மிஸ்டர்.நான்!

This entry is part of 39 in the series 20110410_Issue

ரசிகன்இணைந்தொருவன் இயங்கும் கூட்டத்தில்
அகாலமாய்
தனித்து விடப்பட்டிருக்கிறது இதயம்!

எவனுடையதும்
எவளுடையதும்
பிடிமானம் இருப்பதில்லை அதன் விரல் பிடிப்பில்…

யார் நீங்கள்?
எங்கு நிற்கிறேன்?
எங்கு செல்லப்போகிறேன்?
முகவரிகளற்ற உலகத்தில்
விடைகள் எதையும்
தெளிவாய் சொல்லத்தெரியவில்லை எனக்கு!

சிலவற்றை
வாய் கூசாமல் சொல்லிவிடலாம்…
இன்னுமொரு காதல்,
இன்னுமொரு புணர்வு,
இன்னுமொரு வோட்கா!

-ரசிகன்

Series Navigation