கிளைகளுக்கிடையேயான ஒளிவெளியில் தொங்கும்கனி

This entry is part of 34 in the series 20101205_Issue

கோநா


தாருருகும்
நகர சாலையில்
காற்றிலசையும் கிளைகள்மேல்
அநாயாசமாய் தவழ்ந்தபடி
வண்ணப் பூக்களை
பறித்துக் கொண்டிருக்கிறது
பரட்டைத்தலை நடைபாதைக் குழந்தை,

இளைகளசைந்த சலனத்தில்
கருத்துத் தட்டையான,
பச்சைக் கிளியொன்று
பதறியுயரப் பறக்க
பயந்த அணிலொன்று கிளைதாவ,
கருத்துத் தட்டையான
கனிகளிலொன்று
நகர்ந்து நிறம்மாறி
சிவந்துருண்டு
கிளைகளுக்கிடையேயான
ஒளிவெளியில் தொங்குகிறது
நிழல் மரத்தில்.

Series Navigation