This entry is in the series 20090326_Issue

எஸ்ஸார்சி



வாழும் போதே
விடுதலை கண்டவன்
நாளை பற்றி
எண்ணம் அழித்தோன்
இன்றென்பதுவே
இயல்பனெத்தெளிந்தோன்
காலம் கடந்தோன்
தூரம் கடந்தோன்
என்றுமிருப்போன்
இறப்பை வென்றோன்

அதுவும் வேண்டாம்
இதுவுமே வேண்டாம்
கைக்கொள் நீ
ஒப்பிலா ஆனந்தம்
தப்பாது வசமாகும்
பிரம்மமே சிந்தனையில்
குடிகொள்ளும் எப்போதும்
ஆணவம்
பேராசை
ஆத்திரம்
மொத்தமாய்த்தொலைய
அறிவாய் நீ யே அதுவென
நின் பிரக்ஞைத்தானே அது

அழியா உன்னதம்
பகுபடா பிரம்மம்
மனம் வாக்கு
தொடவொண்ணாத் தொலைவில்
ஞானக்கண் அறியும்
உள்ளுணர்வு துய்க்கும்
அமலம்
அற்புதம்
ஆனந்தம் கொணர் விடுதலை
நியே அது ஆவதறிவாய்
ஒ மாணவ
பிரம்மத்தை தியானி
இது நல்ல தருணம்
தொடங்கு நீ இக்கணம். — ஆனந்த பிந்து உபநிசத் 9-11
—————————————————————-

Series Navigation