இஸ்லாம் பயங்கரவாதத்தை எதிர்க்கிறது (Islam denounces Terrorism) ஹாருன் யஹ்யாவின் ஆவணப் படம்

This entry is part [part not set] of 41 in the series 20040909_Issue

அருளடியான்


ஹாருன் யஹ்யா, துருக்கியைச் சேர்ந்த இஸ்லாமிய அறிவியல் அறிஞர். இவர், டார்வினஸம் எப்படி அறிவியலோடு முரண்படுகிறது என ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்து முஸ்லிம், கிறித்துவ அறிவு ஜீவிகளை கவர்ந்தார். இவர் நூற்றுக்கணக்கான இஸ்லாமிய நூல்களை எழுதியுள்ளார். பல இஸ்லாமிய இணையத் தளங்களை நடத்தி வருகிறார். அவரது முதன்மையான இணையத் தளம் http://www.harunyahya.com அரபு நாட்டைச் சேர்ந்த இஸ்லாமிய அறிஞர்கள், துருக்கியர்கள் அரபு நாட்டை ஆண்ட போது தான் அரபு நாட்டில் இணைவைப்பு உள்ளிட்ட சீர்கேடுகளைத் துவக்கினர் என்று கூறுவர். அப்போது அவர்களிடம் தங்களை அறியாமலேயே இனவாத வாடை அடிப்பதை உணர மாட்டார்கள். எனினும் என்ன ? இறைவன் அரபுகள் உள்ளிட்ட மற்ற முஸ்லிம்களுக்கும், முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் ஒரு துருக்கியர் மூலம் தூய இஸ்லாத்தை கற்பிக்க நாடி விட்டால் அதை யார் தான் தடுக்க முடியும் ? இஸ்லாம் உண்மையிலேயே பயங்கரவாதத்தை ஆதாிக்கிறதா ? இக்கேளிவிக்கு விடையறிய பின் வரும் இணையத் தளத்தில் உள்ள ஹாருன் யஹ்யாவின் ஆவனப் படத்தைப் பாருங்கள்.

http://www.islamdenouncesterrorism.com/film.htm

Series Navigation

அருளடியான்

அருளடியான்