மீன் கட்லெட்டுகள்

This entry is part [part not set] of 54 in the series 20040401_Issue

ஃபரிதா அஷ்ரஃப் வாடிவாலா


1 கிலோ முள் இல்லாத மீன் துண்டுகள் (சுர்மெய், அல்லது டிலாபியா)

1/4 கிலோ உருளைக்கிழங்கு மசித்தது

1 தேக்கரண்டி உப்பு

2 தேக்கரண்டி இஞ்சிப்பூண்டு விழுது

10-12 பச்சை மிளகாய்கள்

1 தேக்கரண்டி தேங்காய்த்தூள்

1 தேக்கரண்டி கரம் மசாலா

2 முட்டைகள்

2 கோப்பை எண்ணெய்

கை நிறைய கொத்துமல்லி இலைகள்

செய்முறை

மீனைக்கழுவி தண்ணீரில் வேகவைக்கவும். பிறகு இதன் தோலை எடுத்துவிட்டு மசித்துக்கொள்ளவும். எல்லாவிதப் பொருட்களையும் தனியே மிக்ஸியில் போட்டு மசித்துக்கொள்ளவும். இத்துடன் மீன், உருளைக்கிழங்கு ஆகியவற்றையும் சேர்த்து கலக்கவும். இந்த கலவையிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக எடுத்து இறுக்கி தட்டையாக கட்லெட் போல ஆக்கி வைக்கவும். முட்டையை உடைத்து ஊற்றி அதில் இந்த உருண்டைகளை நனைத்து எண்ணெயில் மேலாக வைத்து இருபுறமும் பழுப்பு நிறமாகும் வரைக்கும் வறுக்கவும்.

Series Navigation

ஃபரிதா அஷ்ரஃப் வாடிவாலா

ஃபரிதா அஷ்ரஃப் வாடிவாலா