என்னவளுக்கு
Published June 26, 2003 • By
பசுபதி
பசுபதி

காலைக் கதிரோன்போல் கண்ணால் எனைஉயிர்க்க
வாலையவள் போலுண்டோ மண்ணுலகில் ? — கோலவிழி
என்றன்று கொஞ்சவில்லை; எண்ணுகிறேன் அவ்வுவமை,
என்னவள் இல்லாத இன்று.
(ஆதாரம்: Leonard Cohen ‘s ‘For Anne ‘)
~*~o0o~*~
pas@comm.utoronto.ca