வானத்தின் மழை
புஷ்பா கிறிஸ்ரி

துளித் துளியாய்
வானத்து மழை.
நிலத்தில், ஓடையில்
அருவியில், கடலில்
முற்றத்தில்..
வீட்டின் மேல்..
பாதையில்…
எங்கெல்லாமோ விழுகின்றன..
மனித ஜென்மங்களும்..
மண்மேல் பிறக்கின்றன
எங்கெல்லாம் பிறக்கின்றன
ஒவ்வொரு வீட்டில்
ஏழையாய், ஆண்டியாய்,
அரசனாய், அமைச்சனாய்
படித்தவனாய், பாமரனாய்
பண்பாளனாய்,
இன்னும் எத்தனை விதமாய்
மனிதம் பிறக்கிறது..
மழைத்துளி மழைத்துளியாய்
இருக்கும் போது..
நீரை விட மேன்மையான
மனிதத்தில் மட்டும்
எத்தனை வேறுபாடுகள் ?
மதம், மொழி, இனம்
நிறம், சாதி, சம்பிரதாயங்களென்று
எத்தனை வித்தியாசங்கள்.
இது எப்படி நடந்தது,
இன்னும் எப்படி வந்தது,
pushpa_christy@yahoo.com