சுதந்திர தின நாள்

This entry is part of 34 in the series 20070816_Issue

கோட்டை பிரபுநிஜங்களை நினைவுகளாய்
நிதமும் புதைத்து
பின்,
கருக்கலில் தேடி
அணிந்துகொண்டு
அங்கலாய்க்கும் காலையிலே
விழித்தபின் விடியல்நாள்
திருநாளென விளங்கியபின்
சுருக்காய் கிளம்பி
அதிவேக இரயிலின்
அணைப்புகளில் சிரம் சாய்த்து
அம்மாளிகையின் வாசலிலே
அடியெடுத்து வைத்தபோது
அன்னையின் மடிதனிலே
அதரம் பதித்த
அற்புத மகிழ்வினை நானும் கண்டேன்!.
சுற்றம் சூழ
எம் திருத்தாயின் கொடியினையே
வணங்கி, வாழ்த்தி
சாதனைச் சிகரங்களாய்
மனதின் நினைந்து
நண்பனின் கரம் கோர்த்து
வெளியில் வந்தபோது…,
உண்மைகள் கூட
கண நேர கனவாகிவிடுகிறது
ஆம்,
அயல் நாட்டில்
அன்றாடப்பணிகளைத் தொடர்ந்தபோது
மனம்
குற்ற உணர்வில் ஏனோ
குறுகுறுத்தது…!


kottaiprabhu@yahoo.com
:

Series Navigation