This entry is in the series 20040827_Issue

மாலதி


தோழியாக அன்னையாக
மகளாக மரபுள்ள மனைவியாக
இருக்கச் சொல்கிறீர்கள்.

நாங்கள் பேய்கள்
கிறுக்குகள்,இருப்பதில்லை
சொன்னபடி.

அன்னையை மகள் போல
அடங்கச் சொல்லும்போது

மகளைத் தனக்கே தாய் போல
முடங்கச் சொல்லும்போது

தோழியை மனைவியாகத்
தேவைகளில் மட்டும்
மாறச் சொல்லும்போது

மனைவியைத் தெய்வம் போல
மன்னித்தலே தொழிலாக
இருக்கச் சொல்லும்போது

நாங்கள் பேய்கள்
கிறுக்குகள்,இருப்பதில்லை
சொன்னபடி.

மாலதி
[சதாரா]
தணல் கொடிப் பூக்கள் 2001 தொகுப்பிலிருந்து

====
Malathi
malti74@yahoo.com

20040827_Issue

ரவி சுப்பிரமணியன் கவிதைகள்