தமிழ்க் கணிமைக்கான சு.ரா. விருது: ஒரு கேள்வி

This entry is part of 40 in the series 20110206_Issue

பா. ரெங்கதுரைமறைந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமி, தமிழ்க் கணிமையிலும் தகவல் தொழில் நுட்பத்திலும் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எந்த ஒரு பங்களிப்பையும் செய்ததில்லை. அமெரிக்காவில் நிரந்தர வசிப்புரிமை பெற்றிருந்த அவர், வருடத்தில் பாதி நாள்கள் சிலிக்கான் சமவெளி என்று அழைக்கப்படும் கலிஃபோர்னியா மாநிலத்தில் வசித்தார் என்பதைத் தவிர தகவல் தொழில் நுட்பத்திற்கும் அவருக்கும் வேறு எந்த சம்மந்தமும் இருந்ததாகத் தெரியவில்லை. அப்படி இருக்க, அவருடைய பெயரில் எதற்கு இப்படி ஒரு விருது?

சு.ரா.வின் பெயரால் தமிழ்ப் படைப்பிலக்கியத்திற்கு விருது கொடுப்பது எவ்வளவோ பொருத்தமாக செயல். தமிழ் இலக்கியத் தோட்டம் போன்ற அமைப்புகள் கருணாநிதி பாணியில் செயல்பட்டு, சம்மந்தமே இல்லாமல் சு.ரா. பெயரால் இத்தகைய விருது வழங்கும் செயல்களில் ஈடுபடுவது அவருடைய பெயரைக் கொச்சைப்படுத்தும் செயல் என்பதோடு மட்டுமல்லாமல் கண்டனத்துக்கும் உரியது.

Series Navigation