புள்ளிவிவர அறிவியல் (statistics) நகைச்சுவை துணுக்குகள்

This entry is part [part not set] of 30 in the series 20020512_Issue


1

புள்ளிவிவர அறிவியல் படிக்கும் ஒரு மாணவன் ஒருவன் இருந்தான். அவன் எப்போது தன்னுடைய காரை ஓட்டினாலும், நடுவில் ஒரு ரோடு குறுக்கே வந்தால், வெகு வேகமாக ஓட்டி அங்கிருந்து விரைவான். எல்லோரும் ஒரு குறுக்கு ரோடு வந்தால் நின்று நிதானமாகத்தானே செல்வார்கள் ? ஒருமுறை தன்னோடு ஒரு நண்பனையும் கூட்டிக்கொண்டு காரில் செல்லும்போது, குறுக்கு ரோடு வரும்போதெல்லாம் வெகு வேகமாக ஓட்டுவதைப் பார்த்துவிட்டு அலண்டுவிட்டான் நண்பன். ஏன் இப்படி ஓட்டுகிறாய் என்று நண்பன் கேட்டான். புள்ளிவிவரம் படிக்கும் மாணவன் சொன்னான், ‘ம்ம்.. புள்ளிவிவரப்படி பார்த்தால், இந்த குறுக்கு ரோடு வரும் இடங்களில்தான் பெரும்பாலான விபத்துக்கள் நடக்கின்றன. ஆகவே அந்த இடங்களை விட்டு வேகமாக ஓடி விடுகிறேன்.. அவ்வளவுதான் ‘

2

ஒரு புகழ்பெற்ற புள்ளிவிவர அறிவியலாளன் எப்போதுமே விமானத்தில் செல்ல மாட்டான். ஏனெனில், விமானத்தில் குண்டு இருக்க, லட்சத்தில் ஒரு வாய்ப்பு இருக்கிறது என்பதைக் கணக்கிட்டு வைத்திருந்தான். அந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்க அந்த புள்ளீவிவர அறிவியலாளன் தயாராக இல்லை.

ஒரு நாள், அவனது நண்பன் ஒரு புள்ளிவிவரக்காரர்கள் மாநாட்டில் அவனைச் சந்தித்து, ‘எப்படி இங்கே வந்தாய் ? ரயிலிலா ? ‘ என்று கேட்டான்.

‘இல்லை பறந்துதான் வந்தேன் ‘

‘விமானத்தில் குண்டு இருக்க வாய்ப்புகள் பற்றி கணக்குப் போட்டு வைத்திருந்தாயே என்ன ஆயிற்று ? ‘

‘ஒரு குண்டு ஒரு விமானத்தில் இருக்க லட்சத்தில் ஒரு வாய்ப்பு. ஆனால் ஒரே விமானத்தில் இரண்டு குண்டுகள் இருக்க எவ்வளவு வாய்ப்பு எனக் கணக்குப் போட்டுப் பார்த்தேன். (1/1,00,000 X 1/1,00,000). இதற்கு மிக மிகக் குறைவான வாய்ப்புத்தான். இவ்வளவு குறைவான வாய்ப்பு இருக்கும்போது தைரியமாக விமானத்தில் வரலாம் என்று முடிவு செய்தேன். அதனால், நானே ஒரு குண்டு என் பையில் போட்டு எடுத்து வந்தேன் ‘

***

Series Navigation

செய்தி

செய்தி