அகமுடையவனே

This entry is part [part not set] of 26 in the series 20011015_Issue

ஜனனிபாலா


புருஷனை அண்ணாவிற்கு நிகராய் ஆக்க
முயற்சிக்கும் தங்கைகளுக்கும்
அப்பாவே அகிலத்தில் அசைக்கமுடியாதவரென்று
பூஜிக்கும் குமாரிகளுக்கும்
படித்து வேலைக்குச் சென்று சாம்ராஜ்யம்
படைக்கும் புதுமைப்பெண்களுக்கும்
வீட்டில் சுதந்திரமென்றும், ‘தன் ‘ நேரமென்றும்
வேலைக்குச் செல்லா மனைவிகளுக்கும்
மத்தியில், அகமுடையவனே! உன்னை ‘ஆணாக ‘
நேசிக்கும் நான்- ஒரு சராசரிப் பெண்.

Series Navigation

ஜனனிபாலா

ஜனனிபாலா