வாழைப்பழ முந்திரி ஐஸ்கிரீம்
Published May 12, 2002 • By

கால் கிலோ முந்திரிப் பருப்புகள்
1 கோப்பை ஆப்பிள் சாறு
3 பழுத்த வாழைப்பழங்கள் (பச்சைநாடன் போலப் பெரியது)
1 கோப்பை பால்
3 மேஜைக்கரண்டி தேன்
1 தேக்கரண்டி வண்ணிலா எஸ்ஸென்ஸ்
முந்திரிகளை மிக்ஸியில் போட்டு மாவாக அரைத்துக்கொண்டு அதனுடன் ஆப்பிள் சாறு ஊற்றி, கலவை மாவாக, நுண்ணியதாக அரைபடும் வரை அரைக்கவும்.
இத்துடன் வாழைப்பழம், பால், தேன் வண்ணிலா எஸ்ஸென்ஸ் போட்டு மென்மையானதாக அரைத்துக்கொள்ளவும்
இதனை ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தில் போட்டு ஃப்ரீசரில் உறைய விடவும்.
இரவு முழுவது உறைந்த பின்னர், ஐஸ்கிரீம் கோப்பைகளில் போட்டு பறிமாறலாம். வெய்யலுக்கு சாப்பிட இனிது.