எங்கே நான் வாழ்ந்தாலும்

This entry is part of 35 in the series 20070308_Issue

சக்தி சக்திதாசன்


எங்கே நான் வாழ்ந்தாலும் …….

ஆலயத்தின் முன்னே
ஒளிரும் தீபம் போல்
வானில் உலாவரும்
நிலவின் ஒளி போல்
அன்னை நினைவுகளை
அழியாமல் தாங்கிடுவேன்

எங்கே நான் வாழ்ந்தாலும் ….

தவழ்ந்த மண்ணின் வாசத்தை
தாங்கிடும் பேழையாய்
தாய்த் தமிழ்மொழியின் பெருமையை
தரணியில் காத்திடும் பெட்டகமாவேன்

எங்கே நான் வாழ்ந்தாலும் ….

உள்ளத்தில் அன்பை விதைத்து
உறவினில் காற்றாய்க் கலந்து
உயிருடன் சங்கமித்த என்
இதயத்தரசியின் நினைவினில் வாழ்வேன்

எங்கே நான் வாழ்ந்தாலும் ….

இன்பத்தில் என்னுடன் சிரித்து
துன்பத்தில் கண்ணீரைப் பிரித்து
வரவையும் செலவையும் மறந்து
வாழ்ந்திட்ட நண்பனை மறவேன்

எங்கே நான் வாழ்ந்தாலும் ……

இருப்பதை மதித்து
இல்லாதவரை அணைத்து
இதயத்தை பூஜித்து
மனிதனாய் வாழ்ந்திடுவேன்

அன்புடன்
சக்தி


sathnel.sakthithasan@bt.com

Series Navigation