ப்ரியன்
இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே ஊடகங்கள் அரசியலில் பெரும்பங்காற்றி வருகின்றன.அன்று தேசிய நலனை முன்வைத்து அநேகமான
எல்லாப் பத்திரிக்கைகளும் ஏடுகளும் இந்திய சுதந்திர வேகத்தை ஊட்டி வந்தன,வரவேற்கப்படவேண்டியவை.அன்றிருந்த பத்திரிக்கைகள் ஏடுகள் பல
இன்று இல்லை அல்லது சில கைமாறி இருக்கின்றன.
ஆனால் இன்று உள்ள பத்திரிக்கைகளும் ஏடுகளும் என்னச் சொல்கின்றன அரசியல் சார்பு அவற்றில் எந்த அளவுக்கு இருக்கின்றது.எவை எவை
பத்திரிக்கை தருமத்தை மீறி – நடுநிலமை இல்லாமல் நடந்து கொள்கின்றன எனச் சொல்லுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
இன்று ஏறத்தாள எல்லா ஏடுகளும் பத்திரிக்கைகளும் ஏதாவது ஒரு கட்சியை சார்ந்தே உள்ளன.
தமிழகத்தில் வெளியாகும் தமிழ் பத்திரிக்கைகளில் குறிப்பிடத்தக்கவை
தினமலர்
தினத்தந்தி
தினகரன்
தினபூமி
தினமணி
தமிழ்முரசு
மாலைமலர்
மாலைமுரசு
இதில் தினமலருக்கும் தி.மு.க விற்கும் ஆகவே ஆகாது.தி.மு.க வை நன்றாகத் திட்டி நீங்கள் மடல் போட்டால் கண்டிப்பாக அது தினமலரில்
பிரசுரமாகும்.அதே சமயம் அம்மாவை திட்டியோ எதிர்த்தோ தினமலர் எழுதி பார்த்தவை குறைவு.அதுவும் சமீப காலமாக மிகவும் மோசம்.அம்மாவின்
துதி அதிகமாகப் போய்க் கொண்டிருக்கிறது.இதில் உண்மையின் உரைக்கல் என்ற சொற்கள் வேறு.
தினத்தந்தி சலூன் , டா கடையில் அதிகம் இடம்பிடித்திருந்த பத்திரிக்கை இப்போது ரூ.1 க்கு தினகரன் இதன் இடத்தை நிரப்பிவிட்டதால் என்னவோ
அம்மாவுடன் கூட்டு சேர்ந்துவிட்டதாகவே தோன்றுகிறது.
தினமலரும் தினத்தந்தியும் இப்படிப் போக தினகரன் நிலமையோ வேறு அது கலாநிதி மாறன் கையில் மாறும் முன்பிருந்தே தி.மு.க பத்திரிக்கையாகத்தான் அடையாளம் காணப்பட்டது.இப்போது முழுக்க முழுக்க தி.மு.க செய்திகள் வரும் எனப் பார்த்தால் அ.தி.மு.க வேட்பாளர்ப்
பட்டியல் வெளியிட்டது போன்ற செய்திகளைப் போட்டு நடிநிலைமையாய் செய்திகள் தருவதாய் காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார்கள் மக்கள் நம்ப
மாட்டார்கள்.இவர்கள் செய்யும் ஒரே நல்ல விடயம் ரூ.1 க்கு 16 பக்கங்கள் தருவதுதாம்.(தேர்தல் முடிந்ததும் விலையேறும் என்கிறார்கள் நான்
நம்பவில்லை தொடரும் 1 ரூபாய்க்கு என்றே நினைக்கிறேன்.)
தினபூமி இது தொடங்கப்பட்டபோதே அம்மாவின் விசுவாசியாகவே தொடங்கப்பட்டது இன்னமும் அப்படியே தொடர்கிறது.
கடைசியாக, தினமணி – தினகரன் தினமலர் தினத்தந்தி அளவுக்கு தினமணியின் சுற்று இல்லாவிட்டாலும் இன்றும் நடுநிலைமையாகவே செய்தி
கொடுக்கிறது அதற்குப் பாராட்டுக்கள்.தினமணியைப் பொருத்தவரை எல்.டி.டி.இ செய்திகளுக்கு கொஞ்சம் முக்கியத்துவம் இருக்கும்.அதனால் தவறு
இல்லை தமிழனாய் இருப்பவன் எவனுக்கும் அந்த உணர்வு இருக்கத்தான் செய்யும்.
தமிழ்முரசு இது தினகரனின் மாலைப் பதிப்பு 🙂 அவ்வளவே
மாலைமலர் தினத்தந்தியின் மாலைப் பதிவு.
மாலைமுரசு அதிகம் நான் படித்ததில்லை
அடுத்ததாய் ஏடுகளுக்கு வருவோம்.
நக்கீரன்
குமுதம் – குமுதம் ரிப்போட்டர்
துக்ளக்
தமிழன் எக்ஸ்பிரஸ்
ஆ.வி – ஜீ.வி
இந்தியாடுடே
நக்கீரனுக்கும் அம்மாவிற்கும் பொருந்திப் போனதே இல்லை இது 91 லிருந்து நடக்கும் கணக்கு இதில் பொடாவில் போட்டதிலிருந்து மிகவும்
மோசமாகப் போய்விட்டது நக்கீரனின் அம்மா தாக்குதல்.
அடுத்து குமுதம் – குமுதம் ரிப்போட்டர், ஆட்சியிலிருக்கும் கட்சியை கொஞ்சம் அனுசரித்துப் போகும் பத்திரிக்கை என்ற எண்ணம் எனக்கு எப்போது
உண்டு.ஆனால் இப்போது அம்மா துதி அதிகம் அதிலும் சென்றவாரம் அம்மாவின் பேட்டி.கலைஞர் சொல்லுவதுப் போல் பெட்டி வாங்கிவிட்டார்களா
என எண்ணத் தோன்றுகிறது.
துக்ளக் சொல்லித்தான் தெரியனுமா ?
தமிழன் எக்ஸ்பிரஸ் தினமணியின் சாயல் அப்படியே சார்பற்ற செய்திகள் – பாராட்டுக்கள்
ஆ.வி – ஜீ.வி – இதிலும் அரசியல் சார்பு சிறிதும் இல்லை இந்த வாரம் அம்மா பேட்டியா அடுத்த வாரம் கலைஞர் பேட்டி.கலக்கல்
இந்தியாடுடே – எப்போதும் நடுநிலை – அதிலும் வாஸந்தி கட்டுரை ஆகா அது தகவல் களஞ்சியம்.
ஊடகங்கள் என்றால் தொலைக்காட்சியும் தானே என்பது நீங்கள் கேட்பது கேட்கிறது.
சன்னைப் பொருத்தவரை சன் செய்திகளை அம்மாவை காட்டுவார்கள் ஆனால் தேர்தல் பிரச்சாரம் செய்தார் என்ற மட்டில் இருக்கும் ஆனால் கலைஞர்
செய்தி தவறாமல் இடம்பிடிக்கும் குறைந்தது 1 நிமிடங்களாவது.சந்திப்போம் போன்ற அரசியல் நிகழ்ச்சிகள் சன் நியூஸுக்கு தாரை வார்க்கப் பட்டதால்
அதிகம் அரசியல் வாசம் இல்லை.போதாதிற்கு நேற்று கலைஞர் சேப்பாக்கத்தில் பிரச்சாரம் செய்ததை நான்காவது செய்தியாக விளம்பரத்திற்கு முன்
காட்டினார்கள் என்ன திடார் மாற்றம் முதல் செய்தியாக அல்லவா வரவேண்டும் (ரூ 600 கோடி செய்யும் வேலையாக இருக்கும்!).
ஜெயா செய்திகள் இது சன் செய்திகளை விட மட்டம் சன் செய்திகளில் அரசியல் சார்ப்பாக செய்தி தந்தாலும் அம்மா ஆதரவாளர்க்கு மற்றும்
கலைஞர் எதிர்ப்பாளர்களுக்கு மட்டுமே எரிச்சல் கொடுக்கும்.ஆனால் ஜெயாவில் ஒன்றா அம்மா துதி இல்லையே தி.மு.க தூற்றல்.அ.தி.மு.க
அன்பர்களே ‘ஓவர் டோஸ் ‘ என்பதாய்த்தான் இருக்கிறது அவர்களின் நடுநிலைமை.
ராஜ் – பொறுத்தவரை நடுநிலை எனச் சொல்லிக் கொள்ளலாம்.சென்ற பாராளுமன்ற தேர்தலில் அவசர அவசரமாக பா.ஜ.க வில்
இணைந்தார்கள்.அப்புறம்தான் தெரிந்தது இணைந்தற்கான காரணம் விசா , ராஜ் மியூசிக் தொலைக்காட்சிகள் நடத்த அனுமதிப் பெறாமாலேயே
நடத்திக் கொண்டிருந்தார்கள் மற்றும் செய்தி ஒளிப்பரப்பிற்கான உரிமத்தை புதிப்பிக்க கூட ஆவணம் தாக்கல் செய்யாமல் இரண்டு வருடங்கல் பழைய
உரிமத்திலேயே செய்தி ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள்.உச்ச நீதிமன்றம் தலையிட்டு உரிமம் நீக்க செய்திகள் இல்லாமல் இருந்தது இப்போது
மீண்டும் செய்திகள் நடுநிலையாக இருக்கிறது சந்தோசம் தொடர்ந்தால்.
விஜய் – தமிழில் செய்திகள் தந்தவரை நடுநிலையாகவே இருந்தது என்.டி.டி.வி நிறுவனமே விஜய்க்கும் அதன் தாய் தொலைக்காட்சி ஸ்டாருக்கும்
செய்தி தயாரித்து தந்தது.என்.டி.டி.வி தனியாக தொலைக்காட்சி ஆரம்பிக்க செய்திகள் நிறுத்தப் பட்டன.விஜய் மீண்டும் செய்திகள் தொடங்கினால் ராஜ்
போலவே நடுநிலை செய்திகளை தர இயலும்.
எப்போதும் கலைஞருக்குத்தான் பத்திரிக்கைகளின் ஆதரவு இருக்கும் இந்தமுறை எந்த காரணத்தாலோ அம்மாவிற்கு ம் பார்க்கலாம் என்ன நடக்கிறது
என்று.
—-
mailtoviki@gmail.com
- சூடேறும் பூகோளம், மிகையாகும் கடல் உஷ்ணம்,உருகிடும் பனிப்பாறை, தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-2
- சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது -5 (சென்ற வாரத் தொடர்ச்சி)
- சித்திரையில்தான் புத்தாண்டு
- பெரியபுராணம் – 84 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- வாழும் என் கவிதைகளில் ( மூலம் : அந்தானாஸ் ஜோன்யாஸ் )
- மிஸ்டர் இந்தியா !
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-16) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- கீதாஞ்சலி (68) பன்னிற வடிவப் படைப்புகள் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- ஆத்மா, அந்தராத்மா, மஹாத்மா, பரமாத்மா என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்… -1
- ஆத்மா, அந்தராத்மா, ம ?ாத்மா, பரமாத்மா என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்… 2
- புதிய காற்று & இஸ்லாமிய இலக்கியப் பேரவை இணைந்து நடத்தும் இஸ்லாமியக் கருத்தியல்-கலந்துரையாடல் இருநாள் அமர்வு—2006 மே இறுதிவாரம்
- மலர்மன்னனின் உள்ளுணர்வும், உண்மைக்கு மாறானதும்
- கடிதம் – ம வெங்கடேசன் அவர்கள் எழுதிய ஈ வெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்
- அவுரங்கசீப்
- அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பரே…நண்பரே.. நண்பரே….! – 1
- சிற்றிதழ்களின் சிறந்த படைப்புகள் – 2004
- ‘காலத்தின் சில தோற்ற நிலைகள் ‘ : ‘ரிஷி ‘ யின் நான்காவது கவிதைத்தொகுப்பு
- எது உள்ளுணர்வு ?
- ஐந்தாவது தமிழ் குறும்பட, விவரணத் திரைப்பட விழா ஆவணி 2006
- மீண்டும் வெளிச்சம்
- இரவுகள் யாருடையவை ?
- என் பார்வையில் : ஊடகங்களின் அரசியல் நடுநிலைமை – ஒரு கேள்விக்குறி – ?
- புதிய பெயர், புதிய தோற்றம், புதிய குடும்பம் ஏன் ?
- கற்று மறத்தலும், முன் நோக்கிச் செல்லுதலும் ( மூலம்: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் )
- கோவா புனித விசாரணையும் தொடரும் புனித விசாரணைகளும் – 2
- புலம் பெயர் வாழ்வு (7) – தலைமுறை இடை….வெளி
- வேலையின்மை கிளர்ந்தெழும் பிரான்சு இளைஞர்கள்
- தனுஷ்கோடி ராமசாமி யின் ‘தீம் தரிகிட ‘- சிறுகதைத் தொகுப்பு சுட்டும் மனித உரிமை மீறல்களும், அதற்கான தீர்வுகளும்.
- ‘நல்லூர் இராஜதானி:நகர அமைப்பு ‘ – அத்தியாயம் எட்டு: பண்டைய நூல்களும் கட்டடக்கலையும்!
- கன்னி பூசை
- பறவை
- திரவியம்
- விஞ்ஞானியின் வினோத நாக்கு
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 16
- தவ்ஹீது பிராமணீயம்
- எடின்பரோ குறிப்புகள் -11
- இன்னும் ஒரு ரத்த சாட்சி – காத்தாடி மலையில் இருந்து
- எங்கே செல்லுகிறது இந்தியா ?
- கோட்டில் குந்தியிருந்த எண்ணற்ற புள்ளிகளின் மனப்பொழுதின் பகிர்வுகள்
- உயர் கல்விக்கூடங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு.
- காந்தியும் சு.ரா.வும்
- சரத்குமார் விலகல் -திமுகவின் கெஞ்சல்
- ஆக்டே ரிபாத்தும் அடியேனும்
- கடித இலக்கியம்
- ராகு கேது ரங்கசாமி – 5 ( முடிவுப் பகுதி )
- அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ! நண்பரே….நண்பரே ….நண்பரே…! – 2
- நானும், கஞ்சாவும்
- தேவதைகளின் சொந்தக் குழந்தை — விமர்சன கூட்டம்(பன்முக விமர்சனங்கள்)