விடாது துரத்தும் ஜின்

This entry is part [part not set] of 43 in the series 20070104_Issue

சூபி முகமது


1)கபாவில் எண்ணற்ற காஜிகள் முத்தமிடுவதான ஹஸ்ருல் அஸ்வத் பதிக்கப்பட்ட புனித வடிவம் பெண்குறி வடிவமைப்புத்தான் என்பதை உலக வாசகர்களுக்கு படம் போட்டு அம்பலப்படுத்திய வகாபியின் தொண்டுள்ளத்திற்கு நன்றி.

அல்லாவின் பெயரைச் சொல்லி நடத்தும் கபா வழிபாடாகவும் பெண்குறி வழிபாடாகவும் இபுராகீம் நபி வழிபாடாகவும் கல்லெறி வழிபாடாகவும் பேணப்படும் நிலையில் வகாபிகளுக்கு தர்கா வழிபாடு பற்றி விமர்சிக்க எந்த யோக்கியதையும் இல்லை.

2)நபிமுகமதுவின் கருத்துக்களை 13 ஆண்டுகள் கழித்து கலிபா உதுமான் அமைத்த சைது இப்னு தாபித் வல்லுனர் குழுவால் மறு உருவாக்கம் செய்யப்பட்டட்டதுதான் திருகுரான் என்பது நிறுவப்பட்டுவிட்டது.

இதற்கிடையே நபிமுகமது மறைந்து 250ஆண்டுகளுக்குப் பின் வகாபிய பாசிஸ்டுகளின் சமாதி ஒழிப்பு ந்டவடிக்கைகளின் கருத்துநிலைக்கு ஆதரவாக தொகுக்கப்பட்ட பல ஹதீதுகளை ஆதாரபூர்வமாக காட்டுவது ஆதிக்க அதிகாரத்தின் கால்களை நக்கிக் கொண்டிருப்பதற்கு சமமாகும்.

வகாபிய பாசிஸ்டுகளுக்கும் இந்தியாவில் பாபர்மசூதியை இடித்த இந்து பாசிஸ்டுகளுக்குமிடையில் இந்த வகையில் பெரிய வித்தியாசமில்லை.

3)அப்ரஹாவின் யானைப்படையை சிறுபறவைகள் கூட்டம் எப்படி அழித்தொழித்தன என்பதை அறிவுபூர்வமாக விளக்கக்கேட்டால் பழைய குருடா கதவை திறடா என்பதாக யானை ஆண்டு பற்றி கதாய்க்கிறார். பித்தம் தலைக்கேறிவிட்டது.

மனிதர்களை பன்றி குரங்குகளாகவும் மாற்றிய அல்லாவின் மந்திரவாதம்,ஆண்துணையற்ற மர்யத்தின் கர்ப்பம் ,பெண்குறிவழிபாடு,தன்னை வணங்காதவர்களை அழித்தொழித்த அல்லாவின் தவ்கீது வன்முறை உள்ளிட்ட ஏழு கதையாடல்களுக்கும் விஞ்ஞான விளக்கம் தராமல் வகாபி குழுமத்தை விடப் போவதாக இல்லை. விடாது துரத்தும் ஜின்….

அல்லாவின் மூட நம்பிக்கை சொல்லாடல் 8

அத்தியாயம்36 யாசீன் வசனங்கள் 139/145

கடலில் வீசப்பட்ட யூனூஸ் நபியை ஒரு மீன் விழுங்கிவிடுகிறது.உயிருடன் அவர் மீனின் வயிற்றில் வாழ்கிறார். இறையை துதிசெய்ததின் காரணமாக பிறகு அவர் வெளியே பூமியில் வீசப்படுகிறார்.

மீனின் வயிற்றில் யூனூஸ் நபி எப்படி வாழ்ந்தார்… அது நெத்திலி மீனா.. இல்லை திமிங்கலமா.. வகாபியின் பகுத்தறிவு மூளை பதில் சொல்லுமா…


tamilsufi@yahoo.com

Series Navigation

சூபிமுகமது

சூபிமுகமது