This entry is in the series 20100212_Issue

நட்சத்திரவாசி


மழை பெய்யும் தார்சாலையில்
வெள்ளி முளைக்கின்றன
வேகம் ஈரமாகிப்போனது
அதன் மீது விழுகின்றன
வாகனத்தின் விளக்குகள்
தீர்க்க ஒளியெழுப்பி
அந்த பாய்ச்சலை உரசும்
இன்னொரு பாய்ச்சலிலும் இல்லையோ மழை
மழை ஒளியாய் பெய்கிறது
மழை மழையின் மீதே பெய்கிறது.

Series Navigation