உயிரிடம் ஒரு சந்தேகம்….

This entry is part [part not set] of 50 in the series 20040902_Issue

பட்டுக்கோட்டை தமிழ்மதி


இந்த மத்தாப்புக்கு
ஏன்
இத்தனை மகிழ்ச்சி ?

ஓ…
சுடர் நெருப்பை
தொட்டிருப்பதாலா ?

கத்தி
ஏன்
சாணைக்கல்லில்
பூப்பூவாய் பூரிப்புகளோடு
பொறிகளை தூவுகிறது ?

ஓ…
உரசல் என்கிற
உறவில் மகிழ்ந்தா ?

மின் விளக்கு
ஏன்
வெளிச்ச அலை அள்ளி
விசுகிறது ?

ஓ…
நேர்மின்
எதிர்மின் முனைகள்
டங்ஸ்டன் இழையில்
சந்தித்துக் கொண்டா ?

எல்லாம் சரிதான்.

நான்
காதலோடு
உன்
மனதைத் தொட்ட
சிலிர்ப்புகளோடுதானே
சிரிக்கிறாய்.
—-
பட்டுக்கோட்டை தமிழ்மதி
tamilmathi@tamilmathi.coம்

Series Navigation