அவன் இவள்…
கோகிலா சந்திரன்.

அவன் பார்வை – என்
வயதை சொன்னது..
அவன் முறுவல் – என்
வெட்கம் தந்தது..
அவன் தீண்டல் – என்
ஊனை தின்றது..
அவன் தேடல் – என்
உயிரை எடுத்தது…
அவன் ஊடல் – என்
கண்கள் பனித்தது..
அவன் காதல் – என்
உள்ளம் இனித்தது..
அவன் வீரம் – என்
வார்த்தை மௌனித்தது..
அவன் வேகம் – என்
வேட்கை தணித்தது..
அவன் ஆசை – என்
ஆடை களைந்தது..
அவன் விரல்கள் – என்
மேல் தேய்பிறை வரைந்தது..
அவன் சுவாசம் – என்
தேகம் சிலிர்த்தது..
அவன் தேகம் – என்
முத்தம் கேட்டது..
அவன் முத்தம் – என்
சித்தம் நின்றது..
அவன் முற்றுகை – என்
வாழ்வில் முடிவிலி…!!
– கோகிலா சந்திரன்.