ஆதி காக்கா முதற்றே உலகு
கே. ஆர். மணி

போனமாதம் செத்துப்போன
என் பெரியப்பாவை கிளறவும்
அந்த காக்கைதான் முதலில்
வந்ததாய் ஞாபகம்.
இன்றும் அதுதான்
வந்திருக்கிறது முதலில்.
நீண்ட குடலை தள்ளி
லாவகமாய் எதனை நோக்கி
போகிறது அதன் கருப்பு மூக்கு
ஈரலை நோக்கியா ?
வேறெதை தேடப்போகிறது
இதயத்தையா என்ன?
அதன் அழகு இந்த கருப்புக்கு
எங்கே தெரியப்போகிறது ?
ஈரல்,இதயம், மெல்லிய தோல்
குடல், கொஞ்சம் இரத்தம்
டயர்கள் தேய்ந்ததால் நசுங்கின முகம்
அழுக்கான தோலைத்தவிர
நான் அழகாய்த்தானிருக்கிறேன்.
அழகு.
நடந்துகொண்டுருந்தபோது நான்
பார்க்கமுடியாத
அழகு
தார்ச்சாலையில் பரப்பபட்டு.
mani@techopt.com