என் கண்ணில்

This entry is part [part not set] of 37 in the series 20030309_Issue

பவளமணி பிரகாசம்


அன்று முதல் இன்று வரை
காதல் வயப்பட்ட
கன்னியரும், காளையரும்
கனவுலகில் மிதக்கின்றார்,
கற்பனையில் பறக்கின்றார்,
கவிதையில் பேசுகின்றார்,
தலைமுடியை தங்கத்தில்
பதித்து அணிகின்றார்;
காதங்கள் கடந்து சென்று
சாகசங்கள் புரிகின்றார்;
நிலவை, நதியை,
கல்லை, மண்ணை
தூது அனுப்புகின்றார்;
கடைக்கண் பார்வையில்
விண்ணை சாடுகிறார்;
அடங்காத காளையை
பிடித்து அடக்குகிறார்;
தனியே சிரிக்கிறார்,
தனக்குள் பேசுகிறார்;
பாலும் கசக்கவே,
படுக்கை நோகவே,
பித்தாகிப் போகிறார்,
ஓர் நினைவாய் இருக்கிறார்;
கூண்டுக் கிளியாய்,
தூண்டில் புழுவாய்,
அனலிடை மெழுகாய்
உருகித் தவிக்கிறார்;
காண்பதும், கேட்பதும்,
உணர்வதும், உரைப்பதும்
மாய மந்திரம் போலும்
அவர்கட்கு மாத்திரம்
முற்றிலும் வேறாகிறது;
சுற்றம் மறந்து,
சொந்தம் துறந்து,
பகுத்தறிவை இழந்து,
ஒன்றே குறியாய்,
அதுவே வெறியாய்,
அனைத்தும் துச்சமாய்,
மோனத் தவத்தில்,
மோக சுரத்தில்,
மூழ்கித் தவிக்கும்
காதலர்களை மூடர்கள்,
சோம்பர்கள், வீணர்கள்,
பித்தர்கள் என்றெண்ணி
எள்ளி நகையாடினேந்
மின்னலாய் என் கண்ணில்
நீ தோன்றும் வரை.

pavalamani_pragasam@yahoo.com

Series Navigation

author

பவளமணி பிரகாசம்

பவளமணி பிரகாசம்

Similar Posts