108எண் வண்டி

This entry is part [part not set] of 29 in the series 20100502_Issue

வே பிச்சுமணி


பெருங்களத்தூர் நிலையத்தில்
தொடர்வண்டிக்காக காத்திருக்கையில்
நெடுஞ்சாலையில் 108எண் வண்டி
அபய சத்தம் எழுப்பியவாறு செல்ல
சாளரம் வழியாய் பார்வைசெல்ல
அடிப்பட்டவரின் முகம் தெரியவில்லை
மனது பதை பதைத்தது
யாரோ யாவரோ
பிழைத்து கொள்ள வேண்டுமென
மனம் வேண்டி கொண்டுதென சொன்னேன்
எங்கள் கல்லூரி பேரூந்தை
108 எண் வண்டி கடந்து செல்லுகையில்
நானும் அப்படி வேண்டி கொள்வேன்
என என் மகள்
108ன் அபய சத்தம்
முன் வழியுடன்
முன்பின் தெரியாதோரின்
வேண்டுதல்களையும்
வாங்கி கொண்டு தான்
உயிர் காக்கிறது

Series Navigation

வே பிச்சுமணி

வே பிச்சுமணி