இந்தியாவில் இயற்கை அழிவா ? யாருக்கெல்லாம் அதில் மகிழ்ச்சி!

This entry is part [part not set] of 39 in the series 20050203_Issue

எஸ்.அரவிந்தன் நீலகண்டன்


சுநாமியில் ஜாதி-மத-கட்சி வேறுபாடுகளை மறந்து மனிதத்துவ உணர்வொன்றே மேலோங்க பாடுபட்ட பாடுபடும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் தலை தாழ்ந்த வணக்கங்களை கூறித் தொடங்குகிறேன். இக்கட்டுரையில் நான் பகிரவிருக்கும் தகவல்கள் கசப்பானவை. ஆனால் அவை ஒரு குறிப்பிட்ட மதம் அல்லது இயக்கத்தைச் சார்ந்த அனைத்து மக்களுக்கும் பொருந்துவது அல்ல. சில இயக்கங்கள் , சில மத-அரசியல் நம்பிக்கைகள் ஒரு இயற்கை அழிவையும் கூட நோக்கும் விதமும் பயன்படுத்த துணியும் போக்கும் வருத்தம் அளிப்பவை. இப்போக்குகள் சில தனி நபர்களின் மனவிகாரங்களாக இருப்பின் அவற்றைப் புறக்கணித்து விடலாம். துரதிர்ஷ்டவசமாக இம்மனப்பாங்கு கொண்டிருப்போர் அதிகாரத்தில் பங்கு கொண்டிருக்கும் அரசியல் இயக்கத்தினர்; பல பில்லியன் டாலர்களின் உதவியுடன் களமிறங்கும் பன்னாட்டு அமைப்புப் பலம் பொருந்தியவர்கள். எனவே இப்போக்கினைச் சுட்டிக்காட்ட வேண்டியது அவசியமாகிறது.

சுநாமி அழிவு போனவருட மோசமான அரசியலின் உச்சக்கட்டம் – சிபிஐ(எம்)

கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் இந்தியா (மார்க்ஸிஸ்ட்) கட்சியின் அதிகார பூர்வ வார இதழ் ‘பீப்பிள்ஸ் டெமாக்ரஸி ‘ தனது ஜனவரி 2 2005 தேதியிட்ட தலையங்கத்தில் இயற்கைப்பேரழிவான சுநாமி குறித்து பின்வருமாறு எழுதியது: ‘இந்தியமக்களாகிய நாம் 2004 இல் அரசியல் தளத்தில் எதிர் கொண்ட வெறுப்புணர்வுக்கும் அழிவுக்கும் சிகரமாக அமைந்தது. ‘ இது மட்டுமல்ல சுநாமி நம் மக்களை எதிர்நோக்கும் மாபெரும் பணிகளுக்கான ஒரு ஞாபகப்படுத்துதலே ஆகுமாம். அந்தப்பணி என்ன ? பாஸிஸ வகுப்புவாதத்தை தோற்கடித்தது ஒரு பாதிதானாம். நமது சமுதாயத்திலிருந்தே வகுப்புவாத வைரஸை துடைத்தெடுப்பதுதான் மிகக்கடுமையான அந்தப்பணியாம். இதை மக்களுக்கு ஞாபகப்படுத்த வந்ததாக சுநாமியை எடுத்துக்கொள்ள வேண்டுமாம். ஒரு தன்னை மனிதநேயம் சார்ந்ததாகவும் அறிவியல் பார்வையுடையதாகவும் காட்டிக்கொள்ளும் ஒரு அமைப்பின் அந்தரங்கம் எத்தகைய அருவெறுப்பான வெறுப்பியல் சார்ந்ததாக உள்ளது என்பதற்கு இது ஒரு சான்றாக என்றென்றும் விளங்கும்.<<1>>

நிலநடுக்கங்கள் விக்கிர ஆராதனையாளர்களுக்கு அளிக்கப்பட்ட எச்சரிக்கை:

கத்தோலிக்க பங்குகளை ஒருங்கிணைத்து பரிசுத்த ஆவியின் ஆற்றலாலும் விவிலியத்தில் வெளிப்படும் கர்த்தரின் வார்த்தைகளாலும் மற்றும் கத்தோலிக்க மரபுகளின் அடிப்படையிலும் செயல்படும் அமைப்பாகும். மதம் மாற்றுவதே இந்த அமைப்பின் முக்கிய பொறுப்பாகும்.<<2>> இந்த அமைப்பினைச் சார்ந்த ‘தந்தை ‘ இயான் டெய்லர் கூறுகிறார்: ‘1999 இல் இந்தியாவிற்கு வருகை தந்த போப் ஜான் பால் II ஆசியாவிற்கு ஏசு தேவை என ஹிந்துக்களின் மிகப்பிரதான திருநாளான தீபாவளியன்று பிரகடனப்படுத்தினார். …அவரது அழைப்பினால் ஈர்க்கப்பட்டு இரண்டாண்டுகளுக்கு பின்னர் நான் பிரச்சாரத்திற்காக இந்தியாவிற்கு செல்ல விளைந்தேன்….ஜனவரி 26 ஆம் நாள் 25000 பேர் இறந்ததாகவும் பல்லாயிரக்கணக்கானோர் காணாமல் போனதாகவும் செய்திகள் வந்தன…. நிலநடுக்கம் 7.6 முதல் 8.1 வரை ரிக்டர் அளவில் அபாரமான (phenomenal) ஒன்றாக இருந்தது. சில விவரணையாளர்கள் குஜராத் கிறிஸ்தவர்களுக்கு எதிரான கொடுமைகளை மிகவும் புரிந்த இடம் என்பதனை நினைவுபடுத்தினர். ஆஸ்திரேலிய மிஷிநரி ஸ்டெயின்ஸையும் அவரது இரு மகன்களையும் கொன்ற பின்னர் ஒரிஸா மாநிலம் கடுமையான புயலால் அழிக்கப்பட்டதையும் அவர்கள் குறிப்பிட்டனர். 10 மில்லியன் ஹிந்துக்கள் தமது மதரீதியிலான சுத்தப்படுத்துதலை கங்கை யமுனை சங்கமத்தில் செய்த அந்த நேரத்திலேயே நில அதிர்ச்சி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் 1993 இல் லட்டூர் மற்றும் கில்லாரி ஆகிய மகாராஷ்ட்ர கிராமங்களில் ஹிந்துக்களது ‘கடவுளான ‘ கணேச விக்கிரகத்தை நீராட்டியதும் நிலநடுக்கத்தால் மக்கள் கொல்லப்பட்டதை நான் குறிப்பிட்டேன்….அன்று மாலை கூட்டத்திற்கு 10,000 பேர் வந்திருந்தனர். …நான் வெள்ளிக்கிழமை உபவாசமிருக்கவில்லை. இருந்திருந்தால் ஆண்டவர் இன்னமும் அதிகமான காரியங்களை அதிக வலிமையுடன் செய்திருப்பார். ‘<<3>>

‘நிலநடுக்கமில்லாமல் இத்தனை சிறப்பாக நாம் செயல்பட முடியாது ‘

மிஷன் நெட்வொர்க் என்கிற கிறிஸ்தவ அமைப்பின் ‘மிஷன் மோபிலைஸேஷன் ‘ எனும் செயல்திட்டத்தை நடத்தி வரும் பீட்டர் டான்ஸுக்கு குஜராத் நிலநடுக்கப் பேரழிவு மிகச்சிறந்த முறையில் கிறிஸ்தவர்கள் அவர்கள் நம்பிக்கையை பகிர்ந்து கொள்ள உதவியது. கிறிஸ்தவர்கள் உள்சென்று விவிலியத்தை உரக்க வாசித்து ஆற்றலுடன் பிரச்சாரம் செய்ய முடிந்தது. ‘ஒரு சாராசரி மனிதனுக்கு இத்தனை தெளிவாக அவன் ஏற்கும் விதத்தில் விவியத்தை எடுத்து கூறும் முயற்சியில் நிலநடுக்கமில்லாமல் இத்தனை சிறப்பாக நாம் செயல்பட முடியாது. ‘ <<4>>

மற்றொரு மிகப்பிரபலமான பலம் பொருந்திய மதமாற்ற அமைப்பான ABWE இன் கிறிஸ்தவ பத்திரிகையான ‘மெஸேஜ் ‘ 2003 இல் ஒரிஸா புயல் அழிவையும் குஜராத் நிலநடுக்கத்தையும் குறித்து பின்வருமாறு எழுதியது: ‘பல பத்தாண்டுகளாக நாம் உலகின் இரண்டாவது மிகந்த மக்கட்தொகை கொண்ட நாட்டிற்குள் செல்ல ஒரு வழியை ஏற்படுத்த பிரார்த்தித்து வந்தோம். இந்தியாவின் புயலும் நிலநடுக்கமும் அத்தகையதோர் வழியை நமக்கு உருவாக்கி தந்துள்ளன. துயருறும் மக்களை ABWE இன் கருணை உடைய சமயபோதனை மூலம் சென்றடையவும் அங்குள்ள கிறிஸ்தவர்களுடன் கூட்டு வைத்து மதப்பிரச்சாரம் செய்யவும் சர்ச்சுகள் உருவாக்கவும் வழி பிறந்துள்ளது. ‘<<5>>

தற்போது சுநாமியில் எத்தகைய மதமாற்ற முறைகள் கையாளப்படுகின்றன ?

‘உங்க கடவுளாலயும் உங்க மதத்தாலயும் தான் உங்களுக்கு இந்த அழிவு ‘ – கிறிஸ்தவ மிஷிநரி (ரீடிஃப் செய்தி)

ரீடிஃப் இணையதளத்தின் நிருபரான ஷோபா வாரியர் நாகப்பட்டினத்திலிருந்து தமது அனுபவத்தைக் கூறியுள்ளார். முதல்நாள் ஒரு கடலோரக் கிராமத்தில் ஒரு பாதிரியாரும் இரு கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகளும் மதமாற்ற பிரசுரங்களை கொடுத்தப்போது அங்கிருந்த இளைஞர்கள் ஆத்திரப்பட்டார்கள் என்றும் பாதிரியார் அலட்டாமல் இதெல்லாம் உங்கள் மன அமைதிக்காக செய்கிறோம் என்றும் கூறிச் சென்றார். நாங்கள் இல்லாத போது எங்கள் பெண்களை கன்னியாஸ்திரீகள் மதமாற்ற முயல்வதை நாங்கள் அறிவோம். நீங்கள் ஒன்றும் எங்களுக்கு பிராத்தனை செய்ய சொல்லிக்கொடுக்க வேண்டாம் எங்களுக்கு பிரார்த்தனை செய்ய தெரியும் என்று அந்த இளைஞர்கள் கடுமையாக பாதிரிக்கூட்டத்தாரிடம் தெரிவித்ததை தாம் கண்டதாகக் கூறுகிறார் ஷோபா வாரியார். ஷோபா வாரியரின் இரண்டாம் நாள் அனுபவம் சாமந்தான் பேட்டையில் நடந்தது. அங்குள்ள கோவிலின் முன்னால் போலீஸ் ஊர்திகள் நின்றன – கூடவே ஒரு மிஷிநரி வேன். மிஷிநரிகளின் பிரச்சார பேச்சை கேட்க மறுத்ததால் அங்குள்ள மக்களுக்கு அனுப்பப்பட்ட நிவாரண நிதிகளுடன் கம்பி நீட்ட முயன்ற ஒரு வேனை பாதிக்கப்பட்ட ஊர் மக்கள் தடுத்து நிறுத்தி வைத்துள்ளனர். காரைக்கால் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் மக்கள் தாங்கள் வழிபடும் கோவிலின் கர்ப்பகிரகத்தை திறந்து காட்டுகின்றனர். ‘அலைகள் இங்கு வரை வந்து சாந்தமாகின்றன. ‘ என்கிற அவர்கள் ‘நாங்க கஷ்டப்பட்டிருக்கலாம் ஆனால் எங்க ஆத்தா எங்களை காப்பாத்திட்டா ‘ என கூறுகிறார்கள். இது அவர்களை அந்த தெய்வத்தாயிடம் இன்னமும் அதிகமாகப்பிணைத்துள்ளது. ‘எனவேதான் வெளியில இருந்து வந்து உங்க கடவுளாலயும் உங்க மதத்தாலயும் தான் உங்களுக்கு இந்த அழிவு அப்படான்னு சொல்றது எங்க நெஞ்ச தைக்குது. எங்க கஷ்டத்தை வைச்சு எங்களை மாத்துறதுக்கு நாங்க விடப்போறதில்லை. ‘ என்கிறார்கள். <<6>> இந்தோனேஷியாவில் சுநாமியால் அநாதையாக்கப்பட்ட குழந்தைகளை கிறிஸ்தவ அநாதை இல்லங்களுக்கு விமானம் மூலம் எடுத்துச்செல்ல முயன்றதை இந்தோனேஷிய அரசின் சமயோகித செயல்பாடு தடுத்தது. இஸ்லாமிய அமைப்புகளைத் தவிர மற்றெவரும் இந்தொனேஷிய அனாதைக் குழந்தைகளை தத்தெடுக்க முடியாது என அது தெளிவாக அறிவித்தது. <<7>>ஆனால் அத்தகைய கடும் சட்ட கட்டுப்பாடுகள் இல்லாத பாரதத்திலும் ஓரளவுக்கு இலங்கையிலும் இந்த இயற்கைப்பேரழிவு மேற்கத்திய பண உதவியுடனான ஆன்ம அறுவடைக்கு இடம் கொடுத்துள்ளது. சுநாமி தாக்கியதுமே அனைத்து பத்திரிகைகளிலும் விளம்பரம் செய்து பிரம்மாண்டமான அளவில் நிதி திரட்டியது வோர்ல்ட் விஷன் எனும் கிறிஸ்தவ எவாஞ்சலிக்கல் அமைப்பு. நாகையில் இந்த அமைப்பின் செயல்பாடு ராஜதந்திரத்துடன் விளங்கியது. வெளிநாட்டு ‘மதமாற்ற அமைப்புகளின் ராஜதந்திரம் குறித்து அவுட்லுக் பத்திரிகை நிருபர் விளக்கியிருந்தார்: ‘அமெரிக்க மதமாற்ற அமைப்புகளின் தந்திரம் என்னவென்றால் தாம் மதமாற்றங்களிலிருந்து பாதுகாப்பான தூரத்தில் விலகியிருந்தபடி உள்ளூர் கிறிஸ்தவ அமைப்புகளை வைத்து வேலையை செய்ய வைப்பதுதான். ‘<<8>> நாகப்பட்டினத்தில் இதற்கான செய்முறை விளக்கம் கிடைத்தது. வோர்ல்ட் விஷன் அமைப்பின் நிவாரணப் பொருட்கள் ஆர்தர் செல்வராஜ் என்பவர் நடத்தும் காடம்பாடியில் உள்ள சீயோன் ஏசு சபையைச் சார்ந்த கட்டிடத்தில் வைக்கப்பட்டு நிவாரணம் வேண்டும் பாதிக்கப்பட்டோரை அங்கே சென்று நிவாரணம் பெறச்செய்யப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் தம்மிடம் இந்த நபர் ‘நீங்கல்லாம் நிறைய சாமிய கும்புடுறீங்க உங்க சாமீங்க சுநாமிய தடுக்கல்லை. உங்க சாமீ கோயில்லாம் உடைஞ்சு போச்சு ஆனா சர்ச்செல்லாம் இடியல்ல. இயேசு மதத்தில சேர்ந்தா இயேசு உங்களயெல்லாம் காப்பாத்துவார் ‘ என்றெல்லாம் கூறியதாக மக்கள் கூறுகின்றனர். ஆர்தர் செல்வராஜின் பிரச்சாரம் அத்துமீறி போன நிலையில் மக்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் ராதா கிருஷ்ணன் தலையிட்டு போதகர்களை நிவாரணப்பொருட்களை ஆட்சித்தலைவர் அலுவலகம் வழி கொடுக்க கோரிக்கை வைக்க வேண்டியதாயிற்று. <<9>>

நாளைக்கு ஆறுமுறை கிறிஸ்தவ பிரார்த்தனை செய்யும் ஹிந்து குழந்தைகள்:

ஜெரி டேவிஸ் மினிஸ்ட்ரி இந்தியாவை முதன்மையாக குறிவைப்பதாக தமது இணையதளத்தில் கூறுகிறது. அது மேலும் கூறுகிறது: ‘நமது பிரதான நோக்கம் இந்த கொடுமையான துயரச் சம்பவத்தைப் பயன்படுத்தி ஏசுவின் அன்பை அதனை உணர வாய்ப்பற்ற மக்களான ஹிந்துக்கள், முஸ்லீம்கள், பெளத்தர்கள் மற்றும் ஆவி வழிபாட்டாளர்கள் ஆகியோருடன் பகிர்ந்து கொள்வதுதான். ‘<<10>> இந்த இணையதளம் காலணிப்பெட்டி உக்தி என ஒன்றை கூறுகிறது. அது என்ன காலணிப்பெட்டி உக்தி ? மதமாற்ற பிரச்சார பிரசுரங்கள் கொண்டு செல்லப்பட முடியாத இடங்களுக்கு அவற்றை கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் சாதனங்கள் இவை. வெளிப்பக்கம் வெறும் நிவாரண சாதனங்களாக தோற்றமளிக்கும் இவற்றினுள் பைபிளும் இன்னபிற மதமாற்ற இலக்கியங்களும் இருக்கும். டிரிபியூன் பத்திரிகையின் நிருபர் அக்கரைப்பேட்டையில் இவ்விதமதமாற்றம் நடப்பதை விவரிக்கிறார்: ‘கிறிஸ்தவ ஏவாஞ்சலிஸ்ட்கள் வேன்களில் நூற்றுக்கணக்கான கிராமத்தவர்களை -பெரும்பாலும் ஹிந்துக்கள்- ஏற்றி ஆறுமைல்களுக்கு அப்பால் கொண்டுச்சென்றனர். அங்கே கிராம அதிகாரிகளின் கண்காணிப்பு வட்டத்திற்கு அப்பால் சுநாமியில் பிழைத்தவர்களுக்கு ஒரு பாய், ஒரு தட்டு, ஒரு சேலை 55 பவுண்ட் அரிசி ஆகியவற்றை ‘Believers Church Tsunami Relief, ‘ எனும் பையில் வழங்கியதுடன் மது பழக்கதிற்கு எதிரான பைபிள் வாசகங்கள் அடங்கிய நூலை கொடுத்தனர். நெற்றியில் திலகத்தின் மூலம் தம்மை ஹிந்துவென வெளிக்காட்டும் 35 வயது முத்தம்மாள் ‘நான் என்ன செய்யட்டும் ‘ என்கிறார், ‘எங்களை இம்புட்டு தூரம் வர வைக்காங்க கஷ்டமாயிருக்குதுங்க. ‘ பீலீவ்வர்ஸ் சர்ச் உறுப்பினர்கள் சுநாமி நிவாரண முகாம்களிலும் தெருக்களிலும் சுநாமியால் பாதிக்கப்பட்டவர்களிடம் பைபிளை விநியோகிக்கின்றனர். அவர்கள் ஒரு அநாதை குழந்தைகள் இல்லத்தையும் உருவாக்கி பல ஹிந்து குழந்தைகளை சேர்த்துள்ளனர். அக்குழந்தைகளை ஒரு நாளைக்கு ஆறுமுறை கிறிஸ்தவ பிரார்த்தனைகளை சொல்ல வைக்கின்றனர். ‘<<11>>

இவ்வாறு கொடுமையாக நீளும் – இயற்கை அழிவைப்பயன்படுத்தி நமது மக்களிடையே அவர்களுடைய மிகப்பலவீனமான தருணத்தில் மனிதாபிமானமின்றி திஒட்டமிட்டு நடத்தப்படும் மதமாற்றத்தின் ஒரு சிறிய துகளளவே மேலே கோடி காட்டப்பட்டிருப்பது. களத்தில் இது மிகக்கொடுமையாக நடைபெறுகிறது. போலி-மதச்சார்பின்மையின் இருண்ட பரிமாணங்களில் ஒளிந்து நடக்கும் இச்செயல்பாட்டின் விளைவாக ஏற்படும் மதமாற்றங்களை – தனிமனித சுதந்திரத்தால் நடப்பதாக – கூறும் மார்க்ஸிய அறிவுஜீவிகள் இருக்கலாம். குளிர்சாதன அறைகளில் குந்தி இருந்தபடி ஏதாவது பத்திரிகைகளில் வந்த ‘வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ ‘ போன்ற கட்டுரைகளின் அடிப்படையில் ஹிந்து தர்மமே அவ்வாறு கூறிவிட்டது போல ஆகாயத்துக்கும் பூமிக்கும் குதிக்கும் மேட்டுக்குடி பெண்ணியங்களுக்கு இதெல்லாம் அற்ப விஷயங்களாகப் படலாம். ஆனால் எங்கோ ஒரு பாரத சகோதரன் அல்லது சகோதரிக்கு தமிழக கடற்கரைகளில் நடக்கும் ஆன்ம அறுவடையை தடுக்கத் தோன்றினால் – அதற்காக பாரத தர்மத்தில் வேரூன்றிய சேவா நிறுவனங்களுடன் தோள் கொடுத்தால் அதுவே இக்கட்டுரையின் வெற்றி. அதுவே இத்தனை துயரங்களிலும், இயற்கை சீற்றங்களுக்கும், வற்புறுத்துதல்களுக்கும் ஆசை காட்டல்களுக்கும், பிரம்மாண்ட பல மில்லியன் டாலர்களுடன் நடத்தப்படும் பிரச்சார தாக்குதல்களுக்கும் நடுவிலும் நிலை குலையாது நிற்கும் நம் கடலோர சகோதர சகோதரி களின் பாதங்களுக்கு நாம் அளிக்கும் வணக்கம்.

நமது கடலோர சகோதர சகோதரிகளிடம் ஒரு கோரிக்கை: பணத்திமிராலும் மதவெறியாலும் தாங்கள் செய்வது என்னவென்று அறிந்தே செய்யும் இந்த மிஷிநரிகளையும், இந்த மிஷிநரிகளின் மூல உத்வேகமான ஏசுவையும் நீங்கள் மன்னித்துவிடுங்கள்.

-எஸ்.அரவிந்தன் நீலகண்டன்

[தேவையில்லாமல் வேண்டுமென்றே விஷயங்களை திசைதிருப்ப சிலர் நான் திரித்து கூறிவிட்டேன் எனக் கூறக் கூடுமானதால் மொழி பெயர்ப்பு செய்த மேற்கோள்களை ஆங்கில மூலத்துடன் அளித்துள்ளேன்.]

<<1> ‘2005: Meet Challenges Steadfastly ‘, People ‘s Democracy, Editorial,(Weekly Organ of the Communist Party of India (Marxist)

Vol. XXIX, No. 01 January 02, 2005

‘The tsunami striking us in the last days of 2004 must be seen not as an ominous signal for the future, but as the culmination of a legacy of hate and destruction that we, the Indian people, unitedly and finally overcame in the political sphere in 2004. It is also a reminder that gigantic tasks lie ahead. The defeat of fascistic communalism is only half the battle won. A more bitter engagement awaits us to cleanse our society of this communal virus. ‘ பார்க்க: http://pd.cpim.org/2005/0102/01022005_edit.htm).

<<2>>The Mission of the Fraternity of Priests, [http://www.fraternityofpriests.org/about.html – browsed on 18-01-2002]

Extract: ‘The Fraternity of Priests exists precisely to evangelize, form and train priests to effectively respond to what God is doing today through His Holy Spirit….The Fraternity desires to help bring about Catholic parishes and institutions that are renewed in Jesus Christ, through the power of the Holy Spirit and in accordance with the Word of God in Scripture and Catholic tradition. We desire to work in support of and in union with the established heirarchy of the Catholic Church. ‘

<<3>>Mission India (Part-II) by Fr. Ian Taylor, ‘www. fraternityofpriests.org/missions/indiap2.html ‘

Extract: ‘India, that vast sub-continent of Asia. A nation of 1 billion people, second only to China, a nation of over 900 million Hindus, millions of Muslims and animists and just about 23 million Christians or 2.3%. Despite the efforts of great missionaries such as St Thomas, St Bartholomew and St Francis Xavier and the good works of the local church there, the majority of people still sit in darkness awaiting the dawning of a new light. “Asia needs Jesus” declared Pope John Paul II on the occasion of his visit to India in 1999 and on the day of their greatest Hindu feast, Divali, the festival of lights….Inspired by his urgent call two years later I expressed my own desire to preach in India…The following morning, about 8.50 a.m., India was hit by its most devastating earthquake ever. Four hundred miles away from the epicentre in Gujarat, we could clearly feel the earth shaking for about one minute. We would soon learn of the massive destruction of buildings and colossal loss of lives in Bhuj, Kutch, Ahmedabad and other places in Gujarat and even in nearby Pakistan. An estimated 25,000 perished but several thousands are still unaccounted for. Just one hour before, I had sought the Lord for a word for the day and got Acts 4:29f.This was after the apostles had been threatened for proclaiming the name of Jesus, they gathered together in the community and appealed to the Lord in prayer to give mighty signs to confirm their ministry. Verse 31 says, “As they prayed the place where they were gathered, ‘shook ‘ and “they were all filled with the Holy Spirit.” …The earthquake registered a phenomenal 7.6 to 8.1 on the Richter scale. Some commentators noted that Gujarat had been the state where the brutal persecution of Christians in recent times had begun. The state of Orissa too, they noted, which had earlier been responsible for the murder of the Australian missionary John Staines and his two young sons, by burning, suffered a devastating cyclone shortly thereafter. The earthquake came at a time too, when 10 million Hindus had just celebrated their ritual cleansing in the confluence of the Ganges and Yamuna rivers. I noted that in October 1993 in the village of Killari, in Latuc, in the state of Maharastra, immediately after the ritual bathing of statues of the ‘god ‘ Ganesh, a massive earthquake hit Latuc killing thousands….I saw these events at Gujarat, Orissa and Latuc as a challenge to the Christian Community to help bring their Hindu brothers and sisters “from darkness to light” and from idolatry to the worship of the one true God. That evening 10,000 turned up for our healing service!…Personally I believe that my failure to fast that Friday may well have been responsible for retarding the move of the Spirit to do many and mightier things. ‘

<<4>>Story number 1 for 28 Mar 2001, Mission Network News.

http://mnn.gospelcom.net/article/1869

Extract: ‘ quake has done much to help Christians share their faith. ‘They ‘re preaching the Gospel in a very powerful way by Christians going in and bringing comfort and these people are seeing it and reading it loud and clear. We would not have been able to so clearly and so well been accepted by the average man in the street without this earthquake happening. ‘

<<5>>Turning Tragedy to Triumph: Natural Disasters in India, by Jay Walsh, Message magazine online, Vol. 51 No.01 Spring 2003, இக்கட்டுரை தரும் சுவாரசிய தகவல்களில் ஒன்று: ‘During 2002, fanatical Hindu militants in Godhra, Gujarat , perpetrated a “Muslim Holocaust,” slaying up to 30,000 Muslims. ‘ ஹிந்து விரோத கற்பனையில் இந்த மிஷிநரி கூட்டம் சிபிஐ(எம்)முடன் போட்டி போடுகிறது. https://www.abwe.org/message/vol51no01/turning_tragedy.asp

Extract: Their intention was to establish Hindutva , a theocracy void of non-Hindus, by eliminating all non-Hindu minorities. It is clear that there is a great spiritual darkness in Orissa and Gujarat . The recent natural disasters can be seen as God ‘s response to this darkness: moving the very earth, rebuking the sea, in order to proclaim His presence and draw global attention to the great needs of these people. For decades we have prayed for an opportunity to enter the world ‘s second most populated nation. India ‘s cyclone and earthquake have opened a door for ABWE to begin ministries of compassion to hurting people, allowing us to partner with dedicated Indian Christians in evangelism and church planting. சிபிஐ(எம்) பாஜக அரசுக்கும் சுநாமிக்கும் போட்ட முடிச்சு இங்கும் வெளிப்படுவதைக் காணலாம். ஆபிரகாமிய மதங்களின் ஒத்த சிந்தனைக்கு மற்றொரு எடுத்துக்காட்டு இது.

<<6>>Conversion attempts in the time of grief, Shobha Warrier in Nagapattinam | January 24, 2005 15:45 IST

http://in.rediff.com/news/2005/jan/24shoba.htm

<<7>>Counting Sheep ? by SEEMA SIROHI (அவுட்லுக், ஜனவரி 31, 2005)

http://www.outlookindia.com/full.asp ?fodname=20050131&fname=Missionaries+%28F%29&sid=1

<<8>> மேற்கூறிய அதே கட்டுரை: ( ‘The strategy allows US groups to maintain a safe distance from ‘conversions ‘ while local groups do the work. ‘)

<<9>> ‘மதமாற்ற சுநாமி ‘ – தினமலர் [கடலூர் பதிப்பு ஜனவரி-2005]

<<10>>Tsunami crisis evangelism / disaster relief campaign [http://www.churches.com/sitemap/tud.html – browsed on 05-01-2005]

Extract: ‘Our main goal is to use this horrible disaster as an opportunity to share the love of Jesus with people who may never otherwise have a chance to hear. They will be Buddhist, Hindus, Muslim and animist. ‘

<<11>>Critics say some Christians spread aid and Gospel by Kim Barker Tribune foreign correspondent January 22, 2005

Extract:

AKKARAIPETTAI, India — The Christian evangelists came in the morning, wearing fluorescent yellow T-shirts emblazoned with ‘Believers Church ‘ on the back and ‘Gospel for Asia ‘ on the front. They loaded up hundreds of villagers, mostly Hindus, in vans and trucks and drove them 6 miles away. There, away from the eyes of village officials, each tsunami survivor received relief supplies–a sleeping mat, a plate, a sari, a 55-pound bag of rice and, in the bottom of a white plastic bag proclaiming ‘Believers Church Tsunami Relief, ‘ a book containing biblical verses warning against the dangers of alcohol. ‘What do I do ? ‘ asked Muthammal, 35, who uses one name like many in southern India and wears the red bindi on her forehead showing she ‘s Hindu. Like many here, she cannot read. ‘They are asking us to come all this way. It is so difficult. ‘ Members of the Believers Church also have handed out Bibles to tsunami survivors on the streets and in

relief camps. They set up an orphanage for 108 children, including many Hindus, and asked the children to recite Christian prayers six times a day. The Protestant church did not register the orphanage with the government, authorities said. K.P. Yohannan, the leader of Believers Church and Gospel for Asia, said the church had tried to get government permission. ….Yohannan said members of the Believers Church and Gospel for Asia were not trying to convert anyone. But if people embraced Christianity after meeting the evangelists, Yohannan would be happy. ‘We wish everyone would believe in Jesus and love Jesus, ‘ he said. In India, fewer people have protested religious relief activities than in Indonesia. இந்த மேற்கத்திய நிருபரின் செய்தி விவரணம் இந்தியர்களை சித்தரிப்பதை பாருங்கள்: ‘People also are happy to get anything. They will take Christian texts from Believers Church if it means getting rice. ‘They are giving it, ‘ said Govindaraj, 45, a Hindu from Akkaraipettai. ‘So we are taking it. ‘ எந்த அளவு நம் மக்கள் கீழ்மையாகச் சித்தரிக்கப்படுகிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

—-

Series Navigation