உருவாக்கம்
தமிழ்மணவாளன்

தொலைதூரத் தொடுவானம் நோக்கிய
பயணம் தொடர்கிறது
பாதை பரந்து விரிந்து பிரமாண்டமாய்
நெரிசலேதுமின்றி
செளகர்யமாயிருக்கிறது
ஒரு சாய்வு நாற்காலியின்
இங்கிததோடு தாங்கிக் கொள்ளும்
மேகம்
உடல் உஷ்ணத்துக்கேற்றவாறு
குளிர்ந்து அணைத்துக்கொள்கிறது
மிகுந்த சந்தோஷத்தோடு
அழகியவப் பறவை
கை குலுக்கிச் செல்கிறது
இது போன்ற சுகமான பொழுதுகளில்
நினைவுகள் மட்டுமே
போதுவதில்லை
அருகாமை அவசியமாகிறது
சட்டைப் பையினுள்
மினுமினுக்கின்றன
வழியெங்கும் பொறுக்கிப் போட்ட
நட்சத்திரங்கள்
பூத்துக் குலுங்கும் நந்தவனத்துக்கு
வேலியென்றெதுவுமில்லை
மேய்வதற்கும்.
tamilmanavalan@yahoo.co.in