என்னைச் சுட்ட பிஞ்சுகளே! தீயே உன் மேல் கோபம் !

This entry is part [part not set] of 41 in the series 20040729_Issue

லேனா கண்ணப்பன்


====

மண்ணைச் சுட்டெரிக்கும் சூரியனே !
விண்ணைக் கருத்தெரித்தெ தனாலே ?
காற்றின் துணையிருந்த தனாலா ? இல்லை
கூரையுட னிருந்த உறவினாலா ?

அன்னையவர் என்ன பாவம் பண்ணினர் ? கொடிய தீயே !
இச்சிறு பிஞ்சுகளைக் கொண்டெரித்து விட்டாயே !
உனக்கோ எத்தனை வாய்ப்பிருந்தும்
எம் பிஞ்சுகளை ஏன் கொண்டாய் ? கருந் தீயே !

சத்துணவு கொள்ள யிருந்த குழந்தைகளை
உன் சத்துணவாகக் கொண்டாயோ !
பள்ளியில் அன்றாடப் பாடம் கற்க யிருந்த எஞ் சிறார்களை
கொள்ளியாகப் போட்டு விட்டாயோ !

கும்பகோணக் கொடுமைக்குக் கொடிய
கருவான கொடூரத் தீயே !
பச்சிளம் பாலர்களைப் பழிகொண்டதெ தனாலே ?
போன வருடம் போகியில் ‘போட ‘ மறந்த தாலா ?

இரக்கமற்ற அரக்கத் தீயே !
உற்ற நொடியில் உனையாட் கொள்ள
என் உளவாளிகள் இல்லாமல் போனார்களே !

என் கண்ணீரைக் கேள் ! அது உரைக்கும் !
எம் இளஞ் சிறார்கள், இது வரை கண்டதில்லை !
இக் கரும்புகை மூட்டங்கள் !

வெள்ளை யுள்ள மில்லா வெருந் தீயே !
துடிப்பான பாலரைப் பெற்ற பெற்றோரைத்
துயரத் துடிப்பால் துவங்க விட்டாயே !

உறுதியாக ஒன்று கூறுகிறேன் ! தயவு செய்து,
இனி நீ ! விறகெரிப்பதுடன் நின்று விடு !

கருகிய பிஞ்சுகள் கருங்கட்டை களாய்க் காட்சியளிக்கக்
காரணம், இரக்கமி ல்லாத இந்த இறைவனா ? இல்லை
தீ உருவில் வந்த எமனா ?

இக்கணம் என் இதயம் கனக்கிறது !
அக்கணம் அன்னைய வரடைந்த ஆறாத் துயரத்தினாலா ? இல்லை
எக்கணம் இந் நிலை மாறும் எம் தாயகத்தி லென்பதி னாலே !!!!

– அன்புடன்
லேனா கண்ணப்பன்
ஜூலை 17, 2004
lkannappan1@yahoo.com

Series Navigation

லேனா கண்ணப்பன்

லேனா கண்ணப்பன்