This entry is in the series 20040513_Issue

அருண்பிரசாத்


உடைந்த முட்டை ஓடு வழியே
மலங்க மலங்க விழித்தபடி
தாயைத் தேடும் ஒரு குஞ்சைப் போல
உன்னைத் தேடுகிறேன்.

இன்னும் சிறிதாக ஒரு விரிசல் தேவைப்படுகிறது
முழுவதுமாய் வெளியேறி
ஈரத்துடன் கூடிய கதகதப்பான
முதல் அரவணைப்பைப் பெறுவதற்கு.

அருண்பிரசாத்
everminnal@yahoo.com

Series Navigation