எச்.முஜீப் ரஹ்மான்
இலக்கிய படைப்புகளில் பயன்படுத்தபடுகின்ற மொழியின் இயல்பை அதில் காணப்படும் கூறுகள் மற்றும் விதிகளையும்,இலக்கணத்தையையும் விதிமுறை இலக்கிய இலக்கணமாகவும் வருணனை இலக்கிய இலக்கணமாகவும் விரிந்து சொல்லும் முறை பொதுவாக காணப்படுகிறது.இலக்கிய இலக்கணம் இருப்பவற்றை மட்டும் காட்டாமல் இனிமேல் வரும் ஆக்கம்களையும் உட்படுத்தும் போது ஆக்க இலக்கிய இலக்கணமாகிறது.(Creative Literary Grammar) அதாவது எந்த இலக்கிய மொழியும் வளர்ச்சிக்கும்,மாற்றத்துக்கும் இடம் தருவதே.எனினும் அந்த மாற்றமும் வளர்ச்சியும் எவ்வளவு மாற்றமடைந்தாலும் எப்படியெல்லாம் வேறுபாடு புலப்படுத்தி வளர்ந்தாலும் எப்போதும் மாறமல் தொடர்ந்து இழையோடிகொண்டிருக்கும் விதி அல்லது அமைப்பு எது என்றும் எத்தகையது என்றும் இனம் காணும் இலக்கணமுறையை மாற்றிலக்கணம் எனலாம்.
“Essentially, transformation is a method of stating how the structures of many sentences in languages can be generated or explained formally as the result of specific transformations applied to certain basic sentence structures.”
ஒவ்வொரு இலக்கிய படைப்பும் இணைமொழி என்பதை வரையறுக்கும்.இலக்கிய படைப்பு இணைமொழியாக இருந்து மொழியை கட்டமைக்கும் மூலப்பொருளாக மாறி சுய இயக்கம் பெற்றுவிடுகிறது.இந்த மொழியை பயன்படுத்தி சிதைத்தலை செய்யமுடியாது.ஆனால் ஒழும்கமைத்தலை செய்யமுடியும்.ஏனெனில் இது மொழியல்ல.மொழியால் மொழிக்குள் உருவாக்கப்பட்ட பிறிதொரு இணைமொழி தொகுப்பாகும்.இந்த இணைமொழியை கவிதைமொழி எனலாம்.இது கவிதைக்குள்ளும்,புனைவுகளுக்குள்ளும் செயல்படக்கூடியது.எனவே இலக்கிய மொழியானது கவிதை மொழியாக இருக்கும் பட்சத்தில் இலக்கியத்தில் அடிபடை என்னென்பது தெரிந்துவிடுகிறது.இந்த விதியில் பொருந்திவராத சிக்கலான மொழி,சமமற்ற மொழி,தொடர்ச்சியற்ற மொழி,கவிதை அற்ற மொழி என்பன இலக்கியத்தில் எப்படி பயன்படுகிறது என்பதும் முக்கிய விஷயம் ஆகும்.நேற்றுவரை கேள்விப்படாத அல்லது இன்றுவரை பேசியிராத கவிதை மொழி இதே அமைப்பில் நாளை உருவாக முடியும்.இது இலக்கிய படைப்பின் அடிப்படை தளமாகும்.அடிப்படையான கவிதை மொழி இலக்கியத்தின் இயல்புகளை ,கூறுகளை,சாத்தியம்களை இன்னும் அதிகப்படுத்துகிறது.கவிதை மொழி ஒழும்கமைதலுடனும்,ஒழும்கமைதலின்றியும் மொழிக்குள் இயம்கும் தன்மையுடையது.கவிதைமொழி சிக்கலாக,பூடகமாக,தொடர்பறுந்தும் இயம்க கூடியதும் ஆகும்.எனவே அடிப்படையாக நாம் புரியவேண்டியது
1)கவிதை மொழியின் இலக்கணத்தையும்,கவிதை மொழியல்லாத இலக்கிய மொழியின் இலக்கணத்தையும் பிரித்தறிய வேண்டும்
2)கவிதை மொழியற்ற நிலையில் இலக்கிய இலக்கணத்தை எவ்வாறு வகுப்பது என்பதை கண்டறிய வேண்டும்
3)கவிதை மொழியை புரிந்து கொள்வது
4)இலக்கணம்களை வகுத்து கொள்வது
Chomsky in `Syntactic Structures’ observes that “notions of phrase structure are quite adequate for a small part of the language and that the rest of the language can be derived by repeated application of a rather simple set of transformations to the strings given by the phrase structure grammar. Thus “Transformational Generative Grammar” was introduced.
ஆக,இலக்கிய மொழியில் விதிமுறைகளால் ஆன கவிதை மொழி,அமைப்பு ஆகியவற்றால் சிறந்த இலக்கிய படைப்பு கண்டுகொள்ளப் படுகிறது.இவற்றில் மாற்றிலக்கணம் இலக்கண பொருத்தமுடைய மொழியையை ஏற்றுக்கொள்ளும்.அடிப்படையான அமைப்பை உருவாக்கியப் பின்பு பயன்படுகிற விதிவகைகளை இனம் காணும் இலக்கிய மாற்றியல் கோட்பாடு முக்கியமானதாகும்.இது தர்க்க ரீதியான அமைப்புக்கும்,இலக்கண அமைப்புக்கும் உள்ள சம்பந்ததை காட்டுகிறது.ஒரு இலக்கிய படைப்பின் இலக்கணம் என்பது விதிகளின் ஒழும்கு முறையாகும்.அந்த விதிகளை ஒன்றன் பின் ஒன்றாக ஒழும்கு படுத்த வேண்டும்,ஆகவே, முழுமையான குறியீடுகளால் மட்டும் அமைகின்ற ஒழும்கான விதிகளில் ஆவது தான் மாற்றிலக்கணம் என்பதாகும்.இருவேறு தளம்களில் மாற்றிலக்கணம்[Transformal Grammar] இலக்கிய மொழி அமைப்பை காட்டுகிறது.ஒன்று கவிதை மொழி மற்றது மாற்றியல் தளம் என்பதாகும்.
[Language] is a particular social practice “in which people engage,” a practice that
“is learned from others . . . ” [Language] . . . exists “independently of any particular
speakers”; every individual speaker “has” such a language, but typically has only a
“partial, and partially erroneous, grasp of the language.”
இதனால் இருவேறு விதிகள் அமைகிறது.ஒன்று கவிதை மொழி அல்லது அடிப்படை மொழி விதிகள் மற்றொன்று மாற்றியல் விதிகள் என்பதாக இருக்கிறது.குறிப்பிட்ட எந்த ஒரு இலக்கியத்துக்கும் இலக்கணம் வகுக்க வேண்டும் என்றால் மேற்கண்ட இரு தளம்களில் தான் முடியும்.இலக்கிய படைப்பை இலக்கிய படைப்பாக மாற்றும் காரணிகள் எவை என்பதை மாற்றிலக்கணம் வரையறுக்கிறது.ஆரம்ப மரபுநிலையில் இலக்கிய படைப்பை இலக்கிய கர்த்தா தான் தீர்மானிக்கிறார் என்றிருந்தது.பின்னர் ஆசிரியன் இறந்த பிரதியில் முரணெதிர்வாக கட்டமைக்கப்பட்ட மொழி தீர்மானிக்கிறது என்று அமைப்பியல் சொன்னது.அதன் பிற்பாடு மொழியின் பன்முகதன்மை தான் இலக்கிய படைப்பை நிர்ணயிக்கிறது என்று பின்னமைப்பியல் தெரிவித்தது,கடைசியாக பின்நவீனத்துவம் மொழியை தாண்டிய விஷயம்கள் தான் தீர்மானிக்கின்றது என்றதும் கவனத்துக்குரியது.எனவே இலக்கியத்தில் மாற்றிலக்கணத்தின் தளம் இரண்டுவிதம்களில் செயலாற்றுகிறது.ஒன்று அமைப்பு நிலை மற்றது மாற்றியல் நிலை என்பதாகும்.அமைப்பு நிலையில் மொழியின் பயன்பாடும் மையமும்,ஏனைய உத்திகளும் காணப்படுகிறது.மாற்றியல் தளத்தில் இலக்கிய படைப்பை தாண்டிய அதாவது பிரதிக்கு வெளியே ஆன அர்த்தம்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
மாற்றியல் இருவேறுப்பட்ட வகையாக இருக்கின்றன.விருப்ப மாற்றம்கள் அவசிய மாற்றம்கள் என்பவையே அவை. இவை பிரதிக்கு வெளியே உள்ள சமூகம்,வரலாறு,பண்பாடு,அரசியல் போன்ற எண்ணற்றவற்றால் அமைகிறது.எனவே மாற்றிலக்கணத்தின் படி பிரதி/படைப்பு/இலக்கிய படைப்பு என்பவற்றின் உள்ளர்ந்த்தம்களை பிரதிக்கு வெளியே உள்ள காரணிகள் தீர்மானிக்கிறது என்பதாக உள்ளது.முன்பு பிரதியின் அர்த்தத்தை ஆசிரியன் தீர்மானித்துக்கொண்டிருந்தான்.பின்னர் பிரதியும் ,மொழியும்,வாசகரும் தீர்மானித்தனர்.அத்ன் பின்பு பிரதிக்கு வெளியேயுள்ள விஷயம்கள் தீர்மானிக்கின்றன.எனவே பிரதின் உள்ளர்த்தம்களை புரிந்து கொள்ள பிரதியின் வெளியர்த்தம்களும் இன்றியமையாதனவாகும்.இலக்கியத்தின் விதிகள் பற்றிய ஒழும்கமைப்பு அர்த்தம்களை மாற்றி விடுகின்றன.சில விதிகள் பிறவற்றை நோக்க கட்டமைப்பில் நெகிழ்வுடையதாக்குகிறது.இதனால் விதிகளின் தன்மைகள் மாறுகின்றன.இலக்கிய திறன் விதிகள் அடிப்படையில் விஷயம்களை மதிப்பீடு செய்கின்றன.இந்த இலக்கிய திறன் புதிய சொல்லாடல்களை புரிந்து கொள்ளவும்,கருத்தாடல்களை விளம்கவும் உதவுகிறது.இலக்கிய வாதிகளால் ஏற்றுக்கொள்ளப்படாத விஷயம்களை நீக்கிவிட்டு ஏற்புடைய விஷயம்களை வாசகர்களுக்கு புரியவைக்க ஆகும் உத்திமுறையொன்றை கண்டுபிடிக்க மாற்றியல் வல்லுநரின் நோக்கமாக அமைவதால் இலக்கிய உணர்வு மற்றும் இலக்கிய முடிவு பற்றிய ஆய்வே இவர்களுக்கு விருப்பமானதாக அமைகிறது.மொழியியல் துறையில் மிகுந்த செல்வாக்கு செலுத்திய மாற்றிலக்கணம் இலக்கியத்தில் பயன்படுத்தப்படுவது புதிய ஆய்வாக திகழும்.
இலக்கிய பிரதியில் வரும் விஷயம்கள் இலக்கிய பிரதியாகவே கருதப்பட்டுவருகிறது.ஆனால் அப்பிரதியில் வரும் விஷயம்கள் வேறு விஷயம்களுடம் தொடர்புடையதாக இருக்கிறது.உதாரணமாக மைதிலியின் இரவில் சலனமற்று கரையும் மனிதர்கள் கவிதைத் தொகுப்பில் உள்ள இன்னொரு ஸ்பாட்டகஸ் என்றகவிதையைப் பார்ப்போம்
”ஸ்பாட்டகஸைப் பற்றிய எனது பார்வை
விரிந்து வருகிறது
சாம்பற் புழுதியுண்ட கண்கள்
நாள்தோறும் அவனை
அவதானிக்கின்றன
எப்போதும் உருவகிக்கப்படும்
உருவிலிருந்து
நான் விடை கொள்கிறேன்”
எனத்தொடம்கும் கவிதையில் ஸ்பாட்டகஸை எப்படி புரிந்து கொள்வது?ஸ்பாட்டகஸ் யாரென்றோ அவனது உரு என்னவென்ரோ எப்படி அறிவது?
அந்த தொகுப்பில் நினைவு என்று மற்றொரு கவிதை.அதில் இப்படி வருகிறது
”இப்போது எம்கே இருக்கிறாய் நீ?
குளிர்காலம் முடிந்து விட்டது
நீர் நிறைந்த சிறு குட்டைகளிலெல்லாம்
லூண் பறவைகள்”
இந்த கவிதையில் வரும் லூண் பறவைகளை எப்படி புரிந்து கொள்வது?
இப்படி இலக்கிய படைப்புகளில் வரும் பல்வேறு விஷயம்கள் குறித்த நமது பார்வை தான் என்ன? எனவே தொடர்புறு விஷயம்களை இணைத்துபார்ப்பதால் இலக்கியத்தின் அமைப்பும் அல்லது அர்த்தமும் தெளிவு படுவதுடன் அதை கொண்டு அர்த்தம்களை மாற்றவும்,உருவாக்கவும் முடிகிறது.இலக்கியத்தின் அர்த்தம்களை ஆக்குகின்ற அடிப்படைக் கூறுகளை புரிய பிரதிக்கு வெளியேயுள்ள சில/சிறு கூறுகளும் உதவுகிறது.இன்று Inter Text,Sub Text,After text போன்றவை முக்கியத்துவம் பெற்றுவருகிறது.
இலக்கிய படைப்புகளில் அல்லது பிரதிகளில் ஆழ்நிலை அமைப்பு மற்றும் மேநிலை அமைப்பு என இரு தளம்கள் காணப்படும்.ஒவ்வொரு வாக்கியமும் மேநிலை,ஆழ் நிலை என்ற இரு அமைப்புகளை கொண்டிருக்கும்.மேல்நிலை அமைப்பு வாசக சுதந்திரத்தை கோரி நிற்கும்.ஆனால் ஆழ் நிலை அமைப்பு திறனாய்வில் மாத்திரமே கண்டுகொள்ள முடியும்.எனவே தான் இலக்கியத்தின் ஆழ் நிலையை புரிந்து கொள்ள இலக்கிய திறன் மட்டும் போதாது இலக்கிய செயல் எப்படியிருக்கிறது என்பதும் முக்கியமாகும். ஒரு ஆழ் நிலை அமைப்பு ஒன்றுக்கதிகமான மேநிலை அமைப்புகளையும் ஒரு மேநிலை அமைப்பு ஒன்றுக்கதிகமான ஆழ்நிலை அமைப்புகளையும் கொண்டிருக்கும்.ஆழ்நிலை அமைப்பு சிலசமயம்களில் மாற்று விதிகளால் மேலமைப்புகளாக மாற்ற்ப்படுகிறது.எனவே ஒரு பிரதியை புரிந்து கொள்ள ஆழ் நிலை அமைப்பு,மேநிலை அமைப்பு ஆகியவற்றை புரிந்து கொள்வது அவசியமாகிறது.மேலும் இந்த அமைப்புகள் ஏதாவது ஒரு வகையில் வெளியே அல்லது வெளிப்பிரதிகளுடன் தொடர்பு கொண்டிருகிறது.இந்த தொடர்பை அறிந்து கொள்வதன் வாயிலாக இலக்கிய திறனையும்,இலக்கிய செயல் பாட்டையும் சரிவர அறிந்து கொள்ள முடியும் என்பதே மாற்றிலக்கண நிலைபாடாகும்.
தற்காலத்தில் பின்நவீனத்துவம் ஒரு பிரதியை புரிந்து கொள்ள கட்டவிழ்த்தல் என்ற கோட்பாட்டை பயன்படுத்தி அமைப்புகளை கண்டுணர்ந்து பிரதிக்கு வெளியேயான தொடர்புகளை ஆராய்ந்தறிகிறது.இன்டர் டெக்ஸ்ட் என்ற கருத்தாக்கம் இம்கே மைய புள்ளியாக காட்சியளிக்கிறது.மேலும் குறிப்பானுக்கும் குறிப்பீடுக்கும் உள்ள இடுகுறிதன்மை அல்லது வேறுபாடு மற்றொரு குறிப்பானாக இருப்பதினால் சமூகம்,வரலாறு,அரசியல்,பண்பாடு போன்ற பல்வேறு துறைகளின் கருத்தாக்கம்கள் பிரதியை நிறுவுதாக இருக்கிறது.எனவே தான் பிரதியின் அர்த்தம் பன்முக தன்மை உடையதாகிறது. பிரதிக்கு உள்ளும் புறமும் அர்த்தம்கள் நிறைந்து காணப்படுகிறது.இந்த அர்த்தம்களை பன்முக தன்மையோடு வாசிப்பது என்பது பின் நவீன வாசிப்பக இருக்கிறது.
மாற்றிலக்கண சிந்தனைப்படி இலக்கிய திறனை புரிந்து கொள்வதற்கு பொருளனிலிருந்து கூற்று வரை [From morphene to Utterance] என்ற அமைப்பு தொடரியல் நோக்குடையதாக [syntantic structures] இருக்கிறது.ஹாரிஸ் போன்ற இலக்கண ஆசிரியர்கள் வழக்கில் இருக்கிற பருப்பொருளான மொழியில் உண்மையாக காணப்படுகிற தொடர்வடிவை விளக்கி காட்ட விருப்பம் கொண்டனர். ஆனால் நோம் சாம்கியோ ஒரு கூற்றின்[utterance] தருக்க ரீதியான அமைப்புக்கும்[logical organization] இலக்கண அமைப்புக்கும் இடையேயுள்ள சம்பந்தத்தை [correlation] நிலை நாட்டும் விதிகளை கண்டு பிடிப்பதில் ஆர்வம் காட்டினார்.இத்துடன் தொடர்புடைய மொழியின்,இலக்கிய தளத்தில் மாற்றிலக்கணம் செயல் படும் முறை இலக்கிய திறனை அடிப்படையாக கொண்டது.
இலக்கியம் ஒழும்கமைப்பால் ஆனது.சொல்லாடல்களும்,தொடர்களும் தம்முள் வேறுபடுகின்றன.சில தொடர்கள் நோக்க கட்டமைப்பில் பிறவற்றை நெகிழ்வுடையதாக்குறது.எனவே இலக்கிய கூறுகள் அற்ற இலக்கிய திறனை மதிப்பீடு செய்யவும்,புரிந்து கொள்ளவும் இலக்கிய தொடர்களை நீக்கிவிட்டு ஏற்புடைய தொடர்களை உருவாக்குவதே மாற்றிலக்கண செயல்பாடாகும்.இந்த வகையில் பிரதியின் மொழியை மாற்றியல்கள் எல்லாவகையிலும் உறவு கொண்டிருக்கிறது.இதை பிரதிக்கு உள்ளும் புறவுமான உறவுகளால் அறிய முடியும்.
மாற்றிலக்கணத்தோடு தொடர்புடைய ஹாலிடேயின் செயற்பாட்டிலக்கணம் கூட இலக்கிய தளத்தில் பயனுடையதாக வே இருக்கிறது. இலக்கியத்தில் மொழியின் செயல்பாடும்,பயனும் பற்றியதாக இருக்கிறது இந்த ஆய்வு முறை.
புளூம் பீல்டு என்பவரின் கருத்தினை ஒட்டி ஜே.ஆர்.பிர்த் என்பவரின் சந்தர்ப்பம்,சூழல் அல்லது நிலைமை என்பன தரும் பொருள் விளக்கம் பிரபலமாக பேசப்பட்டது.மொழியை இலக்கிய பிரதியின் வெளியேயிருந்து அணுகும் முறை ஹாலிடேயின் அணுகு முறையாகும்.இலக்கியத்தில் மூன்று முக்கிய பயன்பாடுகள் இருப்பதாக வரையறுத்துக் கொள்வோம்.முதலாவது அனுபவம் அல்லது கருத்தியல் பயன்பாடு.இலக்கியத்தில் மொழிப்பயன் பிரதியில் பொருண்மைக்கே முக்கியத்துவம் கொடுக்கிறது.புற உலக அனுபவம்கள்,புரிதல்கள், பார்வைகள் சூழல் சார்ந்து செயல்படுவன எல்லாம் வாசகனோடு/விமர்சகனோடு தொடர்புடையது.வாசகன்/விமர்சகன் அனுபவமும்,கருத்தியலும் பிரதிக்கு வெளியேயான விஷயம்கள்,இந்த விஷயம்கள் பிரதியின் மொழியை பொருள்கோள் வாசிப்பில் பாதிக்கின்றன.வாசகனின் மொழியே பிரதி மொழியை அர்த்தம் கொள்ள செய்கிறது என்பது மாற்றிலக்கண சிந்தனையாகும்.இரண்டாவதாக தன் தொடர்பு பயன்பாடு[Interpersonal function] வாசகனின் விருப்ப வகையாக அர்த்தம்களை வலியுறுத்தல்,வற்புறுத்தல்,விருப்பதிற்க்கு விடுதல் மற்றும் வினையடைகளால் அர்த்தம்கள் உருவாகின்றன.மூன்றாவதாக பிரதி பயன்பாடு[Textual function] அமைகிறது.பிரதியில் பயன்படும் மொழியை வாசகன் புரிந்து கொள்ளும் போது சூழ்நிலை அர்த்தத்தைக் கேட்விக்குள்ளாக்குகிறான்.சூழலுக்கு ஏற்ற மொழிப்பயன்பாட்டால் பிரதியை உருவாக்க வாய்பளிக்கும் செயல்பாடை பிரதி பயன்பாடு என்பதாகும்.இவ்வாறு செயல்பாட்டிலக்கணம் வழியாக மொழியின் அர்த்தத்தை உருவாக்குவதாக[Meaning-making] அல்லாமல் பொருள் அமைப்பதற்க்காக அல்ல[meaning-encoding] என்பது முக்கியமாக திகழ்கிறது.எனவே மாற்றிலக்கணமும் சரி செயற்பாட்டிலக்கணமும் சரி பிரதிக்கு வெளியேயான அர்த்தம்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கிறது
The conditions of language acquisition make it plain that the process must be largely
inner-directed . . . which means that all languages must be close to identical, largely
fixed by the initial state. The major research effort since has been guided by this tension,
pursuing the natural approach: to abstract from the welter of descriptive complexity certain
general principles governing computation that would allow the rules of a particular
language to be given in very simple forms, with restricted variety. (Chomsky 2000a: 122)
mujeebu2000@yahoo.co.in
- அக்டோபர் 2008 வார்த்தை இதழில்…
- புறம்போக்கு
- பெண் படைப்புலகம் இன்று- சமகால கருத்தரங்கம்
- வின்சென்டின் அனுபவக் குதிர்
- யமுனா ராஜேந்திரனின் ஆறு நூல்கள் விமர்சன அரங்கு :
- தா.இராமலிங்கத்தின் கவிதைகள் காமம், இனவுணர்வு, ஆன்மீகம்-மானிட முழுமையின் செழுமையான வெளிப்பாடு
- புலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் உலகளாவிய இலக்கியத் தேடல்
- புலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் உலகளாவிய இலக்கியத் தேடல் – 2
- “கந்தர்வன் நினைவு தமுஎச சிறுகதைப் போட்டி-2008” முடிவுகள்:
- சிங்கப்பூர் வீரபத்திரகாளியம்மன் கோவில் எதிரில் தீபாவளி பட்டிமன்றம்
- ’எண்’ மகன். நாடகம்- பரீக்ஷா
- நூல் வெளியீட்டு, அறிமுக விழா
- நேற்றிருந்தோம் 12-10-2008 , மாலை 4:30 க்குத் துவங்க இருக்கும் கூட்டத்திற்கான அழைப்பு:
- பிரதியின் உள்ளர்த்தமும்,வெளியர்த்தமும்: மாற்றிலக்கணத்தின் புரிதலில்
- விட்டுவிடுங்கள்
- தப்பூ சங்கர்களின் தப்பு தாளங்கள்
- காதல் வழிப்போக்கனோடு நடந்துவரும் இயற்கை
- உங்களை என்னைத் திரும்பிப் பார்க்க வைக்கும் கவிதை…
- என்னோடு வா ! பாப்லோ நெருடாவின் கவிதைகள் -7
- தாகூரின் கீதங்கள் – 52 அச்சம் எனக்கில்லை இனி !
- அப்பாவி நாவுகள்
- நறுக் கவிதைகள்
- வரவேற்பின்மை
- பெண்மை விலங்கில்
- சந்திப்புக்கு அடுத்து பிரிவு
- இழப்பு
- கறுத்த நாயும் பாத்றூமும்
- இழப்பு
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்று நாடகம்) காட்சி -1 பாகம் -1
- நம்பிக்கை இயந்திரங்கள்(Belief Engines)
- தமிழ்நாட்டின் சித்தர்களும் சூஃபியர்களும்
- அண்ணா நூற்றாண்டு: ஒரு வரலாற்றுப் பார்வை
- மெக்கா மசூதி ஆக்கிரமிப்பு- பகுதி 5
- என் கேள்வி இங்கே ! உன் பதில் எங்கே ?
- கடவுளின் காலடிச் சத்தம் – 1
- இந்திய இலக்கியம் – வாழ்க்கைக் கூறுகளும் பண்பும் – (2)
- ஆக்ரமிப்பு…,
- விரிக்கும் நிழலில் தேவதையின் சிறகு
- வேதவனம் விருட்சம் 7
- ரத்தக் கோபம் / கொப்பரைசில் /பிறந்தபோது
- திருமணம்
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! இரு கருந்துளைகள் மோதினால் என்ன நேரிடும் ? [கட்டுரை: 43]
- கழுதை ஏர் உழவு!
- எனது வாழ்க்கையின் 3 தவறுகள் ( பிசினஸ்- கிரிக்கெட்-மதம்)The Three mistake of my life – By chetan Bhagat
- விஸ்வரூபம் – அத்தியாயம் பதினொன்று