அறிவிப்பு

This entry is part [part not set] of 34 in the series 20070517_Issue

திண்ணை குழு


திரு வே சபாநாயகம் எழுதிவரும் காலநதிக்கரையில் நாவலின் ஏழாவது அத்தியாயம் சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த வாரம் வெளிவரவில்லை.
திண்ணை குழு

Series Navigation

அறிவிப்பு

This entry is part [part not set] of 24 in the series 20070412_Issue

திண்ணை


இந்த வாரம் ஜெயபாரதனின் நாடகமும் , அறிவியல் கட்டுரையும் இடம் பெற இயலவில்லை.
திண்ணை குழு

Series Navigation

அறிவிப்பு:

This entry is part [part not set] of 35 in the series 20061012_Issue

புதியமாதவி, மும்பை.


மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றம்
மற்றும்
இலெமுரியா நூல் வெளியீட்டகம், மும்பை

இணைந்து வழங்கும் நூல்கள் அறிமுக விழா.

சு.குமணராசன் எழுதிய : பார்வையின் நிழல்கள்

நங்கை குமணராசன் எழுதிய : பேணுவோம் பெண்ணுரிமை

சீரிவரிசை சண்முகராசன் எழுதிய : நிகழ்வுகள்-சிந்தனைகள்

நாளும் பொழுதும்: 14-10-06 மாலை 5.30 மணி

இடம்: பாரத் ரத்னா டாக்டர் எம்.எஸ்.சுப்பலட்சுமி இசையரங்கு
சயான், மும்பை 400 022.

தலைமை: கி. வீரமணி தலைவர், திராவிடர் கழகம்

நூல்வெளியீடு : டி. இராஜா , தேசியச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

விழாவில் பொன். தமிழ்வாணன்,(இ.ஆ.ப), முனைவர் செய்யது இஸ்மாயில்,
பாவலர்.செம்பியன், பேராசிரியர் எபிநேசர், பேராசியர். மு.பி. மணிவேந்தன்
மற்றும் மும்பை அரசியல், சமூக , இலக்கிய அமைப்புகளைச் சார்ந்தவர்கள்
பலரும் கலந்து கொள்ள இருக்கும் இலக்கிய விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க
அன்புடன் அழைக்கிறோம்.

……………புதியமாதவி, மும்பை.

Series Navigation

அறிவிப்பு

This entry is part [part not set] of 41 in the series 20060901_Issue

திண்ணை


ஜெயபாரதன் எழுதிவரும் “கிளியோபாத்ரா” பேரங்க நாடகமும், அவருடைய விஞ்ஞானக் கட்டுரையும், இந்த இதழில் இடம்பெறவில்லை. ஜெயபாரதன் அடுத்த வாரத்தில் தொடர்வார்.
திண்ணை

Series Navigation

அறிவிப்பு

This entry is part [part not set] of 45 in the series 20040122_Issue

சுப்ரபாரதிமணியன்


என் இருக்கையில் இருந்த பொத்தான்களை இயக்குவதற்காக சரியான தேர்ச்சி பெற்றிருந்தேன்.என் முதல் விமானப் பயணத்தில்தான் எத்தனை தடுமாற்றம். விமானப்பணிப்பெண்ணை அழைப்பதற்கானபொத்தானை தெரியாமல் அழுத்தி வரவழைத்துக் கொண்டிருந்தேன்.இசை வரிக்கான பொத்தான் என நினைத்து அழுத்தியபடி. தீவிரமான கோபத்துடன் வந்த பணிப்பெண்ணின் முகம் இன்னும் ஞாபகம் இருக்கிறது. அவள் முகத்தின் வழுவழுப்பு கவர்ச்சிகரமாக இருந்தது.ஆசிரியை பாணியில் ஒவ்வொரு பொத்தானையும் இயக்கும் நோக்கம் பற்றி விரிவாகச் சொன்னாள். நானும் மாணவன் பாணியில் சற்றே எழுந்து நின்று அவளின் முகப்பவுடர் மற்றும் உடம்பின் வாசனையை நுகர்ந்தேன்.

அவள் நல்ல ஆசிரியைதான். ஆசிரியையாக இருந்து விமானப் பணிப்பெண்ணாக வந்திருப்பாளா என்று யோசித்துப் பார்த்தேன்.விமானப் பணிப்பெண்ணாக இருந்து திரை நட்சத்திரங்களாகவும், பெரிய உத்தியோகஸ்தர், பணக்காரர்களுக்கு மனைவிமார்களாகவும் ஆகிப் போகிறவர்கள் பற்றி கேள்விப் பட்டிருந்தேன். அவள் நல்ல ஆசிரியையாக இல்லாவிட்டால் இவ்வளவு நேர்த்தியாக பொத்தான்களை இயக்க நான் கற்று கொண்டிருக்க மாட்டேன்தான்.

எனது தேர்ச்சி பற்றி நானே எனக்குள் மெச்சிக் கொண்டிருந்த போது என் பக்கத்து இருக்கையில் இருப்பவரை ஆராய்ந்தேன்.ஐரோப்பிய குளிர் தேசத்து நிறம். ஆனால் ஐரோப்பியரைப் போலத் தெரியவில்லை. இந்தியாவிற்குத் திரும்பிக் கொண்டிருக்கும் வட இந்தியராகக் கூட இருக்கலாம். அவரின் பெருத்த உடம்பு அவரை வட இந்தியராகக் காட்டிக் கொண்டது. ஆனால் என் உடல் நிறத்தைப் பார்த்துவிட்டு அவரும் யூகம் செய்து கொண்டு இந்தியில் பேச ஆரம்பித்தால் சிக்கல்தான். பேருந்து நிலையத்தில் எதிர்படுபவர்களிடம் சகஷமாக பேச ஆரம்பிப்பது போல இங்கே யாரும் பேச ஆரம்பித்து விட மாட்டார்கள் என்ற ஆறுதல் இருந்தது. குறைந்த பட்சம் ஆங்கிலத்தில் ஆரம்பித்து பின் செளகரியத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளக் கூடும்.

பேருந்திலிருந்து எட்டிப் பார்ப்பது போல் குண்டான பக்கத்து இருக்கைக்காரரை தவிர்த்துவிட்டு எட்டிப் பார்த்தேன். பஞ்சு மேகங்களாய் ஏதோ தென்பட்டது. எத்தனை அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறோம் என்ற அறிவிப்பைக் காணோம். உயர உயர பறக்கிறோம் என்பதை இதற்கு முன்னதாக விமானப் பயணத்தில் கவனத்தில் கொண்டிருந்தது கொஞ்சம் பொழுது போக்காகவும் அமைந்திருந்தது.

இடுப்பு பெல்ட்டை கழட்டி விட்டுருந்தேன். அறிவிப்பு எதுவும் இல்லாமல் இருந்தது ஆச்சர்யமாக இருந்தது. மிகவும் முக்கியமான அறிவிப்பு ஒன்றிற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன் என்பது பக்கத்து இருக்கை குண்டருக்கோ, தூரத்தில் கார்டியன் பத்திரிக்கையை முகத்தின் மேல் போட்டு தூங்கிக் கொண்டிருப்பவருக்கோ, பணிப்பெண்ணுடன் மெல்லிய சிரிப்புடன் பேசிக் கொண்டிருக்கும் சக பயணிக்கோ தெரியாது. மிகவும் முக்கியமான அறிவிப்பு.

வெள்ளை தோல்களுக்கு மத்தியில் இருந்து கொண்டு என்னை நானே இந்த இரண்டு மாதங்களில் தாழ்த்திக் கொண்டாயிற்று. தோலின் நிறம் என்னை இன்னும் தாழ்த்திக் கறுப்பனாக்கிக் கொண்டிருந்தது, ஹீத்ரு விமான நிலையத்தில் மூன்றாவது தளத்தில் இறங்கின போது என்னைப் போலத் தோல் உள்ளவர்களை அதிகம் கண்ட போது அதிசயமாக இருந்தது. இது முழுக்க வெள்ளைத் தோல்களின் உலகம் ,இல்லையா என்பது போல. அப்புறம்தான் நண்பர் சொன்ன தகவலால் அதிர்ந்து போய் விட்டுருந்தேன். ஹீத்ருவின் மூன்றாவது தளப்பிரிவு என்பது இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் மூன்றாம் உலக நாடுகளின் விமானங்கள் இறங்கும் தளம் என்று. அதிலேயே அவன் முகத்தில் இனம் கண்டு முத்திரை குத்திவிட்டான் என்பது எரிச்சலாகத்தான் இருந்தது.

மதுபான வண்டி நகர்ந்து வந்து கொண்டிருந்தது. நம்மூர் வீதிகளில் ஐஸ் வண்டிகள் உருண்டு வரும் நினைவு டப் டப் என்று ஐஸ் பெட்டி தட்டும் சத்தம். அந்த சத்தத்தை தவிர்க்க முடியவில்லை. ஒரு ஸ்காட்ச் , விஸ்கி சிறு பன்னீர் பாட்டில் அளவு இருப்பதை எனது வேண்டுகோளுக்குகிணங்க தந்தாள். சோடாவும் வறுத்த முந்திரியும் வாங்கிக் கொண்டேன் . என் பக்கத்து சீட்டுக் குண்டன் எதுவும் வேண்டாமென்றான். அவன் தோல் நிறத்தைப் பாதுகாப்பதே இந்த மதுபானங்கள்தான் என்று நினைத்தேன்.வேறொரு சமயமாக இருந்தால் பாட்டிலை விழுங்கிவிட்டு , பயணிகள் இல்லாத இரண்டு மூன்று இருக்கைகளை மடக்கி நீண்ட படுக்கையாகி விட்டு இதமாகக் கம்பளியை போர்த்திக் கொள்ளலாம். ஆனால் இப்போதைக்கு இயலாது. முக்கியமான அந்த அறிவிப்புக்காகக் காத்திருக்கிறேன். அந்த அறிவிப்பு நிச்சயம் வெளியாகும் என்று நம்பிக் கொண்டிருக்கிறேன். என் எதிரில் செருகப்பட்டிருந்த அந்த விமானக் கம்பனியின் இதழை எடுத்தேன். நண்பர் ஒருவர் வெகு கவனத்தோடு சொல்லி அனுப்பியிருந்தார். எங்கெங்கு விமானப் பயணம் செய்ய நேருகிறதோ, அந்தந்த விமான கம்பெனி இதழ்களைச் சேகரித்து வரும்படி . அப்படிச் சேகரித்தும் இருந்தேன். இருபத்தி நான்கு கிலோ எடையளவு என்ற கணக்கு எல்லாவற்றையும் தூக்கியெறியச் செய்து விட்டது. பக்கத்து இருக்கையில் இருப்பவன் படித்துக் கொண்டிருப்பது விமான இதழாக இருக்க வேண்டுமென்று நினைத்தேன். அவன் எந்தப் பக்கத்தைப் படித்துக் கொண்டிருப்பான் என்ற நினைப்பில் அவன் மடித்துக் கையில் பிடித்துக் கொண்டிருக்கும் பக்கத்தைப் பார்த்தேன் . அவனின் ஆர்வம் என்ன என்பது தெரிந்துவிடும்.

சாப்பாட்டிலும் ஆர்வம் இல்லை என்பதையும் கொஞ்ச நேரத்தில் தெரிந்து கொண்டேன். சைவவாதியாக அவன் காட்டிக் கொண்டது இன்னும் ஆச்சர்யமாக இருந்தது. என் அசைவ உணவைப் பார்த்து முகம் சுளித்தான் என்பது தெளிவாயிற்று. என்னைக் கேலி செய்வது போல இவற்றையெல்லாம் நிராகரிக்கிறானா என்றிருந்தது. அவனது முகசுளிப்பு , சற்றே ஒதுங்கி உட்கார்ந்திருந்த என்னை எரிச்சல் ஊட்டியது.

இந்த எரிச்சலின் விளைவுதான் அந்த அறிவிப்பு . அறிவிப்பை நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். இன்னமும் அறிவிப்பைக் காணோம். வழக்கமாக ஏதாவது அறிவிப்பு இருந்து கொண்டே இருக்கும். இன்றைக்கு எதுவும் இல்லாதது என்னால் வரவிருக்கும் அறிவிப்பு காரணமாகவா.

சே.. என்ன தேசம். வீதியில் நடக்கும் போது உடம்பைப் குறுக்கிக் கொண்டு நடக்க வேண்டியிருக்கிறது. இடித்துக் கொண்டு நடக்கப் பழகி விட்டபின் இடிக்காமல் கற்பு காப்பது சிரமம் என்று பட்டது. வெள்ளைத் தோல்காரர்கள் இப்படித் தவறி இடிப்பதில் அக்கறை கொண்டு ஏதாவது கேட்டிருந்தால் சரி செய்து கொண்டிருக்கலாம். அவன் ஆப்பரிக்க இளைஞன். அவனை நான்அறியாமல் இடித்துவிட்டேன் என்பதற்காக இது உன் தேசம் அல்ல என்று உரக்கக் கத்தியது மட்டும் தெளிவாகப் புரிந்தது. அதற்கு முன் அவன் திட்டப் பயன் படுத்திய ஆங்கில மொழியின் நளினமும் வேகமும் சுத்தமாக எனக்குப் பிடிபடவில்லை. அதன்பின் இந்த வெள்ளைத் தோல்களுக்காக உடம்பை எப்படியெல்லாம் குறுக்கிக் கொண்டு நடக்க வேண்டியிருந்தது. வெள்ளைத் தோல்கள் பார்த்த பார்வையில் உடம்பு ஒரு சாண் குறைந்திருக்கும். வெள்ளையர்களுக்கு மட்டும் என்று விளக்கம் போடப்பட்ட ஹோட்டல்களைப் பார்த்து தயங்கி நடக்க வேண்டியிருந்தது. வெள்ளைக்கார சர்வர்களிடம் என்ன வேண்டும் என்று சொல்லக் கூட உரத்த குரல் இல்லாமல் போய்விட்டது.

உரத்த குரலில் வானொலி, தொலைக்காட்சி முதலியன கேட்டுப் பழகியபின் காது இயல்பாக மந்தமாயிருந்தது. வெள்ளைத் தோல்களைப் போல் குசுகுசுவெனப் பேசுவது பிடிக்கவில்லை . ஆனால் இவர்களின் தேசத்தில் குசுகுசுத்துக் கொண்டுதான் இருக்க வேண்டியிருந்தது. ஊருக்குப் போய் உரக்கச் சிரித்துக் கொண்டு நடைபோட வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது.

வெள்ளைக்காரர்களின் உலகம் பற்றிய பெரிய ஏக்கம் இருந்தது. ஆனால் அதனுள் நுழைந்து திரிந்தபின் தோலை பிளீச்சிங் செய்து வெள்ளை நிறமாக்கிக் கொண்டால்தான் மரியாதை என்பது தெரிந்து விட்டது. இல்லாவிட்டால் அவர்கள் பார்வையில் அருவருப்பாய் பட்டு நெளிய வேண்டியதுதான்.

அன்றைக்கு மெட்ரோவில் அந்த கறுப்பு இளைஞனின்அற்புதமான கிதார் வாசிப்பு. இடைஇடையே வெறும் லல்லல்லல்லா குரல் மட்டும். ஒரு அற்புதமான நடனத்தின் அம்சங்களையும் கொண்டிருந்தது. சட்டென நிறுத்து என்றது ஆங்கிலக் கட்டைக் குரல். சொற்பமாய் இருந்த பயணிகளின் மத்தியில் அப்படியொரு கட்டைக் குரலுக்கு உரியவனை நான் தேடினேன். ஒரு இளைஞன் என்பது தெரிந்தபோது ஆச்சர்யமாக இருந்தது. எனது வாசிப்பு தங்களுக்கு இடைஞ்சலாக இருக்கிறதா.. மன்னிப்புக் கேட்கும் தோரணையில் இளைஞன் கேட்டான் ஆமாம் என்பதை அழுத்தம் திருத்தமாக நாலைந்துமுறை ஆங்கில இளைஞன் சொன்னான். கறுப்பு இளைஞன் மண்டியிடும் தோரணையில் நின்றான். தங்களுக்கு இடைஞ்சல் என்றால் நிறுத்திக் கொள்கிறேன் என்று நிறுத்திவிட்டான். கறுப்பு இளைஞனின் முகத்தைப் பார்த்தேன். அடிப்பட்ட மூஞ்சூறு போல வெகுவாக சிறுத்திருந்தது உன் வாசிப்பு இதமானது . வாசி வாசி வாசித்துக்கொண்டே இரு என்று சொல்ல வேண்டும் போலிருந்தது. நம்மூர் புகை வண்டி , பேருந்து நிலையம் என்றால் ஒரு மகா களேபரத்தை உருவாக்கிக் காட்டியிருக்கலாம். ஆனால் இப்போது இந்த வெள்ளையன் என் முகத்தில் குத்திவிட்டால் நான் சுலபமாகச் சாய்ந்து விடுவேன். அவனின் கைகள் என் தொடை போல் பருத்திருந்தன. சும்மா இருந்துவிட்டேன்.

பாரீசிலிருந்து ஊர் திரும்ப வேண்டிய கட்டாயம் நேர்ந்துவிட்டது. பாஸ்போர்ட், விசா பரிசோதிக்கும் பகுதி வரைக்கும் வந்துவிட்டு நண்பர்கள் விடைபெற்றுச் சென்று விட்டார்கள். நீண்ட வரிசை இருந்தது. ஒவ்வொருவரையும் பரிசோதித்து, விமானம் ஏற நேரம் இருக்குமா… பரிசோதனை சரியாக நடக்கவில்லையென்றால் விமானத்தின் புறப்பாடு தாமதப்படலாம் . எவ்வளவு நேரம் இந்த நீண்ட வரிசையில் காத்திருப்பது என்ற வெறுப்பு இருந்தது. சட்டென வரிசையின் இடையில் தென்பட்ட சிறு இடைவெளியில் என் கனத்த பெட்டியொன்றை நகர்த்திவிட்டேன். அனி பரிசோதனையின் நுழைவைச் சுலபமாக எட்டிவிடலாம் . கால் கடுக்க மணிக்கணக்கில் நின்று கொண்டிருக்க வேண்டாம்.என் சமயோஜித புத்தியை நினைத்து மகிழ்ந்து கொண்டிருந்தேன்.

பரிசோதனை அதிகாரியாக இருந்த இளம் பெண்ணின் நளினம் வியக்கத்தக்கதாக இருந்தது. அவள் பிரஞ்சு மொழியிலும் மற்ற மொழிகளிலும் மாறி மாறி கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு மொழியும் வெவ்வெறு விதமான முகத்தசை நார்களை இயக்குமா என்பது போல் முகம் நளினமாய் வளைந்து நெளிந்து கொண்டிருந்தது. ஒரே விதமான கேள்விகள். பெட்டியை நீதான் உடைத்தாயா…… அந்நியர்கள் உன் பெட்டியை அனுமதியின்றி திறந்து மூட ஏதாவது அனுமதித்தாயா….. உள்ளே இருக்கும் பொருட்கள் அனைத்தும் உன்னைச் சார்ந்ததுதானா…… எந்த வெடிபொருளோ அபாயம் விளைவிக்கும் பொருளோ உள்ளே இல்லை அல்லவா…. என்ற பொருளில் கேள்விகள் இருந்தன. இந்தக் கேள்விகளையெல்லாம் கேட்கும் பொழுது அந்தப் பெண்ணின் முகம் இறுகியிருந்தது. சட்டென இவை பற்றின பதில்களைப் பெற்றபின் உங்கள் பயணம் இனிமையானதாக அமையட்டும் என்ற வாழ்த்தைச் சொல்லும் போது உலக இயற்கையின் பூரிப்பை மனதில் கொண்டு வந்து மலர்கிறவள் போல் இருந்தாள். அந்த மலர்ச்சிக்காகவே அப்பெண்னை பார்த்தக் கொண்டிருக்க வேண்டும் போலிருந்தது.

அப்பெண் பிரஞ்சு தேசத்துகாரியாக இருப்பாளோ என நினைத்தேன். வெள்ளைத்தோல் என்று வந்தபின் தேசத்தை அடையாளம் காண முடியவில்லை. கும்பல் கும்பலாய் விமானப் பணிப்பெண்கள் செல்வதைப் பார்க்கையில் எந்தெந்த தேசம் என்று மணம் கணக்கிடும். ஒவ்வொருவரையும் நிறுத்தி எந்த தேசத்து அழகு இந்த வடிவில் இருக்கிறது என்று கேள்வி கேட்கத் தோன்றியிருக்கிறது. புடவையில் இந்தியப் பெண்களைப் பார்க்கிற போது சுலபமாக அடையாளம் காண முடிகிறது. நட்சத்திரங்கள் மாதிரி பெண்கள் உலாவும் இடம். என் அருமையான நட்சத்திரத்தை நான் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தேன். அதன் மினுமினுப்பில் என் கறுப்புத் தோல் கிழிலிசை போல நாறிக் கொண்டிருப்பது தெரிந்தது. அதை யாரோ சட்டையைப் பிடித்து சொல்லுவது போல் பட்டது.

அந்த வெள்ளைக்காரன் ஏகதேசம் என்னை உலுக்கிற பாணியில்தான் என்னருகில் வந்து நின்றான். அவன் முக இறுக்கம் மட்டும் அவன் ஏதோ ஆட்சேபணை செய்வது தெரிந்தது. அவன் பேசுவது பிரஞ்ச்சசா,ஷெர்மனா என்று ஆராய்வதற்கான முயற்சிகளுடன் நான் நின்று கொண்டிருந்தேன். அவன் ஆங்கிலத்தில் அவனது ஆட்சேபனைகளை வைத்தான். அப்போதுதான் சுயஉணர்வு வந்தவன்போல் அர்த்தம் உணர்ந்தேன். நான் நீண்ட வரிசையில் இடையில் வந்து நின்றதற்கான ஆட்சேபணை அது. நான் நிலை குலைந்துபோனவன் போல் பேசாமல் நின்றிருந்தேன்.

என் மெளனம் அவனை எரிச்சல் செய்திருக்க வேண்டும். அறுபடியும் ஆங்கிலத்தில் அவனின் .அட்சேபணையை சொன்னான். அவனின் குரல் உரதுக் கொண்டே சென்றது. பக்கத்தில் இருப்பவர்கள் என்னை கூர்ந்து கவனிப்பது தெரிந்தது.அவர்களின் முணுமுணுப்பும் நிச்சயமாக -ஆட்சபணையாகத்தான் இருக்க வேண்டும் என்று யூகித்தேன். முணுமுணுப்பு விஸ்வரூபமாகி விமானப் புறப்பாட்டின் பெருத்த சப்தம் போல் என் காதுகளை அடைப்பது போல் இருந்தது. குசுகுசுத்தே பேசிப் பழகிய அவர்களால் எப்படி கத்த முடிகிறது ….. நம்மூர் தெருசண்டையைப் போன்ற கரகரப்பான குரல் என்றில்லாவிட்டாலும் குரலில் சண்டைத்தனம் இருந்தது. ஐரோப்பிய முகங்களே சிவப்பாகிற நிலையில் நானும் வெட்கப்படவேண்டி ஆனது.

நீண்ட வரிசையின் கடைசிக்குத் துரத்தப் பட்டிருந்தேன். என்னை வழியனுப்பிச் சென்றுவிட்ட தமிழ் நண்பர்கள் எங்கோ நின்று கொண்டு என்னைப் பார்த்துக் கொண்டிருப்பதற்கான உறுத்தல். முகமும் உடம்பும் வியர்த்து என்னை கசகசவென்று ஆகியிருந்தன.

சட்டென உடம்பு ஒரு அருவருக்கத்தக்க பூச்சியாகிவிட்டது. ஊர்ந்த ட்ராலிக்குள் மறைந்து கொள்கிறேன். மின் விளக்குகளின் அபரிதமான ஒளியில் என்னைக் இறுக்கிக் கொள்ள வேண்டியிருந்தது.என் கால்களின் எண்ணிக்கை விபரீதமாகி விமானக் கட்டிடத்தை விழுங்கும் கற்பனை உவப்பாக இருக்கிறது. என் விஸ்வரூபத்தினால் இந்த வெள்ளையர்களை விழுங்கி சுவைக்க வேண்டும். என் கால்களின் அடியில் கிடத்திப் போட்டு ரத்தம் பீச்ச வேண்டும். கறுப்பனாக இருந்து கேவலப்படுவதை விட அவர்களும் பட வேண்டும். மெல்ல ஊர்ந்து எஸ்கலேட்டர் பக்கம் போகிறேன். ஏறி மேலே மேலே எனச் சென்றுவிடலாமா என்று யோகிக்றேன் . அதன் ஏறி இறங்கும் அசைவும், மறைந்திருக்கும் பல் சக்கரங்களும் பயமுறுத்துகின்றன. விறுவிறுவென கீழிறங்கி வந்து வரிசையில் தஞ்சமாகிறேன்.

எல்லா சம்பிரதாயங்களும் முடிந்து வந்து நாற்காலியில் உட்கார்ந்த பின் என்னை உலுக்கிப் போன அந்த வெள்ளைக்காரன் ஞாபகம் வந்தான்.எதிரில் இருந்த மேஷையில் அவன் இன்னொரு பெண்ணுடன் உட்கார்ந்திருந்தான். கறுத்த ஆரஞ்சு திரவம் அவன்முன் பொங்கி வழிந்து கொண்டிருந்தது. எதிர் பெண்ணின் உதட்டு சிகரெட்டு , வளையம் வளையமாக புகையைக் கிளப்பிக் கொண்டிருந்தது. இவர்களுக்கு மட்டும் பெண்கள் எப்படி சுலபமாக அகப்பட்டுப் போகிறார்கள். திரவம் பொங்கியதைப் போல எனக்குள் எரிச்சல் அபரிமிதமாகிக் கொண்டிருந்தது.

கையில் இருந்த பிராங்குகளையும், மார்க்குகளையும் டாலர்களாக மாற்றிக் கொண்டு விடலாம் என்று நினைப்பு வந்தது. நாலைந்து கவுண்டர்களைக் கொண்டிருந்தது பணம் மாற்றும் இடம். என் கையில் இருந்த பிராங்குகளையும், மார்க்குகளையும் எண்ணிணேன். வெகு சொற்பம்தான். என் அருகில் வந்த இன்னொரு வெள்ளைக்காரன் கையில் கத்தை கத்தையாக பிராங்குகள் இருந்தன. கத்தையை அவன் டாலராக மாற்றப் போகிறான். அந்தக் கத்தைக்கு முன்பு என் கசங்கின ஒன்றிரண்டு நோட்டுகள் என் பிச்சைக்காரத்தனத்தை காட்டிவிடும். ஒதுங்கி நின்று கொள்கிறேன்.

வெள்ளைக்காரன் கற்றை பிராங்குக்கு பதிலாக கற்றை டாலர்களை பெற்றுக் கொண்டு நகர்கிறான். கற்றைக்கு அடுத்து சில சில்லரை நோட்டுகளைத் தரும் அற்பனாக நான் இருக்க வேண்டுமா என்ற யோசிப்பு வருகிறது. அவர்கள் என்ன எங்கு போய் நின்றாலும் துரத்துகிறார்கள். இவர்களிடமிருந்து தப்பித்துக் கொள்ள முடியாதா…. தப்பித்து ஓடி ஒளிந்து கொள்ளலாம் என்றாலும் விடமாட்டேன் என்கிறார்களே . கையிலிருந்தவற்றை எப்படியும் டாலர்களாக மாற்றிக் கொள்ள வேண்டும். அதற்கான விண்ணப்பத்தில் கையெழுத்திட்டு கொடுத்த போது இன்னொரு வெள்ளைச் சீட்டையும் இணைத்தேன்.

என்னால் ஒரு வெள்ளைக்காரனையாவது குறைந்தபட்ச மிரட்டலுக்கு உட்படுத்த வேண்டும். வெள்ளைத்தாளில் நீண்ட வரிசையில் நிற்கும் போது என்னை மிரட்டின வெள்ளைக்காரனின் முகஷாடையை எழுதினேன். அவன் தோளில் தொங்கிய பைபிள் அடையாளம் பற்றி எழுதினேன். அவன் என்னை கறுப்பன் என்று திட்டியதாக. என்னை எப்படியும் காயப் படுத்தி விடுவதாகச் செ ான்னான். நான் பயணம் செய்யும் விமானத்தில்தான் அவனும் பயணம் செய்கிறான். எனவே அவன் சொன்னது போல் அந்த வெள்ளைக்காரணால் எனக்கு ஆபத்து ஏற்படலாம் என்று குறிப்பிட்டிருந்தேன்.

டாலர்களை மாற்றாகப் பெற்றுக் கொண்டேன். என் இணைப்பை ஞாபகப் படுத்தும் விதமாய் பேப்பர் பேப்பர் என்று டாலர்களைப் கொடுத்த பெண்ணிடம் சொன்னேன். அவளுக்கு ஆங்கிலம் தெரிந்திருக்கும் என்ற எண்ணத்தில். இணைக்கப் பட்டிருந்த தாளைப் பார்த்தாயா என்றேன் ஆங்கிலத்தில். அவளுக்கு ஆங்கிவம் தெரியாது என்பது போல் என்னிடம் இருந்து வாங்கிய பிராங்கு , மார்க்குகள் எந்த விதத்தில் டாலர்களாக மாறி உள்ளன என்று பிரஞ்சில் சொல்லிக் கொண்டிருந்தாள்.ஆங்கிலம் கூட தெரியாத இவர்களை சொகுசான இன்னொரு இடத்தில் கொண்டு வந்து உட்கார வைத்திருப்பவர்களைச் சபித்தேன். இன்னொரு வெள்ளைத்தாளை எடுத்து பாதியாக்கி என் குறையை மீண்டும் பதட்டமில்லாமல் முன்பு எழுதியது போல் விரிவாக எழுதினேன். என் பார்வையில் பட்டு வந்து கொண்டிருந்த பிரஞ்சு போலீஸ்காரனின் பார்வையும் , கையிலிருந்த அவனின் பிடிக்குள் இருந்த வார் பட்டையுடனான வீபரீதமான நாயும் பயம் தந்தன. தாளைக் கவுண்டரில் இருந்த பணம் செலுத்தும் இடத்தில் நுழைத்துவிட்டு விறுவிறுவென நகர்ந்தேன்.

அந்தத் துண்டுத் தாளை அந்தப் பெண் படித்திருப்பாள் . ஆங்கிலம் தெரியவில்லை என்றாலும், தெரிந்தவர்களிடம் ஒப்படைத்திருப்பாள். ஆங்கில மொழி பெயர்ப்பும் கிடைத்திருக்கும். களேபரம் ஆகியிருக்கும்.

விமானம் கிளம்புவதற்குள் அவனை தடுத்து நிறுத்திவிடுவார்கள் என்று நினைத்தேன். இல்லை. அந்தத் தாள் சரியாக மொழிபெயர்க்கப் படவில்லையா… விமானம் கிளம்பிய பின் அந்தத் தாள் சரியானவர்களிடம் கிடைத்திருக்கும். சீக்கிரம் நடவடிக்கை இருக்கும். ரசிக்கலாம்.

விழுங்கியிருந்த ஸ்காட்ச் விஸ்கி விமானத்தின் மிதப்பை என்னுள்ளும் கொண்டுவந்து விட்டது. இடது பக்கம் மூன்று இருக்கைகள் காலியாக இருந்தன. அவற்றை நீட்டிப் போட்டால் நல்ல படுக்கையாகிவிடும். மிதிப்புடன் தூங்குவதைப் போல சுகம் ஏதும் இல்லை.

துண்டுத்தாள் கிடைத்திருக்கும். என்னைக் கூப்பிட்டு அந்த வெள்ளைக்காரனை அடையாளம் காட்டச் சொல்வார்களா… துண்டுத்தாளில் எழுதியிருந்த அடையாளத்தை வைத்து அவனை முன்பே சுற்றி வளைத்திருப்பார்களா… இன்னும் பரபரப்பபாய் இருக்கட்டும் என்று அவன் வெடிகுண்டுகளை வைத்திருந்தான் என்று எழுதியிருக்கலாமா… அந்தத் துண்டுத்தாள்களில் பெயர் , விமான எண்களை எழுதினேனா… குழப்பமாக இருந்தது. போதை உச்சமாகி இருந்ததை நான் எழுந்திருக்க முயன்று தள்ளாடுவதிலிருந்து தெரிந்து கொண்டேன். விமானம் குலுங்குவது போல் இருந்தது.

அறிவிப்பிற்கான ஆயத்தம் என்பது போல் கரகரப்பு கேட்டது,. பெண் குரல் என்று யூகிக்க முடிந்தது. போதையைச் சற்று உதறிவிட வேண்டும் போல் இருந்தது. போதையைத் தணிக்க விமானப் பணிப்பெண்ணிடம் என்ன கேட்கலாம்.. லெமன்ஷூ ஸா … அறிவிப்பை சரியாகக் கேட்பதற்காவது சரியான நிலைக்கு வந்தாக வேண்டும்.

ஏதோ அறிவிப்பு தொடங்கியிருந்தது.

——————————————————————

———————–

Series Navigation