிற்றினங்கள், மண்ணில் புற்று அமைத்து வாழும்.

கரையான்களும், தேனீக்களைப் போல ஒரு சமுதாய பூச்சி (Social insect) ஆகும். ஏன் அப்படி அழைக்கிறோம் எனில், அவற்றால் தனித்து வாழ இயலாது. ஒரு கரையான் கூட்டத்தில் இராணிக்கரையான் (Queen), மன்னர் ( ? ?!!) கரையான் (King), இராணுவ வீரர்கள் (Soldiers) மற்றும் பணிக்கரையான்கள் (Workers) என நான்கு வகை இருக்கும். இதில் இராணுவ வீரர்களும், பணிக்கரையான்களும் வழக்கம்போல மலட்டுத் தன்மை கொண்டவை. ஆனால் இவையும் பிறப்பால் மலடு அல்ல. வளர்ப்பால்தான் மலடு ஆகின்றன. தேனீக்களைப் போல இராணிக்கரையான் தன் உடலிலிருந்து Queen pheromone எனப்படும் ஒருவிித பிரத்யேக சுரப்பினைச் சுரக்கும். இந்த சுரப்பினை எல்லா பணி மற்றும் இராணுவ வீரர்கள் கட்டாயமாக குடிக்க வேண்டும். அவ்வாறு குடிக்ிகும்பட்சத்தில் அவை மலடு ஆகிவிிடும். ஆக இங்கும், இராணியார்தான் மொத்தக் கூட்டத்திற்கும் அதிகார மையம். இராணியுடன் கலவி செய்வதுதான் மன்னரின் வேலை.

இராணுவ வீரர்களுள் இரண்டு வகை உண்டு. முதல்வகை பருத்த தலையுடன், முகத்தில் ஒரு பிரத்யேக அரிவாள் போன்ற கொடுக்குடன் இருக்கும். அவை Mandibulate Soldiers எனப்படும். இவை பகைவர்களின் மீது தாக்குதல் நடத்தி விரட்டிவிடும். அடுத்த வகை, Nasute Soldiers எனப்படும். இவை பகைவர்களின் மீது துர்நாற்றம் மிக்க சுரப்பினைத் துப்பி விரட்டிவிடும். இதில் நாம் கவனிக்க வேண்டிய விசயம், இராணுவ வீரர்கள் கண்பார்வையற்ற குருடர்கள். இராணுவ வீரர்களுள் ஆண், பெண் என இருபாலருமே உண்டு. பணிக்கரையான்களும் கண்பார்வையற்ற குருடர்களே ! அவற்றிலும், ஆண், பெண் என இருபாலருமே உண்டு. இராணுவ வீரர்கள் மற்றும் பணிக்கரையான்களின் வாழ்நாள் 1-2 ஆண்டுகள் ஆகும்ி. பணிக்கரையான்கள் புற்றினைக் கட்டுதல், பழுதடைந்த புற்றினைச் சரிசெய்தல், இளம்கரையான், இராணுவ வீரர்கள், மன்னர் மற்றும் இராணி கரையான்ிகளுக்கு உணவு கொடுத்தல் என பல வேலைகளைச் செய்யும்.

கலவியை முடித்தபின் இராணிக்கரையானின் அடிவயிறு வளர தொடங்கிவிிடும். அடிவயிறு சுமார் 6 அங்குலம் (15 செ.மீ) வரை வளரும். இது Physogastry எனப்படும். இராணிக்கரையான் ஒரு நாளைக்கு சுமார் 2000 முட்டைகள் வைக்கும். அதாவது, ஒவ்வொரு 15 நொடிக்கும் ஒரு முட்டை வைக்கும். இராணிக்கரையான்களின் வாழ்நாள் 15-25 ஆண்டுகள் ஆகும். இராணுவ வீரர்கள் மற்றும் பணிக்கரையான்களுக்கு ஒரு குறிப்பிட்ட வாசனை உண்டு. ஒரு வேளை, பாதுகாப்பு பணியில் உள்ள இராணுவ வீரர்கள் பகைவர்களுடனான போரில் கணிசமாக இறந்து விட்டால், இந்த வாசனை குறைந்துவிடும். இந்த Signal கிடைத்தவுடன், இராணிக்கரையான் இராணுவ வீரர்களுக்கான முட்டைகளை வைக்கும்.

அது சரி, பாம்பு ஏன் புற்றுக்கு வருகிறது தொியுமா ? அதைப்பற்றி தொிந்ிது கொள்ள வேண்டுமானால், புற்றில் உள்ள ஏ.சிி. அமைப்புகளைத் தொிந்ிது கொள்ள வேண்டும்.

பணிக்கரையான்கள் தங்கள் உமிழ்நீரையும், மண்ணையும் கலந்து புற்றினைக் கட்ட ஆரம்பிக்கும். ஒரு புற்றில் பூமிக்குக் கீழே உள்ள அடுக்கு (Underground chamber) மற்றும் பூமிக்கு மேலே உள்ள அடுக்கு (Mound) என இரண்டு அடுக்குகள் உண்டு. பூமிக்கு மேலே உள்ள அடுக்குதான் நம் கண்பார்வைக்குத் தொியும் புற்று. பூமிக்கு மேலே தொியும் உயரத்திற்கு, பூமிக்குக் கீழே உள்ள அடுக்கும் இருக்கும். முதலில் அடித்தளம் அமைத்து, அதற்கு மேலே Galleries எனப்படும் சிறு சிறு வாய்க்கால்களை அமைக்கும். அதற்கும் மேலே பூஞ்சைத் தோட்டங்களை (Fungus Garden) அமைக்கும். இந்த பூஞ்சைகள், கரையான்களின் உணவுப்பொருட்களை மட்கச்செய்து, கரையான்கள் உண்ண ஏதுவாக மாற்றும். இதற்குக் கைம்மாறாக, கரையான்கள் ஒருவிித பிரத்யேக சுரப்பினைச் சுரந்து புற்றில் வேறு எந்த நுண்ணுயிாியும்

இந்த பூஞ்சைக்குப் போட்டியாக வளர்ந்து விடாமல் பார்த்ிதுக்கொள்ளும். இந்த பூஞ்சைகள்தான் மழைக்காலத்தில் காளான்களாக புற்றிலிருந்து முளைக்கும். இந்த பூஞ்சைத் தோட்டங்கள் பூமி மட்டத்திற்கு இருக்கும்.

அதற்கும் மேலே மண்ணாலான புற்று இருக்கும். ஒரு சில சிற்றினங்களில் இது திறந்த துளைகளுடன் இருக்கும். ஒரு சில சிற்றினங்களில் இது முழுமையாக மூடப்பட்டிருக்கும். பூஞ்சைத் தோட்டங்களுக்கு மேலிருந்து, புற்றின் மையமாக ஒரு உள்ளீடற்ற குழாய் (Central chimney) புற்றின் உச்சி வரை நீளும். இது மூல நதியைப் போன்றது. புற்றின் மண்சுவரில், மேற்பரப்பிலிருந்து 2 செ.மீ.க்குள், நம் உடலில் இரத்தம் எடுத்துச் செல்லும் சிறு சிறு குழாய்களைப் போன்று, எண்ணற்ற குழாய்கள் (Surface conduit) இருக்கும். இவை சிறு சிறு ஓடைகளைப் போன்றது. இவை இரண்டையும் இணைப்பது Lateral connectives ஆகும்ி. திறந்த துளைகளுடன் இருக்கும் புற்றில், Surface conduit ஏற்கனவே இருக்கும் துளைகளின் மூலம் திறக்கும். ஆனால் முழுமையாக மூடப்பட்டிருக்கும் புற்றில், Surface conduit நம் கண்பார்வைக்குத் தொியாத, நம் உடலில் உள்ள சிறு சிறு வியர்வைத் துளைகளைப் போன்ற நுண்துளைகளின் மூலம் திறக்கும்.

ஒரு கரையான் புற்றில், பல மில்லியன் கரையான்கள் இருக்கும். அவற்றின் வளர்சிதை மாற்றங்களால் உருவாகும் வெப்பம் மற்றும் நீராவி ஆகியன ஒருவிித மிதவை உந்து விசைகளை (Buoyant forces) உள்ளிழுக்கும். எனவே புற்றின் உள்ளிருக்கும் காற்று Central chimney மூலம் மேலே வரும். அப்போது புற்றின் உள்காற்றிலிருக்கும் ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைடு, வெப்பம் மற்றும் நீராவி ஆகியன Surface conduits மூலம் புற்றின் வெளிக்காற்றுடன் பரிவர்த்தனை செய்துகொள்ளும். எனவே புத்தம் புதிய காற்று, மீண்டும் புற்ிறுக்குள் Surface conduits, Central chimney மூலம் உள்ளிழுக்கப்படும். எனவே புற்று எப்போதும் சில்லென்றே இருக்கும். எனவேதான், பாம்பு புற்றுக்கு வந்து தங்கிவிடும்.

இதுதான் கரையான் புற்றின் ஏ.சிி. இரகசியம் !!!

அது சரி, இந்த கரையான்கள் மரம் மற்றும் நூல்களை உண்ணுகிறதே, அதை எப்படி செரிக்கிறது தொியுமா ?

பொதுவாக, பேப்பர் மற்றும் மரங்களில், செல்லுலோஸ் என்ற பொருள் இருக்கும். அதை செரிக்கத் தேவையான செல்லுலேஸ் என்ற நொதி நமக்கோ, கரையான்களுக்கோ இல்லை. எனவே கரையான்கள் Protozoa என்ற உயிாியுடன் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, கரையான்கள் தங்கள் குடலில் Protozoa க்களுக்கு உணவும் உறைவிடமும் கொடுக்கும். இதற்குக் கைம்மாறாக, Protozoa க்கள் கரையான்களுக்கு செல்லுலோஸை செரிக்கத் தேவையான செல்லுலேஸ் என்ற நொதியைக் கொடுக்கும். இது ஒரு வகை Mutualism.

மழைக்காலத்தில், ஒரு கரையான் கூட்டத்தில் உள்ள பல மில்லியன் கரையான்களின் எண்ணிக்கை குறைய வேண்டும் என்பது இயற்கை நியதி. எனவே, அவை இறக்கை முளைத்து, ஈசல்களாக வெளியில் வந்து, கொஞ்ச நேரத்திலேயே இறக்கையை இழந்து, ஒரே நாளில் உயிரை விிட்டுவிிடும். ஆனால் ஈசல்கள் வெளியில் வரும் சில மணித்துளிகள், பூமியே பிளந்து ஈசல்கள் வருவது போல பல்லாயிரக் கணக்கில் வெளியில் வரும்.

நாப்பிளக்க பொய்பேசி நவநிதியம் தேடி

நலமொன்றும் இல்லாத நாரியரைக் கூடி

பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போல

பொலபொலென கலகலென புதல்வர்களைப் பெறுவீர்

என்று பட்டினத்தார் கூட புற்றீசலை மேற்கோள் காட்ிடியுள்ளார் தொியுமா ?

அது சரி, பூச்சிகள் Orchestra troop வைத்து, இன்னிசைக் கச்சேரிகள் நடத்துகின்றனவே!!!

அதைப்பற்றி தொிந்து கொள்ள வேண்டுமா ? …. அடுத்த வாரம்!!

Series Navigation

இரா. சீனிவாசன்

இரா. சீனிவாசன்