This entry is in the series 20090122_Issue

ரஜித்


பலப்பங்கள் சேர்
நீதான் பணக்காரன்
என்று நினைத்தது பொய்

ஒலிம்பிக் சாதனை
ஒளிந்து குடிக்கும் பீடி
என்று நினைத்தது பொய்

விக்குவது கல்வி
கக்குவது தேர்வு
என்று நினைத்தது பொய்

முடியாத தொன்றில்லை
நடிகனாகு
என்று நினைத்தது பொய்

ராணுவ ஆட்சி வீடு
ஹிட்லர் அப்பா
என்று நினைத்தது பொய்

என்னைவிச் செல்லம்
என் தங்கையே அம்மாவுக்கு
என்று நினைத்தது பொய்

அறுவடை முடிந்தது
தேடலும் முடிந்தது
என்று நினைத்தது பொய்

எனக்கென்று மேடை
எனக்கென்று ரசிகர்கள்
அட இன்று நினைப்பதும் பொய்

சூனியத்தைத்தான்
வானமென்கிறோம்


rajid_ahamed@yahoo.com.sg

Series Navigation