உலகப் பயங்கரவாதப் பூச்சாண்டியும் வர்க்கப்போரும்–மூன்றாவது உலகப்போராய் நடைபெறும் மூலதனக்காப்பு யுத்தம்.

This entry is part [part not set] of 39 in the series 20050203_Issue

ப.வி.ஸ்ரீரங்கன்


‘Ein Tropfen ist uns einen Tropfen Blut wert ‘ : எமக்கு ஒரு துளி எண்ணையோ ஒரு துளி குருதிக்குச் சமனமாகும் Clemenceau அமெரிக்காவில் இருந்து ,1918 இல்பிரஞ்சுப் பிரதமர் ஊடநஅநெஉநயர ஒரு உரையாற்றலில்கூறிய மிகப் பிரபல்யமான சொற்றொடர், இது.

‘ ஒரு தேசிய இன அங்கீகாரம் எண்ணை வளத்தை வைத்தே உலகத்தில் செல்லுபடியாகும் ‘ இது அன்றைய அமெரிக்க ஜனாதிபதி வில்சன்.

எண்ணை கிடைக்காத பட்சத்தில் இராணுவ போர் ஜந்திரம் நின்றநிலையில் நிற்கவேண்டியதுதாம். வியாட்நாமில் அமரிக்கத்தோல்விக்கும் இந்த எரிபொருள் சக்தியும் ஒரு காரணமென்பதை நவீன போரியல் வல்லுனர்கள் இன்றும் கூறுகிறார்கள்.முதலாம்,இரண்டாம் உலகப்போர்கள் எண்ணை வளத்தை பெருமளவில் கணக்கிலெடுத்தே ஆரம்பிக்கப்பட்டது.எண்ணை விலை,எண்ணை வள கட்டுப்பாடு யாவும் உலகை வெற்றிகொள்ளல் மூலம்தம்மால் கையகப்படுத்தமுடியுமென ஜேர்மனிய ஆளும் வர்க்கம் கருதியது,முதலாம் உலகயுத்தத்திற்குப்பின்பு அமெரிக்கா எண்ணை வளத்திற்காக பேய்போல் அலைந்து தூரகிழக்கு,அண்மைக்கிழக்கு நாடுகளை தினமும் வேட்டையாடி வந்தது.

இது சமகால வரலாறு.

11 செப்ரெம்பருக்குப்பின்னோ பற்பல அரசியற் கருத்தியற் வியூகங்கள் உலகரங்குக்கு வந்துள்ளது.அமெரிக்க| ஐரோப்பிய ஆளும் வர்க்கங்கள் இதன் படைப்பாளிகள்.

‘ இது பயங்கரவாதத்திற்கு எதிரானபோர்!,இஸ்லாமுக்கெதிரானதோ அன்றி ஒரு இனத்திற்கெதிரானதோ அல்ல. ‘ ஒரு கையில் உயிர் கொல்லி ஆயுதம் மறு கையில் உணவுப்பொட்டலமும் கூடவே பைபிள் சார்ந்த அரசியற்தத்துவ விளக்கமும்,மேல்நிலை வல்லரசு அமெரிக்காவிடம்.

உலக ஆளும் வர்க்கம் தனது வர்க்க தோழமையுடன் கூட்டாகப்போரிடும் இன்றைய சூழலில்,எப்படியெல்லாம் கருத்துக்களை முன்தயார்படுத்தி அவர்தம் ஊதுகுழல்கள் மூலம் நமக்குள் கொட்டுகின்றார்கள்!

என்ன செய்ய ? எப்படி எதிர்கொள்ள ?

கருத்துக்களால்,நடைமுறையால்,செய்கையால் எதிர்கொள்ள ? கேள்விகள்,கேள்விகளாகவே நீண்டபடி. நாம் ஆதரவற்றவர்களாக நடாற்றில் தள்ளிவிடப்பட்டுள்ளோம்.மனித நேயமா ?அது அமெரிக்கர்கள், ஐரோப்பியர்கள் அழிந்தால்-அழிவுக்குள் நேர்ந்தால் உலக அரங்குக்குள் வரும்.அவ்கானிஸ்தானில் மானுடம் அழிந்தாலென்ன ,ஈராக்கில்அழிந்தாலென்ன ? இவையெல்லாம் யுத்த அளவுகோலாம்! இந்நாடுகளில் மரணிக்கும் மானுடர்களுக்கு மெளனஅஞ்சலியை இந்த ஐரோப்பிய நாடுகள்,அவர் – தம்தொழிற்சாலைகள் – கல்விக்கூடங்கள்- மதாலயங்கள்- பாராளுமன்றங்கள் செய்யவே செய்யா.

ஆனால் ‘ 11 செப்ரெம்பர் ‘ என்பது கலாச்சாரமட்டத்தில் கருத்துக்களாக்கப்பட்டுள்ளது, அகராதியில் சொற்களஞ்சியமாக்கப்பட்டுள்ளது . இந்த ‘ பதினொன்று ‘ மனித குலத்துக்கு விரோதமான பயங்கரவாதிகளின் தாக்குதல்,சமாதானமாக வாழும் சுதந்திரத் திறந்த சமூகத்திற்கு எதிரான காட்டுமிராண்டித்தாக்குதல் எனும் விளக்கமும் வேறு.அமெரிக்காவில் நெறிகட்டினால் ஐரோப்பாவில் மட்டுமல்ல ஆசியாவில்கூட நோவு வந்துவிடுகிறது!

உயிரிழப்புகள் எங்கு நேரிடினும் நாம் நொந்துகொள்வோம்.அதுவே மானுடப் பண்பு. ‘யாதும் ஊரே யாவரும் கேளீர் ‘ எம் மூதோர் கூறியதும் இ/தே. ஆனால் மானுடநேயம் மட்டுமல்ல இந்தப்ப+மிப்பந்தின்மீதுள்ளனைத்து விடயங்களுமே வர்க்கம் சார்ந்தது.இதனால் ஆளும்வர்க்கம் தனது வலியை எமதாக்க முனைகிறது,இதில் ஓரளவு வெற்றியும் கண்டுள்ளது.தனதுசுமையை எமக்குள் அமுக்கி மூலதன நெருக்கடியை உலக மொத்தமக்களுக்குமான நெருக்கடியாக்கி வெற்றியும் கண்டுவிட்டன இந்த உலக ஆளும் வர்க்கப்பேய்கள்.

இது எப்படிச்சாத்தியமாச்சு ? ,உலக வர்த்தகக்கழகக் கட்டடத் தகர்ப்புக்கும் இந்த ‘உலகப் பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தம் ‘ எனும் அரசியற்கருத்தாக்க உளவியலுக்கும் என்ன தொடர்பு ?, இது சார்ந்து மேற்கொள்ளப்படும்செயற்தந்திர விய+கத்திற்கும் போருக்கும் என்ன தொடர்பு ?

‘யுத்தத்தினது நோக்கை அரசியற் கோரிக்கைக்குள்ளும் அரசியற்கோரிக்கையை பொருளியல்நலன்களுக்குள்ளும் தேடணும் ‘ இதை இடர்படும் நாம் கருத்திற்கொண்டு மேலே செல்வோம்.

ஐரோப்பிய–அமெரிக்க நலன்களும்,மோதல்களும்:

—-

;இன்று நடைபெற்று வரும் உலகுதழுவிய அதிநவீன யுத்தமானது வெறும் பொருளீட்டு நோக்குடையதன்று,மாறாக பற்பல நோக்கத்தை மையமாகக்கொண்டு விய+கங்கொண்டுள்ளது. இதை மனதிலிருத்தி க்கொண்டால் மட்டுமே இந்த ஜனநாய முகமூடியின் பின் எந்த முகமுள்ளதென அறியமுடியும்.

‘அரபு நாடுகளின் எரிவாயு மற்றும்எண்ணை வள வயல்களை சுதந்திரமாக பராமரிக்கவும்,கையகப்படுத்தவும் அவ்கானி;தான் நமக்கான தோழமை நாடாகவேண்டும். ‘

‘ஈராக்கை மீளக்கட்டியெழுப்பும் பணிக்கு ஜேர்மனிக்கு ஒப்பந்தங்கள் தராத அமெரிக்காவுக்கெதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத்தொடுக்கப்படும். ‘

‘அமெரிக்காவினது தர்மயுத்திற்கு உதவாத எந்த நாட்டிற்கும் நாம் ஒப்பந்தம் தருவதாகவில்லை!முடிந்தால் வழக்கைத்தொடருங்கள் ‘

‘ஐரோப்பியக்கூட்டமைப்பு தனது பாதுகாப்பிற்கு ,உலகதரத்திற்கு ஏற்றவாறு(அமெரிக்காவுக்கு நிகரான ?) கூட்டு இராணுவ அமைப்பை உருவாக்கும்.அதனுள் ஜேர்மனி,பிரான்ஸ்,பெல்ஜியம் ஆகிய நாடுகளின் இராணுவங்கள்இணைந்துகொள்ளும் ‘

மேற்காட்டிய கோரிக்கைகள் ஐராப்பிய கூட்டமைப்புக்கும் அமெரிக்காவுக்குமுடையது.

இவ்வரசியற்கோரிக்கையின் பொருளியல் நலன் அப்பட்டமானதாகத் தெரிவதில் வியப்பில்லை.

அவ்கானில்-ஈராக்கில் பல்லாயிரம் உயிர்கள் பலியாக்கப்பட்டது எதற்காக ? இப்போது எது பயங்கரவாதம் ? இதை அமுக்கிவிடுவதற்கு அல்லது திசைதிருப்பிவிடுவதற்கு ஒருசதாம்–பின்லாடன் வகையறாக்கள் தேவைப்படுகின்றது.

கருத்தியில் கட்டுமானமும் யுத்தமும்:

—-

சமூக வாழ்நிலையே சமூகவுணர்வை நிர்ணயிக்கின்றது.

எத்தகைய வாழும்நிலை நம்முடையது ?

மனிதர்களாகிய நாமே வரலாற்றை உருவாக்கிறோம்,ஆனால் நாம் விரும்பியவாறல்ல,நாமாகவே தேர்ந்துகொண்ட சூழ்நிலமைகளின் கீழுமல்ல.மாறாக,எமக்கு நேரெதிராகக்காணப்படுகின்ற கடந்த காலத்திலிருந்து கைமாற்றித்தரப்பட்ட சூழ்நிலையின் கீழ் வரலாறு உருவாகின்றது.

இப்போது மேலே கேட்கப்பட்ட கேள்விக்கு வருவோம். எத்தகைய வாழ்சூழல் நம்முடையது ?

வேலைவேண்டப்படுகிறோம்,வீடு மீள்கிறோம்.வேலைக்குப் போகவில்லை,வேலையில்லை.

கூட்டில் வாழ்கிறோம்,மறுஉற்பத்தியல் ஈடுபடுகிறோம்,புதியவுயிர் ப+மிக்கு வருகிறது.எமக்கான எதிர்காலமாக வளர்க்கிறோம்,க்டப்படுகிறோம்.கடமையாய் பாதுகாத்து இச் சமூகத்திற்கு ஒப்படைக்கின்றோம்.

முதலாளிய வர்த்தகச்சமூகமோ எமக்காய் பற்பல வர்ணங்களை -கருத்துக்களை நுகர்வுச்சந்தைக்குள் கொட்டுகிறார்கள்.நாம் நுகர்கிறோம்,பிளவுபட்டுக்கிடக்கிறோம்,மதங்களின்பேரால் நிறங்களின்பேரால்கூடவே,சாதியின்பேரால்.புல்லுக்கட்டை காட்டியதும் மாடுகள் ஓடோடி வருவதுபோன்று நாமும் நுகர்வுக்காக ஓடோடிக்கொண்டிருக்கிறோம்.

இத்தகைய வாழ் சூழலில்: ஒரு கொஞ்சம் பாசம்,மறு கொஞ்சம் மோசம். இவ்வளவுதாம் வாழ்வு ? மறுப்பதற்குண்டு. ஆனால், உண்மையில் இ/துதாம் நமது வாழு;நிலை.;

உலகமும்(புறவுலகம்) உயிரும் அதன் பெளதிக இருத்தலும் இவ்வகைச்சூழலுக்குள் இவ்வளவுதாம். அதாவது நமது வாழ்சூழலில் நாமுணரும் உலகம் இவ்வளவுதாம். எமக்கான உணவை,உடையை,உறையுளை,ஆத்மீகத்தேவையை–ஓய்வை,பொழுதுபோக்கை,கல்வியை-அறிவை,பிறவுணர்வுத்தேவையை இன்னபிற சகல தேவைகளையெல்லாம் ஆளும் வர்க்கம் நமக்காக நுகர்வுச்சந்தையில் கடைவிரித்துள்ளது.நாம் இதற்காக சகல மட்டங்

களிலும்(கல்விக்கூடங்கள்-கலாச்சாரமட்டம்.) தயார்படுத்தப்படுகிறோம்,அவ்வளவுதாம்.

இதனாற்றான் புலம்பெயர்நாடுகளிலுள்ள தமிழ் ஊடகங்களில்சதாம் கொல்லப்பட வேண்டியவர்,அமெரிக்கா ஜனநாயக நாடு,எனும் நேயர்கள்ஒருபடிமேலே சென்று ‘சும்மா கிடந்த அமெரிக்கச் சங்கை ஊதிக்கெடுத்தான் பின்லாடன் ‘ என்று கூறுகிறார்கள்.

கவனியுங்கள்: அமெரிக்கா சும்மா கிடந்ததாம்!

இதைத்தாமே அவர்கள் வேண்டி நிற்கிறார்கள்.

‘துன்மார்கருடைய பலி கர்த்தருக்கு அருவருப்பானது,செம்மையானவர்களின்ஜெபமோ அவருக்குப் பிரியம். ‘–(பைபிள்:நீதிமொழிகள்15,அதிகாரம்15:8)

இன்றைய மேற்குலக மூலதன எஜமானர்கள்(செம்மையானவர்கள்)ஜெபம் சொல்லிக்கொண்டே நம்மை அழித்துப் பலி செய்வது நமக்குப்புதிதல்ல.கொலம்பஸ்அமெரிக்காவைக்கண்டுபீடித்தார்.ஐந்தாம் வகுப்பில் படித்தோம்,ஆனால்பெரியவர்களாகியும் நம்மால் நமது வரலாற்றை அறியமுடியவில்லை.

அவர்களது ஜெபமோ அவ்வளவு வலிமையானது! அது கர்தருக்குப் பிரியமானது(கர்த்தா; சமன்உடமை வர்க்கம் தர மூலதனம்).கோடிக்கணக்கான செவ்விந்தியர்களை,அவுஸ்ரேலிய பழங்குடிமக்களைக் கொன்று குவித்தவர்களின் வாரிசுகள் இப்போது மிக வேகமாக மகாப்பெரிய அழிவு ஆயுதங்களை தம்மைத் தவிர மற்றய நாடுகள் வைத்திருக்கப்படாதாமென சமாதான சங்கீதம் பாடுகிறார்கள்.இதுதாம் இன்றைய ஊடக யுத்தம்.

ஆளும்வர்க்க ஜனநாயகம்:

—-

‘வரலாறு கண்ட யுத்தங்களெல்லாம் வர்க்கங்களுக்கடையிலானது ‘

வரலாறுதோறும் வினை விதைத்தவர்கள் கீரோசிமாவையும்–நாகசாகியையும் சமீபகால வியாட்நாம் மற்றும்ஈராக்,யுக்கோஸ்லாவியா,அவ்கானிஸ்தான் என்று பல் இன-நாடுகளை கொடும் அணுயுத்தம் செய்து இன-கலாச்சாரஅழிவுக்குள் தள்ளிய ஐரோப்பியஅமெரிக்கர்கள் இப்போது இவ் கொடூரமான,மானுடவிரோதயுத்தத்தை,பயங்கரவாதத்தை-ஆளும்வர்க்க பாசிசத்தை ‘யுத்த அளவுகோல் ‘ என்று விவாதிக்கிறார்கள். இதுபயங்கரவாதமில்லையாம்! மாறாக யுத்தநெறியாம்,(ஜேர்மனிய-அமெரிக்கப்பத்திரகையாளர், மற்றும்ஜேர்மனுக்கான அமெரிக்கத்துதுவர் கலந்துரையாடல்.டிசம்பர்2003,வுஏ:று னு சு.) அதாவதுஐரோப்பாவும்,அமெரிக்காவும் செய்வது யுத்தஅளவுகோல்|சமன்:யுத்தநெறி. அதையே மற்றய இனத்தவர்கள் செய்தால் பயங்கரவாதம்.

இதுதாம் ‘ கவ்போய் முதலாளிய ‘ஜனநாயகம்.

ஆளும்வர்க்கங்கள் தமது முரண்பாட்டை-ஆட்சிக்கு வரும் முரண்பாட்டை,நெருக்கடியை தீர்க்க எப்பவும் யுத்தத்தை நடாத்துவார்கள். உலக மேலாதிக்கத்திற்கேற்பட்ட நெருக்கடியைத்தீர்க்க றுழசடன வுசயனந ஊநவெசந தாக்குதல் பயன்பட அனைத்து தேசிய விடுதலை மற்றும் பொருளாதாரவாத எதிர்ப்புப் போராட்டங்களும் பயங்கரவாதப்பட்டியலில் போய் சேர இனவொடுக்குமுறை நிலவும் நாடுகளெல்லாம் ஜனநாயக நாடுகளாயின.

மூலதனம்-குவிப்பு -காத்தல் சமன்: ஜனநாயகம்!

மூலதனம் தன் கரங்களை நேற்றுவரை குருதியில் நனைத்தபடியே…இன்று ஈராக்கில் புதிதாய் குருதியாற்றைத் தோண்டவில்லை. என்றபோதும்,ஆளும்வர்க்கச் செயற்பாடுகள் கடந்த காலங்கள்போன்று இன்றில்லை.இது மிகவும் கவனத்தக்குரியது.

கடந்த காலத்தில்(இரண்டாம் மகாயுத்தத்திற்கு முன்) நிச்சியமாக,நிதர்சனமாக இனம் காணக்கூடிய ‘வர்க்கத்தோற்றம் ‘ இன்று மிக மிக மங்கலாகக்கூட தோற்றமளிக்கவில்லை.

இதனால், யார் இந்த ஆளும் வர்க்கமென வினாவத்தோன்றுகிறது! இந்தத்தோற்றப்பாடே ஏகாதிபத்தியத்தின் இன்றைய தர்க்காலிக வெற்றியுமாகும்(இதற்காக ஏகாதிபத்யம் கோடி கோடியாய் செலவு செய்து கருத்தியல் யுத்தம் நடத்தியபடி…) இந்தத்தோற்றப்பாடு முழு மக்கள் சமூகத்தையும் தனக்குள் அமுக்கிவிட்டதாகப் பாசாங்கு செய்கிறது.சுரண்டுபவர்களாகவும்,சுரண்டப்படுபவர்களாகமுள்ள இந்த மக்கட் சமூகத்ள் இது வரைகாலமும் நிலவி வந்த வர்க்கவுணர்வு மழுங்கடிக்கப்பட்டு பாரிய மாற்றம் கண்டுள்ளது! இது கைத்தொலைபேசிக்குள்ளும்,கணீணி,இணைய வலை மற்றும் ‘வர்த்தகக் கழியாட்டகலைக்குள்ளும் ‘ நாளைய சந்ததியைத் தள்ளி எதிலுமே பொறுப்பற்ற அதி தனிநபா; சுதந்திர- சுயநலமிகளாக்கி விட்டுள்ளது.

இதனால் வர்க்கவுணர்வுமழுங்கடிக்கப்பட்ட மக்களால் நாட்டு நிலைமை, வறுமை,வேலையில்லாத்திண்டாட்டம்,யுத்தமென நகர்வதை முழுமையாகப் புரிந்து கொள்ளப்போதிய திறன் இல்லை. இந்தப்போக்கால் சந்தைப்பொருளாதாரம் தற்காலிக வெற்றிபெற்றுள்ளதை நாம் ஒத்துக்கொண்டேயாகவேண்டும்!இந்த வெற்றியை மேற்குலக பல்கலைக்கழக மட்டம் மார்க்சிசத்தின் தோல்வியாகச்சித்தரிக்க முனைகிறது, இதை ஜே ர்மனிய பல்கலைக்கழகப் பேராசிரியன் பீட்டர் சிமா இப்படிக்கூறுகிறான்: ‘மார்க்சியமென்பது இன்னும் சிலகாலம் புத்தக அலுமாரியிலிருக்கும் பின்பு பொருட்காட்சிக்கூடத்தில் இருக்கும். ‘ இந்த நிகழ்வுப்போக்கானது திட்டமிட்ட-மிக நுணுக்கமான ,விஞ்ஞுானபூர்வ முதலாளியச் சுழற்சியால் நிகழ்கிறது. இன்றைய நாளில் நேரடியாய் மனித விரோதப்போக்கைக் காட்டிக்கொள்ள ஆளும் வர்க்கம் முயற்சிக்காது மிகத் தந்திரமாகச் செயற்படுவதை கடைப்பிடிக்கிறது.இதன் உள்ளார்ந்த தந்திரமானது முழு மக்களுக்குமான ஜனநாயகம் ,சமத்துவம், சுதந்திரம் என்ற அரசியற்கருத்தாங்களால் காப்பாற்றப்பட்டு வருகிறது.

மூலதனத்தைப் பெருக்கிட,சந்தைவாய்பை காத்திட, உலகப்பொதுச்சொத்தான மூலவளங்களைத் தாமே தொடர்ந்து கொள்ளையிட யுத்தம் செய்யும் இன்றைய சூழலுக்கு வேறு வகையான தந்திரங்களைக் கட்டவிழ்துவிடுகிறார்கள்.அமெரிக்க-ஐரோப்பிய கூட்டு நடாத்தும் இன்றைய அதிநவீன தாழ்அணுயுத்தங்களுக்கு ‘பயங்கரவாதத்திற்கெதிரான போர் ‘ என்ற அரசியற்-சமூக உளவியற் கருத்தாக்கம் வலுவாக்கப்பட்டுள்ளது. இது சாரம்ஸமான ‘ஜனநாயகம் ‘ என்ற கோட்பாட்டு உத்தியை மறைமுகமாகப் பிரதிநித்துவம் செய்கிறது ,முதலாளித்துவ உற்பத்திப்பொறிமுறை இதனாற்கட்டிக்காக்கப்படுகிற முகாந்திரம் வலுவாக்கப்பட்டுள்ளது. இதுநாள்வரையான ‘ஜனநாயகத்திற்கு எதிராகச் செயற்படும் நாடுகள் ‘எனும் கருத்தாக்கம் இப்போது ‘பயங்கர வாதத்திற்கு ஆதரவான நாடுகள் ‘ என்பதில் போய்முடிந்துள்ளது.

நடப்பது மூன்றாவது உலகமகா யுத்தம்:

—-

இன்று நடைபெற்று வரும் அவ்கான்-ஈராக்கிய ஆக்கிரமிப்பும் யுத்தமும் மற்றும் நடைபெறப்போகும் சூடான்,சோமாலியா, லிபியா, ஈரான்-வடகொரியா யுத்தங்களும்,இரண்டாம் உலகமகா யுத்தத்திற்குப் பின் நடைபெற்ற 184 பாரிய-சிறிய அளவிலான யுத்தங்களும் பழைய முதலாம்,இரண்டாம் யுத்த வடிவத்தை தகர்த்து விட்டு புதிய மகாயுத்த வடிவத்தை எடுத்துள்ளது! ஆனால் உள்ளடக்கம் ஒன்றுதாம்.தோற்றத்தில் இ/து உலக மகாயுத்தமாக இருக்காது,ஆனால் 1945 க்குப் பிறகு நடைபெறும் அனைத்து யுத்தங்களும் இந்த மூன்றாவது உலக மகாயுத்தத்தின் புதிய வடிவத்தைக்கொண்டே நடைபெறுகிறது. இதன் சாரம்மூலதனப்பாச்சலுக்கெதிரான அனைத்து நாடுகளையும்-இயக்கங்களையும்கொய்தெறிவதே.இந்த யுத்தங்களின் விருத்தி ‘பயங்கர வாதத்திற்கெதிரான யுத்தக் கூட்டு ‘ என்ற முக மூடியைத் தாங்கி உலக மகாயுத்தமாக நடைபெறுகிறது, இதுதாம் உண்மை!

ஏகாதிபத்திய ,நவகாலனித்துவ பல் தேசியக்கம்பனிகளுக்கெதிரான செயற்பாடுகள்,போர்கள்,தேசியயெழிச்சிகள்,இடைவிடாத தன்னெழிச்சியான எதிர்ப்புகள், உலக தழுவிய தன்னார்வக்குழுக்களின் எல்லை தாண்டிய செயற்பாடுகள், இவற்றுக்கும்பல் தேசியக்கம்பனிகளுக்கும் நேர்|எதிராகவும் பகை முரண்கள் நிறைந்திருப்பினும் இவ் எதிர்ப்பியக்கங்களுக்குள் ஊடுருவிய பல்தேசியக்கம்பனிகளின் புத்திஜீவிகள்-மாபியாக் குண்டர்படைகள் குறிப்பிட்ட எதிர்ப்பியக்கங்களை ‘பயங்கரவாதிகளின் கூட்டு ‘வடிவமாச் சித்தரிப்பதில் வெற்றியீட்டியு;ள்ளன. இது 11 செப்டம்பருக்கு பின் வெள்ளையின கவ்போய் மூலதனவாதிகளுக்காக உருவாக்கப்பட்ட விசவடிவிலான அராஜகக்கூட்டுணர்வுக்கப் பின் இன்னும் ஆளமாக அனைத்து தேசிய விடுதலைச் சக்திகளையும் முடக்கி அமெரிக்காவுக்கு கூஜா துக்க வைத்துள்ளது!.

இறுதியாகச் சிலவற்றை தொகுப்பாகக் கூறுகிறோம்:

—-

இன்றைய ஆளும்வர்க்கங்கள் தத்தமது கூடாரங்களுக்குள் (முதலாளிய கருத்தியலில்) இருந்துகொண்டு பற்பல புதிய கூடாரங்களை (பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தம்) உருவாக்கி விடுகிறார்கள்.

சுதந்திரம்,ஜனநாயகம் எனும் பெயரி;ல் மூன்றாமுலக ஆரியரற்ற மாற்று இனங்களை கலாச்சார, தேசிய அலகுகளை உருத்தெரியாது அழிக்கிறார்கள்.

ஒரு இனம் உற்பத்தியை கட்டுப்படுத்தி, தாமே தொழில் பேட்டையாளர்களாகவும் மற்ற இனங்கள் இவாகளது தயவில் தங்கி நுகர்வோராக இருக்கவைத்தல்.

ஒரே மொழி(ஆங்கிலம்) ,ஒரே மதம்(கிறித்துவம்) ஒரே பண்பாடு(மேக் டொனால்ட் கலாச்சாரம்) உருவாக்கிக்கொள்ளல்.

உலகத்தில் நிலவும் அனைத்து அரசுகளையும் மாநில அரசுகளின் நிலைக்குத்தள்ளி மத்திய அரசாக அமெரிக்கக்கூட்டணி பொறுப்பேற்றல்.

சர்வதேசச் சட்டவாக்தை உலக வங்கியிடம் கையழித்தல்.

உலகப் பொலிசாக அமெரிக்காவை அனைவரும் ஏற்க வைத்தல்.

இதுவே புதிய உலக ஒழுங்கு.

இதிலிருந்து தப்பிக்க என்ன வழி ? இதுவே முக்கியம் பெறும் கேள்வியாக இனிமேல் பேசப்படவேண்டும்!

ஜனவரி 2004. ப.வி.ஸ்ரீரங்கன்

srirangan@t-online.de

Series Navigation

author

ப.வி.ஸ்ரீரங்கன்

ப.வி.ஸ்ரீரங்கன்

Similar Posts