40 சீனில் என்ன செய்யமுடியும் ?

This entry is part [part not set] of 42 in the series 20030828_Issue

சூரியா


தமிழ் சினிமாவின் சிக்கல்களினைப்பற்றிய பரிமளம் அவர்களின் கட்டுரை நன்றாக எழுதபட்டிருந்தது. ஆனால் சினிமாக்காரர்களை கோமாளிகளோ ஒன்றும் அறியாதவர்களோ ஆக காட்டக் கூடிய பார்வை பொதுவாக அறிவுஜீவிகளிடம் இருக்கிறது. அது சரியல்ல. சினிமாக்காரர்கள் ஃபீட்பேக் முறையின் அடிப்படையில் தங்கள் கருத்துக்களை தொடர்ச்சியாக உருவாக்கிக் கொண்டிருப்பவர்கள். அதற்கு ஒருவகையான அனுபவமுக்கியத்துவம் கண்டிப்பாக உண்டு. அறிவுஜீவிகள் தங்கள் அறைக்குள் உட்கார்ந்து செய்யும் ஊகங்களைவிட அவை அதிகமான விஞ்ஞானபூர்வமானவையே.

கேரளத்தைப்பற்றை சினிமாவிலேபேசும்போது அங்கே ஸ்டாண்டேர்ட் ஆடியன்ஸ் என்பார்கள் . அதாவது கேரளத்தில் மொத்த கேரளா மக்களுக்கும் பொதுவாக பல விசயங்கள் உண்டு என்று பொருள். மிகப்பெரும்பாலானவர்கள் கல்வி கற்றவர்கள். மிகப்பெரும்பாலானவர்கள் செய்தித்தாள்படிப்பவர்கள் .மிகப்பெரும்பாலானவர்கள் நடுத்தரவற்கத்தில் சேர்ந்தவர்கள். இம்மாதிரி இருப்பது டார்கெட் ஆடியன்ஸ் எது என்று தீர்மானிக்க மிக உதவியானது. நல்ல படங்களுக்கு இது மிக அத்தியாவஸியமாக உள்ள விசயம்.

தமிழ்நாட்டில் உள்ளது சிதறிய ஆடியன்ஸ். சினிமாவிலே நீண்டகால அனுபவம் காரணமாக ஏ, பி, சி செண்டர்கள் என்று பிரித்திருக்கிறார்கள். இந்தப்பிரிவினையே முப்பது வருடம் பழமையானது. பல இடங்களின் நிலைமையில் மாற்றம் வந்துவிட்டது . யார் நம் படங்களைப் பார்க்கிறார்கள் என்றதெளிவினை உருவாக்கமுடியாமல் குருட்டடியாக படம் எடுக்கிறார்கள். கீழ்நெல்லை, குமரி , தஞ்சை திருச்சி போன்ற செழிப்பான பகுதிகளில் உள்ள மனநிலையை ராமநாதபுரம் கட்லூர் முதலிய வரண்ட பகுதிகளில் காணமுடியாது. கல்வி அறிவு மிகுந்தபகுதிகள் உண்டு. கல்வியறிவே இல்லாத பகுதிகள் உண்டு. அரசியல்விழிப்புள்ள இடங்கள் உண்டு இல்லாத இடங்கள் உண்டு. தமிழ்நாடு மிகவும் சிிக்கலானதும் உள்வேறுபாடுகள் அதிகமானதுமான நிலப்பரப்பு. ஒரு ஓடின படத்தில்கூட ஒவ்வொரு இடத்துக்கு ஒவ்வொரு சீந்தான் அப்பீல் ஆகியிருக்கும்.

ஆதலால் எல்லா ரசனைக்கும் பொருந்தும்படி படம் எடுக்கவெண்டியுள்ளது .படத்தின் நுட்பங்களை ஊகிக்கும் திறமைகொண்டவர்கள், உடைத்து திறந்து சொன்னால்மட்டுமே புரிந்துகொள்ளுபவர்கள் சும்மாசினிமாவை வேடிக்கைபார்ப்பவர்கள் ஆழமாக கூர்ந்து பார்ப்பவர்கள் அனைவருக்கும் பிடிக்கும்படி எடுக்கவேண்டும். சர்வேக்களில் ஏறத்தாழ 18 சதம் சினிமாபார்ப்பவர்களுக்கு எடிட்டிங்கே புரிவதில்லை, சினிமாக்கதையை அவர்களால் புரிந்துகொள்ளவே முடிய்வைல்லை என்று கண்டது தெரியுமா ? அவர்களுக்கு சினிமா ஒரு விளையாட்டு மாதிரிதான். கதையை பிறகே கேட்டு தெரிந்துகொள்வார்கள். அல்லது தங்கள் விருப்பபடி புரிந்துகொள்வார்கள். இவர்களுக்காகவே ஒருசில கதைகள் மட்டும் மீண்டும் மீண்டும் எடுக்கபடுகிரது. சில வருடங்களுக்குமுன் ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங் என்ற மலையாள சூப்பர் ஹிட் படத்தை தமிழில் எடுத்தார்கள். டெலிஃபோன் அட்ரஸ் மாறுவதனால் நிகழும் கதை. டெலி ஃபோன் டைரக்டரியே பார்க்காத வாசகர்களுக்கு எதுவுமே புரியவில்லை என்பதனால்தான் படம் ஃப்ளாப் என்று சர்வெ காட்டியது .

ஆகவே நாலுபாட்டு, இரு ஃபைட், 20 நிமிடம் காமெடி டிராக் என்று படம் பிளான் செய்யப்படுகிறது . ஒரு திரைக்கதையில் 60 சீன் வரை இருக்கலாம். [2 நிமிடம் சராசரியாக] ஆனால் மேலே சொன்னதெல்லாம் போக 45 சீன்தான் கிடைக்கும். அதேசமயம் கதையில் எதையுமே குறிப்பால் உணர்த்த முடியது . சொல்லி ,காட்டவேண்டும். கொலாஜ் போன்ற உத்திகளை பாட்டுக்குமட்டுமே காட்டமுடியும். எப்படி திரைக்கதையை எழுதுவது ? சீரான நேரான சின்ன கதையும் சொல்லமுடியாது. துக்கம், நெகிழ்ச்சி, வன்முறை காதல் எல்லாம் தேவை. எந்த கதையாக் இருந்தாலும் குடும்பத்துக்குள் கொண்டுவந்தாகவேண்டும். குறைந்தது நான்கு திருப்பம் வேண்டும். சீன்கள் அரைநிமிட சீன்களாகவும் இருக்கமுடியாது, சூழல் தெளிவாக காட்டி , விஷயங்களை பேசி புரியவைக்கவேண்டும். டாக்டர் வந்து கண்ணாடியை கழற்றி உங்கள் பெண் பிழைப்பது கஷ்டம் என்று சொல்லவேண்டும்– ஐ சி யூ வை காட்டினால்போதாது.

ஆகவேதான் தமிழ் திரைக்கதையில் எதுவுமே படிப்படியாக நகர முடியாது. மெல்லமெல்ல மலர முடியாது.துப்பறிந்து விளக்கமுடியாது . கிளைமாக்ஸிலே வில்லனே நேர்டியாக வந்து கதாநாயகனை தன் இடத்துக்கு கூட்டிச் செல்வான். அங்கே சண்டை நடக்கும். கதைமுடியும். சமீபகாலமாக வில்லன் இடத்தை சொல்லி சவால் விடுவான். கதையின் மர்ம முடிச்சை கதாபாத்திரங்கள் ஒரே இடத்தில் கூடி பேசி அவிழ்ப்பார்கள். பிரச்சினைகளைபேசியே தீர்ப்பார்கள். புத்திசாலித்தனமாக்வும் யதார்த்தமாகவும் முடிச்சைபோட்டால் அதைவிட புத்திசாலித்தனமாகவும் யதார்த்தமாகவும் அதை அவிழ்க்கவேண்டும். அதுஇங்கே முடியாது. சம்ப்ரதாயமான அவிழ்ப்புதான் சாத்தியம். முக்கியமான ஒரு விஷயத்தை ரசிகன் மனதிலே ஆழப்பதியவைக்கவேண்டும். ஆனால் அதற்கு ஒரே ஒரு சீன் தான் தரமுடியும். என்ன செய்யமுடியும். அதை கதாநாயகனை ரசிகனை நோக்கி நேரடியா பேசவிட்டுவிடுவோம்.

நல்ல சினிமா எடுக்க முக்கியமான தேவை இப்போதுள்ள அவியல் வடிவத்தை தவிர்ப்பதுதான். அதை தவ்ர்க்கவேண்டுமானால் ரசிகர்களிடம் ஒரு ஸ்டாண்டேர்ட் இருக்கவேண்டும். தமிழகத்தின் இன்றைய அரசியல் பொருளாதார நிலையில் அது உடனே நடக்கக் கூடியதுமல்ல. அதுவரை இப்படித்தான் நடக்கும் . தற்செயலாக ஐந்த கம்பிவளையம் வழியாக ஒருவர் ஆக்ரோபேடிக்ஸ் செய்து வெற்றிபெற்று ஒரு பேட்டர்ன் உருவக்குவார். காதல்கோட்டை போல. மற்றவர்கள் அதையே மீண்டும் செய்வார்கள். நிறமும் உப்பும் இனிப்பும் ஏற்றி இறக்கி செய்வார்கள். வேறு வழி இல்லை.

இன்னும்நல்ல படம் வர ஒரு வழி உண்டு. ஸ்டேண்டேர்ட் ஆன ரசிகர்களுக்காக மட்டும் சின்ன செலவில் சின்னபடம் எடுக்கலாம். மலையாளத்தில் ஜெயராஜ்,லோகிததாஸ் போன்றவர்கள் 40 லட்சம் செலவில் படம் எடுக்கிரார்கள். அருமையன படங்கள். அவை வெற்றியும் அடைகின்றன.ஆனால் இங்கே அதுவும் நடக்காது, நம் ஆட்கள் ஓசியில் போலி விசிடாயிலே பார்த்துவிடுவார்கள். கடுமையாக ‘அழ்கியல் விமரிசனமும் ‘ எழுதுவார்கள்.

***

suurayaa@rediffmail.com

Series Navigation