ஆவியை விட்டு விட்ட‌ ஆ.வி.

This entry is part [part not set] of 35 in the series 20080731_Issue

ருத்ரா


(அன்பு ந‌ண்ப‌ர் திரு மு.குருமூர்த்தி அவ‌ர்க‌ள் எழுதிய‌ வ‌ரிக‌ளுக்கு
எழுத‌ப்ப‌ட்ட‌ ப‌த‌வுரை..பொழிப்புரை இது)

ஆ.வி த‌ன் ஆவியைவிட்டு
ப‌ல்லாண்டுக‌ள் ஆகிப்போன‌து.
எழுத்துக‌ளில்
முத்திரை ப‌தித்த‌ காலம் போய்
ஆர்ட் பேப்ப‌ரில்
ஊசிப்போன‌ கொத்த‌வால் சாவ‌டியை
குத்த‌கைக்கு எடுத்திருக்கிற‌து.
இள‌மைக்கு இதுவே
அவ‌தார‌ம் எடுத்து வ‌ந்த‌து போல்
க‌ல்லூரிக்காம்ப‌வுண்டுக‌ளின்
சாக்க‌டையை எல்லாம்
வ‌ர்ண‌க்குழ‌ம்பாக்கி
காசாக்க‌ப்பார்க்கிற‌து.
“ப‌தினாறுக‌ளின்”
பூனை ம‌யிருக்குள்..ஃப்ராய்டிச‌த்தின்
புலியை உறும‌வைத்து
ச‌ர்க்க‌ஸ் ப‌ண்ணுகிற‌து.
க‌ஞ்சா செடிக‌ளின்
ம‌க‌சூல்க‌ளைப்போல்
வ‌சூல்க‌ள் போதும் என்று
அச்சுமைக்குள்
அசுர‌வித்துக‌ளே விவ‌சாய‌ம்.
வாச‌னோடு இல‌க்கிய‌
வாச‌னை போயிற்று.
“யூத் யூத்”என்று
ப‌ர‌ப‌ர‌ப்பு ஏற்ப‌டுத்துவ‌தெல்லாம்
ஆண்..பெண் க‌வ‌ர்ச்சி முடுக்க‌ப்ப‌ட்ட‌
ப‌ம்ப‌ர‌ விளையாட்டுக‌ள் தான்.
ஒரு சினிமா க‌தாநாய‌க‌ன்
யாருக்கோ ஒரு ந‌டிகைக்கு
உத‌டு கிழிய‌ முத்த‌ம் கொடுத்தை
“உத்த‌ர‌ காண்ட‌த்து” இராமாய‌ண‌ம் ஆக்கி
ச‌த்த‌ம் காட்டிக்கொண்டே இருப்ப‌தில்
ச‌ரித்திர‌ம் ப‌டைத்து கொண்டிருக்கும்.

ம‌க்க‌ளையே குப்பையாக‌
க‌ருதிவிட்ட‌பிற‌கு
அவ‌ர்க‌ளுக்கும்
த‌னித்த‌னி குப்பைத்தொட்டிக‌ள்..

ச‌க்தி விக‌ட‌ன்
அவ‌ள் விக‌ட‌ன்
சுட்டி விக‌ட‌ன்
நாண‌ய‌ம்
மோட்டார் விக‌ட‌ன்..
……
அவ‌ர்க‌ள் “காரியால‌ய‌குப்பை காகித‌ங்க‌ளை”
இப்ப‌டியும் ரீ சைக்கிள் செய்து
ப‌ண‌ம் ப‌ண்ணிக்கொள்ள‌
இருக்க‌வே இருக்கிறார்க‌ள்
விள‌ம்ப‌ர‌ ப‌ல்ல‌க்கு தூக்கிக‌ள்.

ஜுனிய‌ர் விக‌ட‌ன் என்று
ஊழ‌ல்க‌ளை
ஊடுருவ‌க்கிள‌ம்பிய‌வ‌ர்க‌ள்
சந்த‌ர்ப்ப‌வாத அர‌சிய‌ல்வாதிக‌ளின்
ச‌துர‌ங்க‌விளையாட்டுக்கு இவ‌ர்க‌ளே
ப‌க‌டைக்காய் த‌யார் செய்து
ம‌க்க‌ள் த‌லைமீது உருட்டி விளையாடுகிறார்க‌ள்.

மக்கள் ர‌ச‌னைக்கு ப‌த்திரிகை ந‌டத்துகிறோம்
இதில் இல‌க்கிய‌ம் அது இது என்று
எங்க‌ள் த‌லையிலேயே
ம‌ண்ணை அள்ளிப்போடுக்கொள்வ‌தா?
என்று சொல்லிக்கொண்டு
ம‌க்க‌ள் த‌லையில்
ம‌ண்ணை அள்ளிப்போட்டுக்கொண்டிருக்கிறார்க‌ள்.

த‌மிழ் இன‌த்தின் ப‌கை எனும்
க‌ண்ணுக்கு தெரியாத‌ ஒரு புகையை
அவ‌ர்க‌ள‌து அந்த‌ர‌ங்க‌மான‌ ஓம‌க்குண்ட‌ல‌த்திலிருந்து
க‌சிய‌ விட்டுக்கொண்டு தான் இருக்கின்ற‌ன‌.
க‌டைக‌ளில் தொங்குகின்ற‌ன‌
அவ‌ர்க‌ளின்
மூவ‌ர்ண‌ அட்டைப்ப‌ட‌ங்க‌ளுக்கும்
நான்கு வ‌ர்ணமே
கொஞ்ச‌ம் ர‌க‌சிய‌மாய் தெரியும்.

எல்லோரும் இன்புற்றிருக்க‌ நினைப்ப‌துவே ய‌ன்றி
வேரொன்றும் அறியேன் ப‌ராப‌ர‌மே

என்ற‌
முக‌ப்பு வாக்கிய‌ங்க‌ளின்
ப‌த‌வுரை பொழிப்புரை எல்லாம் இதுதான்.

காம‌ம் செப்பாது க‌ண்டது மொழிமோ
என்று அந்த‌ அஞ்சிறைத்தும்பி சொன்ன‌த‌ன்
எங்க‌ள் அக‌ராதி இது தான்.
“காம‌த்தோடு செப்பி “க‌ண்ட‌தை” மொழிவ‌தே”

எங்க‌ள் ப‌த்”திரிகை”யின் தொழில்.

==============================================================ருத்ரா

epsivan@gmail.com

Series Navigation