அழைப்புகளின் வழியே நிகழும் பயணங்கள்…

This entry is part [part not set] of 47 in the series 20090828_Issue

எஸ். அர்ஷியா


இரவில் வரும் அழைப்புகள், பயத்தையும் பதற்றத்தையும் தரக்கூடியதாய் அமைந்துவிடுகின்றன. மன அமைதியை அந்தநொடியிலேயே கிழித்துவீசிவிடும் அவ்வழைப்புகளின் ஒலியினூடே அஸ்திவாரம் தகர்வதுபோலவும்… கடலலைகள் கபளீகரம் செய்வதுபோலவும்… பிளிறலான பிம்பங்கள் உரு வெடுக்கின்றன. அடிமனசு இரும்புக்கட்டியாய்க் கனத்து, பரபரப்புச் சூழலிலிருந்து மீள்வதற்குள் சிலநிமிடங்கள் தொலைந்துவிடுகின்றன.

செல்போனின் நீள் சதுரமானத் திரையில், அக்காவின் படமும் எண்ணும் ஒளிர்ந்தது. கூடவே ‘அழைக்கிறார்…’ எனும் ஆங்கிலச் சொல், வந்து வந்து போனது. அவசியமில்லாமல் அக்கா தொடர்புகொள்ள மாட்டார். உடல்நலமில்லாத அண்ணனை, அக்காதான் பக்கத்திலிருந்து பார்த்துக் கொள்கிறார்.

தொலை அழைப்புகளின் வழியே வந்துசேரும் தகவல்கள், எதையும் தள்ளிப்போடுவதற்கான வாய்ப்புகளை நல்குவதில்லை. ‘மிஸ்டு கால்ல இருந்திருக் குமே?’ என்ற கேள்வியையும் அவை கூடவே வைத்திருக்கின்றன. இரவில் ஒலிக்காமல் இருப்பதற்கு, அவற்றை ‘ஸ்விட்ச் – ஆப்’ செய்வது, அதன் பயன்பாட்டை மறுப்பதற்கு ஒப்பாக இருந்துவிடுகிறது. அதற்கு வாங்காமலேயே இருந்துவிடலாம்.

இரவு பத்து மணிவரை, தம்பி அங்கேதான் இருந்தார். அண்ணனே அவரைக்கூப்பிட்டு, எச்சில் ஒழுகும்வாயால் மென்றுமுழுங்கி, ‘போய்ட்டு காலைல வா!’ என்று, பாதி சொல்லும் மீதி சைகையுமாய் அனுப்பிவைத்தார். தூரத்திலிருக்கும் தம்பி, இரவில் தனியாகப் போகவேண்டுமே எனும் கா¢சனம், அண்ணனுக்கு இருந்தது. இவரும் அரைமனசோடுதான் வீட்டிற்குத் திரும்பியிருந்தார்.

‘ஏதும் ஆகியிருக்குமோ?… போய்ச் சேந்துருப்பாரோ?’ அலைபாய்ந்த மனசுடன், வா¡¢ச் சுருட்டிக்கொண்டு எழுந்தார்.

எதிர்முனையில் பேசிய அக்கா, ‘கொஞ்சம் கெளம்பிவர்றியா, தம்பி?’ என்று மட்டும் தான் சொல்லியிருந்தார். அதற்குமேல் பேசவில்லை.

பரபரக்கும் நேரங்களில் யாருக்கும் இப்படித்தான் இருக்கும்போல. சொற்கள் தாமாகவே சுருங்கிக்கொள்கின்றன. அல்லது வெளிவராமல் பதுங்கிக்கொள்கின்றன. சொல்ல வந்ததை முழுசாகச் சொல்ல முடிவதில்லை. சொல்லப்பட்ட வார்த்தைகளுக்குப் பின்பான மெளனம், முழு வாழ்க்கையையும் நொடிகளில் அலசிப்பார்க்க வைத்துவிடுகிறது. அக்காவும் விதிவிலக்கில்லாமல் அப்படித்தான் பேசியிருந்தார். செல்போன், தனது ஒளிரலை அணைத்துக் கொண்டது.

அது தம்பிக்கு, கூடுதலாக வியர்வையை வரவழைத்தது. அக்காவுடன் இருக்கும் மற்றவர்களைத் தொடர்புகொள்ள எண்களை அழுத்தியதில், ‘அவசரத்துக்கு அண்டாக்குள்ளயே கை போகாது!’ என்பதுபோல, அது யாரோ ஒருவா¢ன் நடுராத்தி¡¢த் தூக்கத்தைக் கெடுத்துவைத்தது. அங்கிருந்து சடவுகள் வந்தன. திகைத்துப்போனவர், தவறான இணைப்புத் தொடர்பை ‘சட்’டென்று துண்டிக்க முடியாமல், ‘மன்னிச்சுக்குங்க’ என்று கெஞ்சலாய் மன்றாடினார். மனம் சஞ்சலித்தது. அதனூடேயே, சா¢யான எண்களை ஒவ்வொன்றாக அழுத்தி, அங்கிருக்கும் நிலைமையை ஜாடைமாடையாக விசா ¡¢த்தார். கிடைத்த பதில், நிம்மதியைத் தந்தது. பெருமூச்சுடன் கண்களை மூடிக்கொண்டு, இறைவனைத் துதித்துக் கொண்டார். என்றாலும், ‘கடைசிப்பால் ஊற்ற நம்மைக் கூப்பிடுகிறார்களோ..?’. தடுமாற்றமும், நடுக்கமுமாகத்தான் கிளம்பிப்போனார்.

தம்பி வந்துசேர்ந்தபோது, அவருடன் பிறந்த மற்ற உடன்பிறப்புகளெல்லாம் அங்கே இருந்தார்கள். தம்பியைக் கண்டதும், ‘ஒன்னியப் பாக்கணும்ன்னு ரொம்ப நேரமா வாசல்லயே கண்ணை வெச்சுருந்தாரு!’ என்றார்கள்.

சூழலில் இறுக்கம் கனத்துப் பரவி, எந்நேரமும் அது வெடித்துச் சிதறும் அபாயம், அங்கிருந்த முகங்களில் தேங்கியிருந்தது. தி¡¢யில் தீ மூளக்கூடிய தருணம் உருவாகியிருக்கவில்லை.

காலம் எழுதிவிட்டுப்போன பிழிந்தத் துணியின் சுருக்கங்களாய், அவர் உடம்பு துவண்டுகிடந்தது. கண்கள் மூடியிருந்தன.

பக்கத்தில்போய் உட்கார்ந்த தம்பி, ‘அண்ணே!’ என்றார். ஆழக்கிளம்பிய குரலிலிருந்த தவிப்பு, சூழலின் இறுக்கத்தை உடைத்தது. ஒருமரத்துப் பறவைகள் நள்ளிரவில் ஒரேநேரத்தில் எழுப்பும் அதிர்வுதரும் பன்முகக் குரலாக அது, அத்தனைபேரையும் தடுமாறச் செய்தது. இத்தனைநேரமும் நில வியிருந்த அமைதி குலைந்து, புதிய அலை சுற்றியிருந்தவர்களிடமிருந்து கேவல்களாய்க் கிளம்பின.

தம்பியின் குரல் அன்னியோன்னியமானது. வார்த்தையையும் இசையையும் பி¡¢த்தெடுப்பதுபோல ஒலிக்கலவையிலிருந்து தனித்துக்கேட்ட குரலில் கண்மணிகளின் அசைவும், இமைகள் பி¡¢யச் சிரமப்படுவதும் தொ¢ந்தது. கண் திறப்பதற்கானப் போராட்டம் கண்மணிகளுக்கும் இமைகளுக்குமாய்த் தொடர்ந்தது. போராட்டத்தின் முடிவாய் இப்போது, இமைகளைக் கீறிக்கொண்டு கண்ணீர் வெளியேறியது. போராட்டத்தை அவர் கைவிடவில்லை. நெடும்முயற்சிக்குப்பின் கண்களை மெல்லத் திறந்தார்.

இரவுக்குப்பின் பேச்சு முழுவதுமாய்த் தவறிப்போயிருந்தது. பேசும்நிலையில் இல்லையென்றாலும், உடம்பும் அரைகுறையாய்த் திறந்தக் கண்களும் பேசின. ‘வந்துட்டியா?’ என்பதுபோல தலையசைந்தது. உதடுகள் துடித்துத் தணிந்தன. தம்பி உட்கார்ந்திருந்த பக்கமாய், தலை கடின முயற்சியுடன் திரும்பிக்கொண்டது. பாதிக்கும் கீழாகத் திறந்திருந்த கண்களின் வழியே, தம்பியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். கண்மணிகள் அசைவற்று அங்கேயே நிலைக்குத்தியிருந்தன. வேறு ஒலி எதுவும் இல்லை. கேவல்கள் தொலைந்து, அந்தகார நிசப்தம் அந்த இடத்தைக் கைப்பற்றி இருந்தது. அறையின் குழல்விளக்கும் வெளிச்சமிழந்ததுபோல மெல்லிய இருள் எங்கும் போர்த்திக் கிடந்தது.

அண்ணனின் கைகள் நடுக்கமாய்ப் பரவி, எதையோ தேடின.

‘என்னண்ணே வேணும்?’ அலைந்த கையைப் பற்றிக்கொண்டு தம்பி கேட்டார். அவர் குரலில் பிசிறு இருந்தது.

தம்பியின் கையை அவர், அழுத்தமாகப் பிடிக்க முயற்சிப்பது தொ¢ந்தது. அதில் ஏதோ சங்கதி இருப்பதும் தொ¢ந்தது. தம்பி அதைப் பு¡¢ந்துகொள்ள முயற்சித்து, தன் அரவணைப்பை கை அழுத்தத்தால் கூட்டினார். அண்ணன் என்ன சொல்ல விரும்புகிறார் என்பது தொ¢ய வரவில்லை. கை சில்லிடத் துவங்கியிருந்தது. சில நொடிகளில், தேடிய எதுவோ கிடைத்துவிட்டதுபோல, அவர் முகத்தில் நிம்மதி தொ¢ந்தது. ஆனால் எதைத் தேடினார் என்பது அங்கிருந்த எவருக்குமே பு¡¢படவில்லை.

·
அண்ணன் – தம்பி உறவையும் பாசத்தையும்தாண்டி, அவர்களுக்கிடையிலான வயசுவித்தியாசமே புதியதொரு பிணைப்பை உருவாக்கியிருந்தது. அதை இன்னதென்று அறுதியிட்டுக் கூற முடியவில்லை. நட்பைத்தாண்டியும் வேறென்னவோ இருக்கிறது. இத்தனை நீண்டகாலம் இருவருக்கிடையிலும் சின்னஅளவிலான கிலேசமோ, வருத்தமோ, முகச்சுழிப்போ வந்தில்லை என்பது ஊராருக்கு ஆச்சா¢யத்தையே தந்திருந்தது. ஊரா¡¢ன் ஆச்சா¢யம், இவர்களுக்கு ஆச்சா¢யமாக இருந்தது.

பிற குடும்பச் சண்டைகளின்போது, இந்த அண்ணன் – தம்பி உதாரணம் காட்டப்பட்டு, அதற்குக் கொஞ்சங்கூட சம்பந்தமில்லாத இவர்கள், சண்டைக் காரர்களின் வாயில்சிக்கி, அரைபட்டுச் சீரழிவார்கள்.

அண்ணனின் வயது உத்தேசமானது தான். அவர் பிறந்தபோது வெள்ளைக்காரன் ஆட்சியில் இருந்தான். உள்ளூர் ஆயா ஒருத்தி தொப்பூள்க் கொடி அறுத்து, பிரசவம் பார்த்துவிட்டுப் போனாள். அதனால் தேதி குறித்து வைக்கப்படவில்லை. அப்போது அது, பொ¢ய விஷயமாகவும் படவில்லை. எப்போதாவது தேவைப்படும்போது, அவர்களின் ஆத்தாக்கா¡¢, ‘கருப்பி(curfew)ஆர்டர் போட்டான்ல… அன்னிக்குப் பெறந்தான்’ என்று, இந்தியா சுதந்திரம்பெற்ற நாளைப்போல சொல்லி வைப்பாள்.

ஆனால் தம்பி பிறந்தபோது, இந்தியா சுதந்திரம் பெற்றிருந்தது. முனிச்சாலையில் ரோட்டுமேலேயே பேறுகால ஆஸ்பத்தி¡¢ கட்டப்பட்டிருந்தது. பிள்ளை பெற்றுக்கொள்ள வருபவர்களுக்கு பாலும் ரொட்டியும் கொடுத்தார்கள். என்னவோ, அவர்கள் வீ ட்டுப்பெண்ணுக்குப் பிரசவம்போலவே அங்கிருந்த மருத்துவர்களும் ஆயாக்களும் பார்த்துக்கொண்டார்கள். தம்பிக்கு, ‘முன்சிபால்டி’ ஆஸ்பத்தி¡¢யில் பிறந்ததேதி பதியப்பட்டிருந்தது. அதை வைத்துப் பார்க்கும்போது, குத்துமதிப்பாக இரண்டுபேருக்குமிடையில் இருபதுவயசு வித்தியாசமிருக்கலாம்.

அண்ணனுக்கு வேலை என்று பொ¢தாக ஒன்றும்இல்லை. இருந்த கொஞ்சநஞ்ச நிலத்தில் விவசாயம் பார்த்தார். நெல்லுமண்டிக்குப் போனார். உரக் கடைக்குப் போனார். ஆளில்லாதபோது அவரே தென்னை மரம் ஏறினார். அப்படி ஒருநாள் மரமேறிக் காய்ப்பறித்து கீழேபோட்டபோது, அது மட்டையிலேயே மாட்டிக்கொண்டது. மரத்தில் உட்கார்ந்தபடியே அதைக் காலால் தள்ளிவிட்டபோது, காய் நழுவி… காயுடன் சேர்ந்து அவரும் நழுவிக் கீழே விழுந்துவிட்டார். வலதுகால் ஒடிந்து, அதைச் சீர் பண்ண முடியவில்லை. அதனாலேயே அவர், கல்யாணம் காட்சியெல்லாம் வேண்டாம் என்றுவிட்டார்.

‘அண்ணே… நீங்க வீட்டுக்கு மூத்தவங்க. ஒங்களுக்குப் பின்னாடி பெறந்த எங்க எல்லாத்துக்கும் கல்யாணம் காட்சின்னு செஞ்சுப் பாத்துட்டீங்க. ஒங்களுக்குன்னு ஒருபிடிப்பு வேணாமாண்ணே? இதெல்லாம் ஒரு குறையா? இடையில வந்ததுதானே, இது?. எல்லாத்தையும் சொல்லியே பொண்ணு பாப்போம். ஒங்கக்குணத்துக்கு, வர்றவங்க தாங்குவாங்கண்ணே. ஒங்கக்குணம் முன்னாடி இந்தக்குறை பெருசே இல்லண்ணே’ என்று தம்பி பலமுறை சொல்லிப் பார்த்துவிட்டார்.

எதுவும் அவா¢டம் எடுபடவில்லை. அந்த முடிவை அவர் பிடிவாதமாகக் காட்டிக் கொள்ளவில்லை. வேண்டாமே என்று தட்டிக் கழித்தார். அதை மற்றவர்கள் சுய பச்சாதாபம் என்றார்கள். சிலர் ‘கால் ஒடிஞ்சுப் போச்சுல்லா, அந்த பயம்’ என்றார்கள். அத்துடன் அந்தப்பேச்சு நின்றுபோய்விட்டது.
எட்டுப் பிள்ளைகளைப் பெற்ற ஆத்தாக்கா¡¢, கொஞ்சநாள் அழுதுவிட்டு ஓய்ந்துவிட்டாள்.

தம்பிக்கு ‘கெவருமெண்ட்டு’ வேலைக் கிடைத்து, கல்யாணமெல்லாம் செய்துகொண்டு, இரண்டு பிள்ளைகளுக்கு அப்பனாகிவிட்டார். அந்தக் குழந் தைகள் அண்ணனை ‘அப்பா’ என்றே அழைத்தன. அவருடன்தான் அதிகநேரம் இருந்தன. தம்பி பொண்டாட்டியும் அவரை ஒரு ‘பெறப்புப்’ போலவே பார்த்துக் கொண்டாள்.

மற்ற பிறப்புகளெல்லாம் கல்யாணமாகி, பக்கத்திலேயே தனித்தனியாக இருந்தார்கள்.

தம்பிக்கு அரசாங்கத்தில் பதவி உயர்வு ஏறஏற, வீட்டுக்கு வரும் ஆள்போக்குவரத்தும் அதிகமானது. வீட்டில் இடநெருக்கடியும் அதிகமானது. அது பூர்வீக வீடு. என்றபோதும் வசதிக்குறைவாக இருந்ததால், புறநகா¢ல் பொ¢ய அளவில் வீடுகட்டிவிட்டார். அண்ணனை ‘அங்கே வந்துருங்க’ என்று கூப்பிட்டபோது, ‘பூர்வீகத்தை விட்டுவர விருப்பமில்லை என்றும், உறவுகளெல்லாம் சுற்றிச்சுற்றியே இருப்பதால், தான் இங்கேயே இருக்க விருப்பப் படுவதாகவும்’, தம்பி வருத்தப்படாத வகையில் சொல்லிவிட்டார்.

அண்ணனுக்கும் தம்பிக்கும் வீடுகள் இருக்கும் இடத்தினால் மட்டுமே தூரம் அதிகமானதே தவிர, மனதால் அவர்கள் மேலும் நெருங்கிப் போனார்கள்.

‘ஒன்வீடு எங்கேப்பா இருக்கு? அட்ரஸ் சொல்லு. வீட்டுக்கு வந்து பத்தி¡¢க்கை வைக்கிறோம்’ என்று உறவுக்காரர்கள் உள்ளுக்குள் சலித்துக்கொண்டு, வெளியே மிட்டாய்ப் பேச்சுப் பேசும்போது, ‘அண்ணன்ட்ட சொல்லிருங்க. நான் வந்துருவேன்!’ என்று, உறவுக்காரர்களின் வீட்டு விசேஷங்களுக்கு போய்வருவதை தம்பி வழக்கமாக்கிக் கொண்டார். ‘என்ட்டக் குடுங்க. நான் சொல்லிக்குறேன்!’ என்று, அண்ணனும் அழைப்புகளை ஏற்றுக்கொள்வார்.

பிறப்பால் அவர் அண்ணன் என்றாலும், தம்பியை ஒருபிள்ளைப் போலத்தான் பார்த்துக் கொண்டார். வயசு அதற்குக் கை கொடுத்திருந்தது.

தம்பியின் கையைப் பிடித்தபடி மறுபடியும் கண்களை மூடிக்கொண்டார். சூழ்ந்துநின்ற உறவுகள், அப்படியப்படியே கண் அசந்தன.

மூன்று மணி வாக்கில் அண்ணன் மறுபடியும் சிரமப்பட்டுக் கண் திறந்தார். தம்பி விழித்தபடியே உட்கார்ந்திருந்தார். அவரது கையிலிருந்து தனது கையை விடுவித்துக்கொண்ட அண்ணன், ‘நீ தூங்கு!’ என்பதுபோல சைகை செய்தார்.

“நாந்தூங்குறேண்ணே… இப்ப நீங்க எப்டி உணர்றீங்க?”

கோழித் தூக்கத்திலிருந்த மற்றவர்கள், குரல்கேட்டு விழித்துக் கொண்டனர்.

“நான் நல்லாருக்கேன்!” என்பதுபோல விழிகளை மேலேற்றிக் காட்டினார்.

மறுபடியும் அவரவர்கள், அதிகாலைத் தூக்கத்தில் சுருளத் துவங்கினர். தம்பிக்கும் கண்கள் சுழற்றின.

தன் மீது அண்ணன் வைத்திருக்கும் பாசத்தின் நினைவோட்டமும், அவர் பி¡¢ந்துவிடுவாரோ எனும் கவலையுமாக இருந்தத் தம்பி, அரைச் சொக்கில் ஊடாடினார்.
·

அது ஒரு பசுந் தோட்டம். எங்கும் நிழல்தரும் மரங்கள் படர்ந்திருந்தன. இனிய மலர்கள் பூத்துக்குலுங்கும் மணம், காற்றில் அலையாடியது. மரத்திலிருந்து உதிர்ந்த இலைகள், அப்பகுதி முழுவதையும் மெத்தையாக்கியிருந்தன. கைக்கெட்டும் உயரத்தில், சுவைமிகு பழங்கள் தொங்கிக் கொண்டிருந் தன. புளிப்பு இல்லாத பழங்களை மட்டுமே காலம்முழுவதும் நல்கும் கொடிகளைக் கொண்ட ஓர் திராட்சைத் தோட்டமும் அங்கிருந்தது. கொத்துகளாய் காய்த்துத் தள்ளும் போ¢ச்சை மரங்கள் ஒருபுறமாய் அடர்ந்திருந்தன. அந்த இடமே ரம்மியம் நிறைந்ததாக இருந்தது.

மாணிக்கப் பரல்கள் உருண்டு ஓடுவதைப்போல ஓடியாடி, குற்றேவல்கள் செய்ய அழகிய சிறுவர்கள் காத்திருந்தனர். யாரேனும் பணி ஏவ மாட்டார்களா எனும் எதிர்பார்ப்பு, அவர்களின் கண்களில் ஒளிர்ந்துகொண்டே இருந்தது.

மரங்களின் நிழலில், ஆங்காங்கே அழகாக வடிவமைக்கப்பட்ட சாய்வு நாற்காலிகள். அதில், பல வயது ஆண்கள் சயனித்திருந்தனர். அவர்களின் உடம்பில் வெள்ளியிலான ஆபரணங்கள். வேலைப்பாடும் கலைநுணுக்கமும் கொண்ட அவற்றை அணிந்திருந்த சிலர், கண்களை மூடி யோசித்தபடி இருந்தனர். சிலர், அந்தப் பகுதியை ரசித்தபடி இருந்தனர். அவர்கள் எல்லோருமே முக மலர்ச்சியுடன் காணப்பட்டனர். சுக வாழ்வின் பொலிவு அவர் களிடம் தொ¢ந்தது.

எங்கும் அமைதி நிலவியது. சயனித்திருந்த ஆண்களுக்குப் பக்கத்தில், அழகிய சம வயதுடைய பெண்கள் இருந்தனர். ஆண்களுக்குச் சேவகம் செய்யக் காத்திருப்பதுபோல, அவர்களிடம் ஆவல் தொ¢ந்தது.

ஒரு ஆண், தன்னருகில் நின்றிருந்த அழகிய பெண்ணின் இடுப்பில் கைவளைத்து அணைத்திருந்தான். அந்தப்பெண் மிகவும் இணக்கமாக, அவன் கீழ் உதட்டை தன் உதடுகளால் ஆழக் கவ்வியிருந்தாள். அவர்கள் மெய் மறந்திருந்தனர். அவன் கையில் ஒரு மதுக்கோப்பையும் இருந்தது. கஸ்தூ¡¢ முத்திரைப் பதிக்கப்பட்ட அந்தக் கோப்பையில் ‘தஸ்னீம்’ நீர் கலக்கப்பட்ட மது இருந்தது. அவள் உதடுகளால் இயங்கியபோது, அவன் கையிலிருந்த மதுக்கோப்பை தளும்பிச் சிந்தியது. மதுவைக் காட்டிலும் அவள் உதட்டுச் சுவைப்பில் அவன் லயித்திருந்தான்.

சற்றுத்தள்ளி, அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய கட்டில்கள் இருந்தன. எழிலான வி¡¢ப்புகள் வி¡¢க்கப்பட்டு, அதன்மேல் உறைகள் போர்த்தப்பட்ட தலையணைகள் வைக்கப்பட்டிருந்தன. ‘ஸல்ஸபீல்’ நீரூற்றின் ஒலியைத்தவிர, அங்கு வீணான சத்தம் எதுவும் கேட்கவில்லை.

அப்போது இரண்டுபேர் அங்கே வந்தார்கள். அவர்களில் ஒருவர், கைநிறைய ஓலைகள் வைத்திருந்தார். அவர்களின் வருகை, புதுக்கோலத்தைப் போட் டது போல, அந்த இடத்தைப் பளபளப்பாக்கியது. அவர்கள் உயர்ரக ஆடைகள் அணிந்திருந்தார்கள். அத்தரும் ஜவ்வாதும் கலந்த மணம் அவர்களிடமிருந்து வீசியது.

குற்றேவல்கள் செய்யும் அழகிய சிறுவர்கள் அவர்களை, ‘இறைவனால் அனுப்பிவைக்கப்பட்ட வானவர்களே…வாருங்கள்…’ என்று விளித்து வணக்கம் செய்தார்கள். வானவர்களின் முகத்தில் புன்சி¡¢ப்பு அரும்பியது. சிறுவர்களின் முகமனை ஏற்றுக்கொண்டவர்களாக அவர்கள் தலையசைத்தார்கள்.

சாய்வு நாற்காலிகளில் சயனித்திருந்த ஒவ்வொரு ஆணையும்நோக்கிச் சென்ற வானவர்கள், அழகாக வடிவமைக்கப்பட்ட ஓலையொன்றை அவர்களின் வலதுகையில் கொடுத்தார்கள். ‘நீங்கள் புண்ணியம் செய்தவர்கள்’ என்று வாழ்த்தினார்கள். ‘பூமியில் நீங்கள் செய்த புண்ணியத்தின் பலனை இங்கே இன்பமாக அனுபவியுங்கள்’ என்றார்கள்.

சாய்வு நாற்காலியில் சயனித்திருந்த அத்தனை பேரையும் வாழ்த்தி ஓலைகளைக் கொடுத்தபின்பும், அவர்கள் கையில் மீதியாக நிறைய ஓலைகள் இருந்தன. அவை அழகானவைகளாக இருக்கவில்லை.

ஓலைகளுடன் அவர்கள் அந்த இடத்தைவிட்டு அகன்றபோது, குற்றேவல் செய்யும் சிறுவர்கள் பேசிக்கொண்டார்கள். ‘பூமியில் பாவம் செய்தவர் களுக்கு நரக ஓலைக் கொடுக்கப் போகிறார்கள். இன்னும் கொஞ்சநேரத்தில் கசையடி ஒலியும், மரண ஓலமும் கேட்கப் போகிறது. இது, புண்ணிய லோகம். இங்கே அதற்கெல்லாம் இடமில்லை. இங்கிருப்பவர்கள் வானவர்கள் சொன்னதுபோல புண்ணியவான்கள்தான். பூமியில் வாழ்ந்ததைக் காட்டிலும் சிறப்பான வாழ்க்கை, இங்கே அவர்களுக்குக் கிடைக்கிறது’.

அந்தச் சிறுவர்கள் பேசிக்கொண்டது, தம்பியின் காதில் விழுந்தது. அப்போது அந்த சிறுவர்களில் ஒருவன், தன்னைப் பார்த்துக் கையசைத்த முதியவர் ஒருவரை நோக்கி ஓடினா¡ன். ‘என்னவேண்டும் பொ¢யவரே?’

அந்தப் பொ¢யவரை எங்கோ பார்த்ததுபோல தம்பிக்குத் தொ¢ந்தது. கூர்ந்து நோக்கியபோது அவர், அவரது அண்ணனாக இருந்தார். ‘அண்ணே…’ என்று மகிழ்ச்சியில் கூவினார்.

அரைத் தூக்கத்திலிருந்த அத்தனைபேரும் அலமாந்து கண்விழித்தார்கள். ‘தம்பி ஏன் இப்படிக் கத்தினார்?’ என்று ஆச்சா¢யத்தோடு பார்த்தார்கள். சத்தம்கேட்டு விழித்துக்கொண்ட அண்ணனும் அரைக்கண்ணில் தம்பியைப் பார்த்தார்.

தம்பியின் அருகில் வந்த அக்கா, ‘எவ்வள நேரந்தான் இப்டியே ஒக்காந்துருப்ப? போய் கொஞ்சநேரம் ஓய்வு எடுத்துட்டு, அப்புறமா வா. பாக்கணும்ன்னு அண்ணன் சொன்னதுனாலத்தான் கூப்புட்டேன். நாங்க இருக்கோம்ல்ல. பாத்துக்குறோம்!’ என்றார்.

படுத்தால் கொஞ்சம் நன்றாக இருக்கும்போல பட்டது. வீட்டிற்குக் கிளம்பிவிட்டார்.

வழிநெடுகிலும் அண்ணனைச் சொர்க்கத்தில் கண்ட காட்சி, மீண்டும் மீண்டும் படமாய்வி¡¢ந்து சிலிர்ப்பூட்டியது. சிலிர்ப்புடனே படுக்கையில் சா¢ந்தார். இமைகள் உடனடியாய் அழுத்தத் தூங்கிப்போனார்.
·

விடிந்து வெகுநேரமாகியும் படுக்கையிலிருந்து எழுந்தி¡¢க்காதத் தம்பியை, அவரது மூத்த மகன்தான் உசுப்பினான். அவர் அசைவதாகக் காணோம். சந்தேகமாய்க் குனிந்து பார்த்தவன், இயக்கமற்றிருக்கும் அவரைக்கண்டு முதலில் திகைத்துப் போனா¡ன். அப்புறமாய் மூக்கில் கைவைத்துப் பார்த்தான். மூச்சு நின்றுபோயிருந்தது.

அண்ணனுக்குப் பக்கத்திலிருந்தக் கூட்டம், இப்போது தம்பியின் வீட்டில் கூடியிருந்தது.

தம்பியின் மரணச் செய்தியை, ‘அண்ணனிடம் சொல்வதா… வேண்டாமா..?’ எனும் ஆலோசனை அங்கு நடந்தது.

arshiyaas@rediffmail.com

Series Navigation

எஸ். அர்ஷியா

எஸ். அர்ஷியா