நர்கிஸ் – மல்லாரிப் பதிப்பகம் நாவல் -கட்டுரைப் போட்டிகள்

This entry is part [part not set] of 43 in the series 20080417_Issue

அறிவிப்பு



நர்கிஸ் – மல்லாரிப் பதிப்பகம்

இணைந்து நடத்தும்

“முகம்மது இஸ்மாயில் -இபுறாஹீம் பீவி நினைவு”

நாவல் -கட்டுரைப் போட்டிகள்

கட்டுரை

தலைப்பு

“இஸ்லாமிய வெளிச்சத்தில் மனித நேயம்”

முதல் பரிசு: ரூபாய் 5000/-
இரண்டாம் பரிசு: 3000/-
மூன்றாம் பரிசு: 2000/
5 றுதல் பரிசுகள் : 1000/-

விதிகள்

1.கட்டுரை 12 முதல் 15 அத்தியாயங்களைக் கொண்டதாக அமையவேண்டும்.

2. ஒவ்வொரு அத்தியாயமும் வெள்¨ளை முழுத்தாள் அளவில் (A-4) கையெழுத்தில் 4 – 6 பக்கம் அச்சில் 3 பக்கங்களுக்கு மிகாமல் இருக்கவேண்டும்

3. குர்ன் , ஹதீஸ் , நூல் மேற்கோல்கள் பயன்படுத்தும் போது சரியான தாரங்கள் தரப்பட வேண்டும்.

நாவல்

முதல் பரிசு: ரூபாய் 5000/-
இரண்டாம் பரிசு: 3000/-
மூன்றாம் பரிசு: 2000/
5 றுதல் பரிசுகள் : 1000/-

விதிகள்

1.இஸ்லாமிய விழுமியங்கள், கலாசாரம், சமூக ஒற்றுமை, மனிதநேயம், நாட்டுப்பற்று மேவும் முஸ்லிம் வாழ்வியலை மையமாக வைத்து எழுதப்படும் சமகால சமூக நாவலாயிருக்கவேண்டும். வரலாற்று நாவல்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டா.

2. அத்தியாயங்கள் 15 முதல் 18 -க்கு மிகாமல் இருக்கவேண்டும்.

3. ஒரு அத்தியாயம் வெள்¨ளை முழுத்தாள் அளவில் (A-4) கையெழுத்தில் 6 – 8 பக்கம் அச்சில் 4 பக்கங்களுக்கு மிகாமல் இருக்கவேண்டும்

பொது விதிகள்

1.போட்டிகளில் பங்கு பெறுவோர் தனித்தாளில் தங்களது சரியான பெயர்/தகப்பனார்/கணவர் பெயர்கள் /கல்வித்தகுதி/ முகவரி/ தொலைபேசி எண்கள்/ ஈமெயில் இவற்றுடன் க்கம் தங்களுக்குச் சொந்தமானதென்றும், தழுவலோ அல்லது மொழிபெயர்ப்போ அல்லவென்றும், போட்டி விதிகளுக்குக் கட்டுப்படுவதாகவும் உறுதிமொழி அளித்து கையொப்பமிட்டு அனுப்ப வேண்டும்

2. ஒரு பக்கம் மட்டுமே எழுத / டைப் செய்ய வேண்டும்

3.க்கங்களை தபாலிலோ / கூரியர் சர்வீஸிலோ அனுபலாம். க்கங்கள் கிடைத்த ஒரு வாரத்துக்குள் பெற்றுக்கொண்டதற்கான தகவல் அனுப்பப்படும். அதன் பிறகு அது சம்பந்தமாக அனைத்து கடித/ ஈமெயில்/ தொலைபேசித் தொடர்புகள் தவிர்க்கப்பட வேண்டும்.

4. நர்கிஸ் – மல்லாரி பதிப்பகம் நியமிக்கும் நீதிபதிகளின் தீர்ப்பே இறுதியானது.

5. க்கங்கள் ஜூலை மாதம் 31 -ம் தேதிக்குள் கிடைக்கவேண்டும்

6.க்கங்களைத் திருப்பி அனுப்ப இயலாது. தபால் தலைகள் அனுப்ப வேண்டாம்.

7.பரிசு பெறும் நாவல்கள்/ கட்டுரைகள் முழுமையாகவோ/ பகுதியாகவோ நர்கிஸில் தொடர் கதைகளாக/ கட்டுரைகளாக வெளிவரும்; அவற்றை நர்கிஸில் வெளிவரும் வரை வேறு வகையில் பிரசுரிக்கக் கூடாது.

8.பரிசீலனை முடிந்த பிறகு நர்கிஸ் இதழில் முடிவு அறிவிக்கப்படும்; அதைத்தொடர்ந்து பரிசுபெற்றவர்களுக்கும் பதிவுத் தபால் / கூரியர் சர்வீஸ் மூலம் தெரிவிக்கப்படும். அதனுடன் பரிசுத்தொகையும் காசோலை மூலம் அனுப்பிவைக்கப்படும்.

9.கட்டுரைகள்/ நாவல்கள் நர்கிஸ் முகவரிக்கு ( 54, மரியம் நகர், மல்லிகைபுரம், திருச்சி- 620001, தமிழ்நாடு, இந்தியா) அனுப்பப் பட வேண்டும் ; கடித உறையின்மீது கட்டுரை/ நாவல் என்று தெளிவாகக் குறிப்பிடவேண்டும்

10.ஒருவரே இரண்டு போட்டிகளிலும் கலந்து கொள்ளலாம்; ஒன்றுக்கு மேற்பட்ட க்கங்களையும் அனுப்பலாம்.

எம். அனீஸ் பாத்திமா டாக்டர் அ. சையத் இப்ராஹீம்
(ஹிமானா சையத்)
பதிப்பாளர்/நிர்வாக சிரியை கௌரவ சிரியர் : நர்கிஸ்
நர்கிஸ் நிறுவனர்:மல்லாரி பதிப்பகம்
திருச்சி -620001 சித்தார்கோட்டை-623513

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு