மாயமான் விளையாட்டு…
செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

#
மகன் பிறப்பு குறித்து
நண்பன் ஒருவன்
உதிர்த்த வாசகம்:
“எப்படி இருக்கிறது
நீ படைத்த
கவிதை?”
வாகாய்க் கவிதை செய்ய
வார்த்தைகளோடு
வதைபடும்
மாயமான்
விளையாட்டுகளின்றி
இருக்கவேண்டுமே
இவன் வாழ்வாவது
என்றிருந்தது
எனக்கு.