மணி

This entry is part [part not set] of 45 in the series 20030703_Issue

ஸ்ரீராம்


காலை அப்பாவின் பூஜை மணியோசை கேட்டு கண்விழித்து
என் அந்தரங்க அறையின் கடிகாரத்தில் மணி பார்த்து
அவசர அவசரமாக பல் துலக்கி, குளித்து முடித்து
அம்மாவின் பாசமிக்க காலை உணவை மணிக்குறித்து ஒதுக்கி
பஸ்ஸிர்க்கு மணியாகிவிட்டது எனக் கூறிக் விரைகையில்

சென்றடையும் தூரத்தில் என்னவளை தாங்கிக்கொண்டு விரைந்தது பேருந்து
நான் தான் கூறிக்கொள்கிறேன் என்னவள் என்று !!!!
ஒரு சில மணித்துளியில் தவற விட்டு விட்டோமே என மணி பார்க்க விழைந்த போது
அவசரத்தில் கைக்கடிகாரத்தை மறந்த ஞாபகம்………
அன்னையை கடிந்துக்கொண்டேன் சீக்கரம் எழுப்பாமல் விட்டதற்க்காக………

இது குறித்து தான் பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என கூறினார்களோ !!!!!
அருகில் இருந்தவரிடம் மணி என்ன என கேட்டறிந்தேன்
அவர் கூறியதை கேட்டவுடன் என் மனதில் கூறிக்கொண்டேன்……
ஆசிரியை கட்டாயம் மணிக்கண்டன் வகுப்புக்கு விடுமுறை என குறித்திருப்பார் என்று…….
slib@rediffmail.com

Series Navigation

ஸ்ரீராம்

ஸ்ரீராம்