இடைத்தேர்தல்
யூசுப் ராவுத்தர் ரஜித்

அறுவை சிகிச்சைக்கு முன்
அவசியத் தேவை
இரத்தச் சோதனைகள்
பொதுத் தேர்தலுக்குமுன்
இடைத் தேர்தல்கள்தான்
கட்சிகளுக்கான
இரத்தச் சோதனைகள்
விடை திருத்தும் ஆசிரியர்
விடையையே
திருத்துகிறாராம்
கோழிக் குஞ்சுகளாம் இவர்கள்
நீதி கிடைக்காதாம்
கருடனிடம்
எனவே
புறக்கணிக்கிறார்களாம்
இடைத் தேர்தலை
உச்ச மன்றங்களில்
சொல்ல வேண்டியதை
உடுக்கடித்துச் சொல்கிறார்கள்
`புறக்கணிப்பு` என்று
மக்களாட்சியின் தலை
தேர்தல்கள்
இடைத்தேர்தல்களை
இன்று நீங்கள்
புறக்கணித்தால்
பொதுத் தேர்தல்கள்
நாளை உங்களைப்
புறக்கணிக்கும்
எச்சரிக்கையாக அல்ல
ஒரு செய்தியாகச்
சொல்கிறோம்
யூசுப் ராவுத்தர் ரஜித்
rajid_ahamed@yahoo.com.sg